Uncategorized

கமிஷன் வாங்குவது மட்டுமே கமிஷனருக்கு பணியா!?
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை உதாசீனப் படுத்தும் சேலம் மாநகராட்சி ஆணையர் !
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் மானியம் வெறும் அறிவிப்பு மட்டுமே தானா !?
முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா!?

கமிஷன் வாங்குவது மட்டுமே கமிஷனருக்கு பணியா!?
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை உதாசீனப் படுத்தும் சேலம் மாநகராட்சி ஆணையர்!
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் மானியம் வெறும் அறிவிப்பு மட்டுமே தானா !?
முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா!?


மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்து கொச்சைப்படுத்தும் வகையில் சேலம் மாநகராட்சி ஆணையர்

மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க முன்தொகையாக செலுத்த வேண்டிய 25 ஆயிரம், ஆவின் பொருள்கள் கொள்முதல் செய்ய மானியமாக 25 ஆயிரம் உள்பட மொத்தம் 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும்

சேலம் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து அதன் விவரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும்
விருப்ப முள்ளோர் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் மாற்றுத் திறனாளிகள் (மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம் )என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்
தனியார் தொழில் வளாகங்கள், மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமை அடிப்படையில் இடவசதி அளித்து அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய உதவலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம்( 12 மாதம்) நிறைவடைய இருக்கும் நிலையில் மக்களுக்கான பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிய வந்து கொண்டுள்ள நிலையில்


மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் சட்டசபையில் கூறியதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும்.
அதன்பின் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் பேசியபோது பொது மக்கள் நம் அனைவரையும் நம்பி இந்த ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.ஆகையால் அவர்களுடைய நம்பிக்கையை சிதைக்கும் விதத்தில் யாரும் செயல்படக் கூடாது என்றும் மாறாக செயல்பட்டால் அதைப் பார்த்துக்கொண்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்கு மாறாக ஆட்சிக்கும் கட்சிக்கும் இருக்கும் நற்பெயரைக் களங்கப் படுத்தும் நோக்கில் சேலம் மாநகராட்சி ஆணையர் செயலற்று இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

தற்போது உள்ள சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜ் கடந்த வருடம்
(16/ 06/2021 )பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிறிஸ்து ராஜ் IAS

ஆனால் பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகியும் இவருடைய செயல்பாடுகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எது எப்படியோ மாவட்ட ஆட்சியாளர் கூறியதை நம்பி ஆவின் பூத் வைப்பதற்கு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து உள்ள நிலையில் சேலம் ஆவின் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பூத் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியது.

ஆனால் ஆவின் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய அனுமதியை பெற்றுக் கொண்டு மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைக்க உள்ள இடத்திற்கு தடையில்லா சான்றிதழ் (NOC )(no objections certificate) வழங்காமல் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு 100 நபருக்கு அனுமதி வழங்குவார்கள் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று மாற்றுத் திறனாளிகளை உதாசீனப் படுத்தி வருகிறார் சேலம் மாநகராட்சி ஆணையர் .
இப்படி மாறி மாறி மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பு செய்வதோடு மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் செயல்படுவதாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக்குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரிக்க சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜ் அவரது அலுவலகத்துக்குச் சென்றால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடியாது என்றும் எனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை சந்தித்து கேட்டு தெரிந்துக் கொள்ளும் படி அவரது உதவியாளரிடம் சொன்னதாக ஆணையர் உதவியாளர் கூறினார் அதன்பின் அவரது தொலைபேசியில்
தொடர்பு கொண்ட போதும் ஒருமுறைகூட எடுத்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் எடுத்து பேசாமல் கல்நெஞ்சம் படைத்தவர் போல் சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் இருப்பதாகவும் சேலம் மாநகராட்சி கட்டிடம் தான் வெள்ளையாக உள்ளதாக மாநகராட்சி ஆணையரரின் மனம் வெள்ளையாக இல்லை என்றும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் புகார்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு புகார்தாரருக்கு 15 தினங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் மதிப்பதில்லை. முதலில் மாநகராட்சி தலைமை பொறுப்பில் இருக்கும் ஆணையாளர் பின்பற்றினால் தானே அவருக்கு கீழ் பணிபுரியும் மற்ற அதிகாரிகள் பின்பற்றுவார்கள்.

தற்போது பல அரசு துறைகளில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை கேட்டு விண்ணப்பித்தால் அதிகாரிகள் பொதுமக்களை பலநாட்கள் இழுத்தடித்து காலம் தாமதித்து லஞ்சம் கொடுத்தால்தான் முடித்து தருவதாகவும் அரசு அலுவலகங்களில் லஞ்ச முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் புகார் கொடுத்ததின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் பல அரசு அலுவலங்களில் உள்ள அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்கவோ முடியாது மறக்கவும் முடியாது.

தற்போது சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. பல மாதங்களாக தங்கள் மேஜையில் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தை பரிசீலித்து உடனே அவர்களுக்கு ஆவின் பூத் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .என்பதுதான் ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்கள் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆகும்.
சேலம் மாநகராட்சி ஆணையர் செயல்பாடுகள் பற்றி தமிழக முதல்வர் மற்றும் நகராட்சி அமைச்சர் கே என் நேரு அவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button