கராத்தே சாம்பியன் மாணவனுக்கு 15000ருபாய் உதவித் தொகை!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
கராத்தே போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ள
மாணவருக்கு உதவித்தொகை!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.07.2021) திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசு கராத்தே சாம்பியன் -2021 போட்டியில் கலந்து கொள்ளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவனுக்கு
நிதியுதவி ரூ.15,000/-க் கான காசோலையினை
மாவட்ட ஆட்சியர் திஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.
அருப்புக்கோட்டை திரு.சக்திவேல் முருகன்- திருமதி.முத்துரத்தினம் ஆகியோர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் திரு.ஹரிஹரபிரசாத், வயது 16. அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் மதுரை யாசுகான் கராத்தே பயிற்சி மையத்தில் கடந்த 9 வருடங்களாக பயிற்சி பெற்று வருகிறார். இவர் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளார்.
தற்போது, திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசு கராத்தே சாம்பியன் -2021 போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாணவனின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த போட்டியில் கலந்து கொள்ள இயலாத நிலையை நாளிதழ் வழியாக அறிந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வட்டாட்சியர் மூலம் அந்த மாணவனின் நிலைமையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை பெற்று, அதனடிப்படையில் அம்மாணவனுக்கு கராத்தே போட்டியில் பங்குபெறுவதற்காக நுழைவு கட்டணம், தங்கும் இடம், உணவு மற்றும் பாதுகாப்பு கவசம் ஆகியவற்றிற்கு ரூ.15,000/- தேவைப்படுகிறது .
இதை அறிந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.15,000/- நிதியுதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியாளர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.
மேலும், அந்த மாணவனை கராத்தே பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி பயிற்சி செய்து விட்டு, மீதமுள்ள நேரங்களில் நேரத்தை வீணாக்காமல், திட்டமிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். பின்னர் அந்த மாணவன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உதவித்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, நான் நன்றாக படித்து உங்களை போல் நானும் உயர்ந்த நிலைக்கு வருவேன் என் உறுதி அளித்தான்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் தஇரா.மங்களராமசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
reportervision@gmail.com
www.reportervision.com
ஜுலை 20/07/21