கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகில் வழக்கத்திற்கு மாறாக அமைச்சருக்கு தனியாக மண்டகப்படி அமைத்ததால் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது! உயிரிழப்பு ஏற்பட்டால் கோவில் நிர்வாகம் 5கோடி ரூபாய் காப்பீடு செய்ததை மறைக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகம்!?
கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு வரை சென்றதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம்!??
வரலாற்றிலேயே முதல்முறையாக கூட்டநெரிசலில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்து இருக்கும் அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த அசம்பாவிதம் நடந்ததற்கு காவல்துறை பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளில் குளறுபடி மற்றும் கவனக்குறைவு முக்கிய காரணம் காவல்துறையின் முழு ஒத்துழைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
மதுரை வரலாற்றில் இதுவரை இதுபோன்ற ஒரு துக்கமான செய்தியுடன் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி அழகர் கோவிலுக்குத் திரும்பிச் சென்ற சரித்திரம் இல்லை என்று கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு முழு காரணம் காவல்துறையை என்று குற்றம் சாட்டியுள்ளனர் கோவில் நிர்வாகம்!
மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழாவில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொதுமக்கள் உயிரிழந்தால் கோவில் நிர்வாகம் 5 கோடி ரூபாய் காப்பீடு செய்துள்ளது!?
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 2 பேருக்கு தலா 5 கோடி காப்பீடு தொகை கிடைக்க கோவில் நிர்வாகம் முன்வருமா!?
தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டத்தை தாண்டி குறிப்பிட்ட நேரத்திற்குள் வைகை ஆற்றுக்கு வர தாமதமானது. இதற்கு முக்கியக் காரணம் காவல்துறையின் பாதுகாப்புக் கவனக் குறைவே ஆகும் என்றும்
கள்ளழகர் சுற்றி 160 காவல்துறையினர் இருப்பார்கள் என்று காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்கள் என்றும் ஆனால் கள்ளழகர் சுற்றி மிக சொற்பமான குறைந்த அளவில் காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தார்கள் என்றும் குறித்த நேரத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்க வேண்டும் என்ற அடிப்படையில் நேரம் இல்லாத காரணத்தினால் கோரிப்பாளையம் மண்டகப்படிகளுக்கு செல்ல முடியாமல் போனது என்றும் கள்ளழகர் அழகர் கோவிலுக்கு திரும்பும்போது கோரிப்பாளையம் மண்டகப்படிக்கு கள்ளழகர் வருவார் என்றும் அந்தக் அப்படி தாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வைகை ஆறு பகுதிகளில் கூட்ட நெரிசலால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொதுமக்கள் பக்தர்கள் யாராவது உயிரிழந்தால் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் ஐந்து கோடி ரூபாய் காப்பீடு செய்துள்ளதாகவும் கள்ளழகர் கோவில் நிர்வாக தரப்பிலிருந்து அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
அப்படி கோவில் நிர்வாகம் ஐந்து கோடி ரூபாய் காப்பீடு செய்து இருந்தால் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 2 பேருக்கு 5 கோடி ரூபாய் காப்பீடு தொகை கிடைக்க கோவில் நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் இதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை மாநகராட்சி ஆணையர் இவர்கள் இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கூட்டநெரிசல் காரணத்திற்கு அரசு அலுவலர்கள் சிலர் கடந்த காலங்களில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் இடத்திலும் அருகிலுள்ள ஏவி மேம்பாலத்தில் மிக முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் இதற்கென தனி பாஸ் மாநகர காவல் துறை மூலம் வழங்கப்படும் இந்த ஆண்டு முதல்முறையாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு அருகில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி அங்கு முக்கிய பிரமுகர்கள் காரில் நேரடியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது என்றும் இந்த விஐபி பாஸ் இருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு காரில் சென்று வருவதற்கு வசதியாக ஏவி மேம்பாலம் மூங்கில் கடைத்தெரு இந்த இரண்டு வழிகளையும் காவல்துறையினர் முழுவதுமாக அடைத்து விட்டனர். இதுவரை நடந்த திருவிழாக்களில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த மூங்கில் கடை தெரு வழியாகத்தான் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றிற்கு செல்வார். அந்த வாகனத்திற்கு பின் பல ஆயிரம் பக்தர்கள் கோசம் விட்டு செல்வார்கள். இந்த நடைமுறையை மாற்றி கள்ளழகருக்கு செல்லும் வழியை தற்போது அதிகார பலத்தில் உள்ள அமைச்சர்கள் காவல்துறையினரை தங்கள் வசப்படுத்திக் கொண்டு வழக்கத்திற்கு மாறாக மூங்கில் கடைத் தெருவில் கள்ளழகர் மட்டும் செல்ல அனுமதித்து விட்டு பின்னால் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தடுத்து நிறுத்தியது காவல்துறை. இதனால் வேறு வழியில்லாமல் பக்தர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலையை கள்ளழகர் கடந்ததும் அங்கு கூடியிருந்த பல லட்சம் பக்தர்கள் கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றில் செல்ல வழி தேடினர் ஆனால் அரசு மருத்துவமனை படங்கள் சாலை கோரிப்பாளையம் பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள் மூங்கில் கடைத்தெரு வழியாக ஆற்றுக்கு சொல்ல முடியவில்லை எப்படியும் வழிகாட்டு செல்லவேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் பக்தர்கள் முண்டியடித்து கொண்டு சென்றனர். இந்த கூட்டம் பாலம் ஸ்டேஷன் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலையை நோக்கி சென்றனர். இந்த சாலைகளில் ஏற்கனவே பல ஆயிரம் பேர் திறந்திருந்த நிலையில் இந்த கூட்டமும் சேர்ந்தவுடன் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் நெரிசலில் சிக்கி கூச்சலிட்டனர். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர்களை கூட்டத்தில் முண்டியடித்து சென்றவர்கள் அவர்கள் மீது ஏறி மிதித்து சென்றனர். இதில் பல பேர் மூச்சுவிட முடியாமல் மயங்கிய நிலையில் அங்கேயே கீழே விழுந்தனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த கடும் நெரிசலில் பலரும் சிக்கினர் அவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டு சத்தம் போடுவதை கேட்டு தீயணைப்புத் துறையினர் காவல் துறையினரோ கூட்ட நெரிசலில் அவர்களை காப்பாற்ற அந்தப் பகுதிக்கு வர இந்த நேரத்திற்குப் பின்னரே பாதுகாப்பு படையினர் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் ஜெனரல் ஏற்பட்டவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் அதில் 50க்கும் மேற்பட்ட இருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி 20க்கும் மேற்பட்டவர்கள் மிக மோசமான நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் அதில்தான் இரண்டு பேர் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு சென்றதால் அவர்களை அனுமதிக்க முடியாது என்று இந்த ஆண்டு முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து மதுரை மாவட்டத்தை சுற்றி நல்ல மழை பெய்து வந்தது. மழை அளவை கணக்கிட்டு வைகை அணையில் இருந்து பொதுப்பணித்துறை திறந்துவிட்ட தண்ணீர் அளவை கணக்கிட்டு சரியான விகிதத்தில் தண்ணீரை திறந்து விட்டிருந்தால் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நாளன்று வைகையாற்றில் குறைவான தண்ணீரே வந்து இருக்குமென்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையின் அலட்சியப் போக்கால் தான் வைகை ஆற்றில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்தது என்றும் இதனால் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு செல்ல தடை விதித்ததால் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும் அந்தக் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் என்றும் அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் மற்றொரு குற்றச்சாட்டையும் கோவில் நிர்வாகம் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதியின் அருகிலேயே தடுப்பணை கட்டியதால் விபத்துக்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்று விபத்தை தவிர்க்க பக்தர்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காவல்துறையினர் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த தடுப்பணை யானைக்கல் பாலத்திற்கு மேற்குப்பகுதியில் அமைத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடப்பதை தடுத்திருக்கலாம். வைகை ஆற்றின் இருபுறமும் அகலமான நான்கு வழிச்சாலைகள் போடப்பட்டுள்ளது இப்பகுதியில் பல லட்சம் மக்கள் நெரிசல் இன்றி கள்ளழகரை தரிசிக்க முடியும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
எது எப்படியோ சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் ஏற்கனவே திட்டமிட்டபடி பல லட்சம் பேர் கூடுவார்கள் என்று காவல்துறை அறிவித்ததற்கு பின்பு வைகையாற்று அருகே யாரும் செல்லக் கூடாது என்றும் கூறியிருந்த நிலையில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிர் இழக்கும் அளவுக்கு இதுபோல் அசம்பாவிதம் நடந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கும் செய்தியாகும். கோவில் நிர்வாக தரப்பில் இருந்து சொல்வதைப்போல் காவல்துறை முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் இந்த சம்பவத்திற்கு காவல்துறை தான் முழு பொறுப்பு என்றும் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஆகையால் மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் இத் திருவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த முக்கிய பங்காக இருக்கும் மதுரை மாவட்ட அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி டிஆர் பழனிவேல் தியாகராஜன் இவர்கள் அனைவரும் இந்தக் குற்றச்சாட்டிற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்!? நாம் களத்தில் விசாரித்ததில் மதுரை மாநகராட்சி தேர்தலில் இருந்து மேயர் பதவி கொடுத்ததில் இருந்து இரண்டு அமைச்சர்களுக்கு உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகையால் இரண்டு அமைச்சர்களுக்கும் உள்ள உறவு நெருக்கம் இல்லாமல் பிளவுபட்டு இருப்பதாகவும் இதனால் தற்போது நடந்து முடிந்த மிக சிறப்பு வாய்ந்த மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இந்த நிகழ்ச்சியில் மிக முக்கிய பொறுப்பு வகித்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் இந்த மூன்று நிர்வாகமும் கட்டுப்பாட்டை விதிக்க முடியாமல் மிக நெருக்கடியை கொடுத்துள்ளதாகவும் எந்த அமைச்சர் சொல்வதைக் கேட்டு முடிவு எடுப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடி இருந்ததாகவும் கடைசி நேரத்தில் காவல் துறையினர் விதித்திருந்த கட்டுப்பாட்டை கடுமை காட்டாமல் விட்டதன் விளைவு தான் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்