கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் ஜான்சன் கல்லூரி மாணவனை கத்தியால் குத்தி கொலை! அச்சத்தில் மாணவர்களின் பெற்றோர்!
கோவை கருமத்து பட்டியில் இருக்கும் ஜான்சன் ஜான்சன் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவனை கோவை இந்துஸ்தான் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி மற்றும் ஒரு சில நண்பர்கள்
கோவை சின்னியம்பாளையம் ஆர்ஜிபுதூரில் வேட்டைக்காரன் கோவில் உள்ள பகுதியில் வந்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) மற்றும் அவரது நண்பர்கள் புவனேஷ் குமாரின் வயிற்றில்
கத்தியால் குத்தியதால் ஜான்சன் ஜான்சன் கல்லூரியில் படித்த முதலாமாண்டு மாணவன் புவனேஷ் குமார் உயிரிழந்து விட்டார் என்ற அதிர்சி தகவல். கொலை செய்யப்பட்ட புவனேஷ் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும் அவருக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை என்றும் புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி மது அருந்துவாரா இல்லையா என்பதை தெரியவில்லை என்றும் புவனேஷ் குமார் நன்றாக படிக்கக் கூடியவர் என்றும் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் காவல்துறையில் மது அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்டதாக பத்திரிகைகளுக்கு தவறான செய்தியை கொடுத்ததாகவும் மாணவர்களின் வேதனையாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இதனால் கல்லூரியில் விடுதியில் படிக்கும் மாணவர்களை யாரையும் வீட்டிற்கு அனுப்பாமல் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல்.கோவை மாநகர காவல் துறையினர் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
.
ஆனால் இந்த சம்பவத்தை கல்லூரி நிர்வாகம் உயிரிழந்த மாணவன் ஜான்சன் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதை கருமத்துப்பட்டி காவல் நிலைய உதவியுடன் மறைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல். தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே மோதல்கள் உண்டாவதால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்று கல்லூரி மாணவர்கள் உயிர் இழக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.