மாவட்டச் செய்திகள்

காலாவதியான உரிமத்தை வைத்து சட்ட விரோத மாக இயங்கும் சேலம் கல் குவாரிகள்!
கனிமவளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா!?

சேலம் மாவட்ட ஆட்சியராக மே 18, 2021 அன்று கார்மேகம் பொறுப் பெற்று 30 மாதங்கள் ஆன நிலையில் சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை கனிமவளத்துறை அதிகார்கள் மீது பல குற்றச்சாட்டு புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் சேலம் மாவட்ட ஆட்சியர் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.கனிமவளத்துறை வருவாய்த் துறையில் லஞ்ச ஊழல் முறைகேடு கொடிகட்டி பரப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

கனிமவளத்துறை வருவாய்த் துறையில் லஞ்ச ஊழல் முறைகேடு கொடிகட்டி பரப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் இயங்கும் கல் குவாரிகள் உரிமம் மற்றும் அரசு அனுமதி இல்லாமல் இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பசுமை போர்த்திய, தொன்மை சின்னங்கள் நிறைந்த குறிப்பிட்ட அளவு மலைகள் இன்று பெரும் பள்ளங்களாக மாறி
விட்டன. கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கற்களும், இதர கனி மங்களும் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளூர்
தேவைகளுக்காகவும், வெளிமாநிலங்களுக்கு
சட்ட விரோதமாகவும் கடத்தப்பட்டு
வருகின்றன.

பசுமை போர்த்திய மலைகளில் குவாரிகள் அமைக்கக்கூடாது. அனுமதியளிக்கப்பட்ட குறிப்பிட்ட பரப்பு அதாவது 10 ஹெக்டேர் என்றால் அந்த நிலப்பரப்பின் வரைபடத்தின் அடிப்படையில் அந்த நிலத்தில் மட்டுமே கல்
வெட்டி எடுக்கப்பட வேண்டும். கல் வெட்டி எடுக்க வெடிபொருள் பயன்படுத்தப்பட்டால், அதன் அளவுகள், வெடிபொருள் பயன்பாடு மற்றும் குவாரிப்
பணிகளின் போது எழும் ஒலி
அளவு, காற்று மாசுபாட்டின் அளவு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குவாரிக்குமான அனுமதியின்
போது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிற்சாலை பகுதி என்றால் பகலில் 75 டெசிபலும், இரவில் 70 டெசிபலும் ஓசை அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்பு
பகுதி என்றால் பகலில் 55 டெசிபலும், இரவில் 45 டெசிபலும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால்,
பெரும்பாலான குவாரிகள் இந்த விதிகள் எதையும் பின்பற்றுவ
தில்லை. அத்துடன் அதிகப்படி
யான மரம் சூழ்ந்த மலைப்பகுதி
கள், விவசாய நிலத்தை ஒட்டிய பகுதிகள், நீர்நிலைப்பகுதிகளில்
குவாரிகள் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்
கள் எழுந்துள்ளன.


இது குறித்து மேட்டூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெய சிம்மன் கூறும்போது,

சேலம், மேட்டூர் வட்டம், சாம் பள்ளி கிராமத்தில் உள்ள பாலாஜி ப்ளு மெட்டல்ஸ் என்ற கல்குவாரி உரிமம் கடந்த 2022-ம் வருடம் முடிவடைந்த நிலையில்,

தொடர்ந்து சட்ட விரோதமாக பாறைகளை வெடி வைத்து கனிம வளம் வெட்டி கடத்தப்படுவதாகவும்
ஆனால் கனிம வளத்துறையில் உரிய அனுமதி பெறாமல் உரிய ஆவணங்கள் இன்றி சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .மேலும் கல் குவாரிக்கு வழங்கியுள்ள கட்டுப்பாடு
களை மீறி செயல்படுவதாகவும். குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது மட்டுல்லாமல் காலை மற்றும் மாலை வேளையில்
குழந்தைகள் பள்ளி செல்லும் நேரங்களில் குவாரியில் சட்ட விரோதமாக வெடி வைக்கப்படுவதாகவும் இதனால் அப்பகுதி முழுவதும் காற்றில் மாசு நிறைந்து இருப்பதால் பள்ளி குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் மூச்சு விட முடியாமல் சிரமப் பட்டு வருவதாகவும் இதனால் தொண்டையில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதுமட்டும் இல்லாமல் குவாரி அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகில் தான் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் சுற்றி மாசு படிந்து காணப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் அளவுக்கு அதிகமாக கனரக வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்வதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படும் சாலைகள் .


அதுமட்டும் இல்லாமல் குவாரியிலிருந்து கனிம வளத்தை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பள்ளி செல்லும் குளுந்தைகள் மற்றும் பொது மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
எழுந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல், சேலம், மேட்டூர் வட்டம், சாம் பள்ளி கிராமம்
புலஎண்-915/2 – க்கு அருகில் வடக்கு கோம்பை காடு (ஓடை) நீர்நிலையை ஆக்ரமிப்பு செய்து அபகரித்துள்ளனர். ஏனெனில் அருகில் உள்ள மலையில்
இருந்து வரும் நீர் ஓடை வழியாக செல்லும் இந்த ஓடை இங்குள்ள
விவசாய மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால்
தற்பொழுது அந்த ஓடையை காணவில்லை காரணம் ஓடையின்
அருகில் செல்வராஜ் என்பவர் பாலாஜி கிரசர் என்ற ஜல்லி கிரசர் பவுடர் அரைக்கும் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் அரசு
அனுமதி இல்லாமல் கற்களை உடைத்து பாறைகளையும் வெடிவைத்து தகர்த்து வருகிறார். அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக பள்ளம் தோண்டி கற்களை வெட்டி எடுத்து வருகிறார். இதை கவனிக்க வேண்டிய கனிம வளத்துறை மற்றும் வருவாய் துறையினர், பொதுப்பணித் துறை மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சேலம் கனிமவளத் துறை துணை இயக்குனரும் கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச் சாட்டை சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.
மேலும் இங்குள்ள ஓடையை மறைத்து குவாரிக்கு லாரி செல்ல பாதை அமைத்துள்ளனர். வேண்டுமென்றே மேலும் ஒரு
பாதையை அமைத்து ஜல்லி,கிரசர் லாரியில் ஏற்றி செல்கின்றனர்.
இதனால் அங்குள்ள நிலத்தில் மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் கற்களும், மண்ணும் இறைந்து கிடக்கிறது. மேற்படி புலஎண்-915/2 – க்கு அருகில் வடக்கு கோம்பை காடு ஓடையை மூடி விட்டு பாதை அமைத்துள்ளனர்.
ஓடையை ஆக்கிரமித்து, சட்ட விரோத மாக முறைக் கேடாக இயங்கும் சேலம், மேட்டூர் வட்டம், சாம் பள்ளி கிராமத்தில் உள்ள பாலாஜி ப்ளு மெட்டல்ஸ் கல்குவாரி மீது மற்றும் சட்ட விரோதமாக இயங்கும் குவாரிக்கு உடந்தையாக செயல்படும் மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள், கனிம வளத் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டு இயற்க்கை வளங்களை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button