கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் 1000ரூபாய் இவர்களுக்கு கிடைக்காது! மோசடி கும்பல்களை நம்பி ஏமாற வேண்டாம் எச்சரிக்கை!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள்!
1.குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு கிடையாது.
2.குடும்ப உறுப்பினர்கள் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு கிடையாது.
3. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் தொழில் வரி செலுத்துபவர்களுக்கு கிடையாது.
4. குடும்பத்தில் மாநில அரசு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வங்கிகள் வாரியங்கள் உள்ளாட்சி அமைப்பு கூட்டுறவு அமைப்புகளில் வேலை செய்பவர்களுக்கு கிடையாது!
5. குடும்பத்தில் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (.உள்ளாட்சி வார்டு உறுப்பினர்களை) தவிர யாரும் இருக்கக்கூடாது.
6. குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு யாருக்கும் கார் ஜீப் டிராக்டர் கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது.
7.குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் ஆண்டு விற்பனை சரக்கு மற்றும் சேவை வரி (GST(செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கிடையாது.
8. குடும்பத்தில் உள்ளவர்கள் ஓய்வூதியம் விதவை ஓய்வூதியம் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதிய பெரும் உறுப்பினர்களுக்கு கிடையாது.
9. குடும்பத்தில் கூட்டாக அஞ்சு ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலம் இருப்பவர்களுக்கு கிடையாது
இவைகள் எதுவுமே இல்லாதவர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவி பெயரில் வங்கி செலுத்தப்படும்.
ஆகவே தேவையில்லாமல் ஆயிரம் ரூபாய் வாங்கித் தருவதாக சொல்லும் மோசடி கும்பலிடம் பொதுமக்கள் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் . என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.