காவல் செய்திகள்

கல்லூரியில் குண்டு வீச்சு! புகார் வந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத கிண்டி காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா சென்னை மாநகர காவல் ஆணையர்!

21/08/2023 காலை வேளச்சேரியில் குருநானக்  மாணவர்களிடையே மோதலால் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

கல்லூரியில் வீசிய நாட்டு வெடி குண்டு


இந்த கல்லூரியில் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கிடையே இரு பிரிவாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருதரப்பு மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டது . இந்த மோதல் போக்கை கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது. கல்லூரியில் மாணவர்களுக்கிடையே மோதல் போக்கு இருந்துள்ளது.

மாணவர்களுக்கிடையே மோதல் போக்கு இருந்து வந்ததை கிண்டி காவல் ஆய்வாளருக்கு மறைமுகமாக புகார் வந்த நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இது சம்பந்தமாக மாணவர்களை அழைத்து விசாரிக்காமல் இருந்துள்ளார் .இதற்கு காரணம் கல்லூரி பெயருக்கு களங்கம் வந்து விடக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் காவல் ஆய்வாளரை அழைத்து பேசியதாகவும் கல்லூரி பெயரைக் காப்பாற்ற கிண்டி காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் பிரவின் குமார் உதவி ஆய்வாளர் பூவேந்தன் அவர்கள் பணம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை மாணவர்களின் பெற்றோர்கள் வைத்துள்ளனர்.

சென்னை மாநகர
காவல் ஆணையர்

ஆகையால் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் நலன் கருதி இந்த குற்றச்சாட்டை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உடனடியாக நேர்மையான அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிந்து யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் பெற்றோர்களுக்குள் உள்ள அச்சத்தை போக்க வேண்டும் .

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதன் விளைவுதான் இன்று காலை அந்த மோதல் போக்கால் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் மமீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர், இதில் சில மாணவர்கள் காயமடைந்தாக கூறப்படுகிறது, தகவல் அறிந்து வந்த கிண்டி காவல் நிலைய காவலர்கள் கல்லூரிக்கு விரைந்து சென்று நாட்டு வெடி குண்டு வீசிய மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோதல் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்களை கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடையார் காவல் இணை ஆணையர் மற்றும் கிண்டி காவல் உதவி ஆணையர் சிவா விசாரணை நடத்தி வருகின்றனர்
அதேநேரம் நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது ஏற்பட்டுள்ளது.எது எப்படியோ மாணவர்கள் இடையே இரு பிரிவுகள் இருந்து வந்த நிலையில் பள்ளி நிர்வாகம் அதைக் கண்டு கொள்ளாமல் வெடிகுண்டு வீசும் அளவிற்கு அந்தக் கல்வி நிர்வாகத்தின் அவல நிலை இருந்துள்ளது என்பதுதான் நிதர்சனம். ஆகவே முதலில் கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வீசும் வரை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு கல்லூரியில் எந்த பாதுகாப்பும் இல்லை நிலை உண்டாகி உள்ளது . இந்த குண்டு வீச்சுக்கு கல்லூரி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வர் அவர்கள் இது சம்பந்தமாக தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாகும்.வேளச்சேரி கல்லூரியில் வீசியது நாட்டு வெடிகுண்டு இல்லை என்றும் தீபாவளிக்கு பயன்படுத்தும் பட்டாசு என்றும் இந்த மோதல் சம்பந்தமாக சம்பந்தமாக 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாகவும் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருந்த மாணவனை தேடி வருவதாகவும் காவல் துறையின் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்

வேளச்சேரி கல்லூரியில் வீசியது நாட்டு வெடிகுண்டு இல்லை என்றும் தீபாவளிக்கு பயன்படுத்தும் பட்டாசு என்றும் இந்த மோதல் சம்பந்தமாக சம்பந்தமாக 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாகவும் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருந்த மாணவனை தேடி வருவதாகவும் காவல் துறையின் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button