காற்று மாசு இல்லாத போகிப் பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு !
காற்று மாசு இல்லாத போகிப் பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு பிரச்சாரம்!
புதுக்கோட்டையில் இன்று காற்று மாசு இல்லாத போகி பண்டிகையை மக்கள் கொண்டாடிட விழிப்புணர்வு பேரணி.
தைப்பொங்கல் முதல் நாள் போகிப் பண்டிகையை கொண்டாடுவது போகிப் பண்டிகை கொண்டாடுவதற்கு சாலைகளில் பழைய பொருட்கள் வைத்து தீ வைத்து எரித்து கொண்டாடுவதை காலம் காலமாக மக்கள் செய்து வருகின்றனர் இதை தடுக்கும்
வகையில் சில வருடங்களாக மாவட்ட ஆட்சியர் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் வரும் போகிப் பண்டிகைக்கு கல்விப் பொருள்களை எரித்து காற்று மாசு உண்டாக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை
ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிளாஸ்டிக் பை ஒழிப்போம் என்ற விளம்பர பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு துவக்கி வைத்து புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் தலைமையில் உதவி பொறியாளர் தாரணி மற்றும் புதுக்கோட்டைகோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.