கவன குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனு சாமியிடம் கோவை சுகாதாரத் துறை விசாரணை!
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பச்ச மலையை சேர்ந்த காப்பி எஸ்டேட் சவுத் ) பெண் கூலித் தொழிலாளி பேச்சியம்மாள் 23 / 6 /2023 அன்று உடல் நிலை சரியில்லை என்று வால்பாறை செந்தில் கிளினிக் சென்று
டாக்டர் முனு சாமியிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.
டாக்டர் முனுசாமி பரிசோதனை செய்யாமல் கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்து ஏதோ ஒரு ஊசியை போட்டு மருந்து கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதன் பின்பு சில நாட்களில் பேச்சியம்மாளுக்கு ஊசி போட்ட இடத்தில் அலர்ஜி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் இருந்துள்ளார். உடனே பேச்சியம்மாளின் கணவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த அரசு மருத்துவர்கள் ஊசி போட்டதில் (infection) தொற்று ஏற்பட்டிருப்பதால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
பேச்சியம்மாள் கணவர் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து கொண்டு வரும் நிலையில் வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ஊசி போட்ட தவறான சிகிச்சையால் கூலித் தொழிலாளி பேச்சியம்மாள் கால் பகுதி அழுகிய நிலையில் தற்போது இருப்பதால் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் குடும்பத்தில் மிக வறுமையில் இருப்பதாகவும் எங்கள் குடும்ப சூழநிலை கருதி
தவறான சிகிச்சை அளித்த செந்தில் கிளினிக் மருத்துவர் முனுசாமி இடம் உரிய இழப்பீடு பெற்று தரவும் அது மட்டும் இல்லாமல் கவனக் குறைவால் சிகிச்சை அளித்ததற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
தமிழக முதல்வர் தனிப் பிரிவு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பேச்சியம்மாளின் மகன் வினோத்குமார் 8/08/2023 அன்று புகார் மனு கொடுத்துள்ளார்.
அதன்பின்பு 10/10 2023 அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவ மனை முதன்மை குடிமை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் கோட்டூர் அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர் முருக பூபதி ஆகிய இரு மருத்துவர் களை விசாரணைக் குழு அதிகாரிகளாக கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் நியமித்தார்.( ந க எண்.5654/நி 5/1/2023 )
அதன்பின்பு 18/10/23 அன்று பாதிக்கப்பட்ட பேச்சியம்மாளின் மகன் வினோத்த்குமார் விசாரணைக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டது.
அதன்படி பாதிக்கப்பட்ட பேச்சியம்மாளின் மகன் வினோத்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ பாதிக்கப்பட்ட தேயிலை தோட்ட பெண் கூலி தொழிலாளியின் குடும்ப நலன் கருதி நேர்மையான முறையில் விசாரணை நடத்தவேண்டும். அதுமட்டுமில்லாமல் பெண் கூலி தொழிலாளிக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலங்களில் வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் ஒட்டு மொத்த கூலித் தொழிலாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசு மீதும் ஆட்சி மீதும் நம்பிக்கை வரும் என்பதுதான் நிதர்சனம் . யார் தவறு சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார் . அதே போல் வால்பாறை தேயிலைத் தோட்ட பெண் கூலித் தொழிலாளிக்கு நிவாரணம் கிடைக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம் !சுகாதாரத் துறை அதிகாரிகளின் நேர்மையான விசாரணை மற்றும் நடவடிக்கையை!