காவல்துறை உதவியுடன் போலி நிறுவனம் நடத்தி நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி கும்பல்!?
நடவடிக்கை எடுப்பாரா டிஜிபி சைலேந்திரபாபு!??
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஆண்ட்ராய்டு மொபைல் போன் குறைந்தவிலையில் தருவதாக கூறி பல பெயர்களில் நிறுவனங்களை நடத்தி காவல்துறை உதவியுடன் மெகா மோசடி கும்பல் பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகிறது.
இந்த மோசடிக் கும்பலின் தலைவனாக செயல்படுபவர் பேரணாம்பட்டு மசிக் த்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் .
இவர் நிறுவனங்களுக்கு வேலைக்கு பெண்களை அழைத்துவர ஆலத்தூரை சேர்ந்த வித்யா என்ற பெண்ணை கையில் வைத்துக் கொண்டு இவர் நிறுவனங்களுக்கு பெண்களை நியமித்து அதற்கு ஒரு பெரிய தொகையை பெற்றுக் கொள்கிறார் இந்தநித்யா என்ற தகவல் வந்துள்ளது
இந்த மோசடி கும்பல் பல பெண்களை வேலைக்கு அமர்த்தி கல்லூரி மாணவர்களின் மொபைல் நம்பர் டேட்டாக்களை வாங்கிக்கொண்டு அந்த கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2,500 ரூபாய்க்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்த பள்ளி கல்லூரி மாணவர்களை .2500 ரூபாய் ஆன்லைனில் காட்டுமாறு இந்த கும்பல் நூதன முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு அந்தப் படத்திற்கான மொபைல் போனை பார்சலில் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கொடுத்து விட்டு போனை துண்டித்து விடுவார்கள்.
பணத்தை கட்டிய அந்த நபர் அந்த பார்சலை பிரித்து பார்த்தால்
அதில் 300 ரூபாய் மதிப்புள்ள மொபைல் சார்ஜர் மற்றும் ஏதாவது ஆகாத பொருள்கள் இல்லை என்றால் களிமண் அல்லது ஏதாவது தேவையில்லாத பொருட்களை பார்சல் உள்ளே வைத்து அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படி நூதன முறையில் மோசடி செய்து வம்பு வருபவர்களின் பெயர் முகவரி ஆதாரத்தோடு சமூக ஆர்வலர்கள் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது .
ஏனென்றால் இதில் காவல்துறையினரும் இந்த மோசடி கும்பலுடன் சேர்ந்து இந்த அரங்கேற்றத்தை நடத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது .
உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த மோசடி கும்பல்களின் தலைவனாக செயல்படும் சுரேஷ் என்பவரை முகவரி மற்றும் ஆதாரத்துடன் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் சமூக ஆர்வலர்கள் காவல்துறை மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு கேரளா கர்நாடகா மூன்று மாநிலங்களில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து தபால் நிலைய ஊழியர்களை கையில் வைத்துக்கொண்டு இந்த பார்சல்களை அனுப்பி வருகின்றனர் இந்த மோசடி கும்பல்.
ஒரு நிறுவனம் பெயரில் இந்த மோசடியை செய்வதில்லை.
பல நிறுவனங்கள் பெயரில் பல பெண்களை வேலைக்கு வைத்து பேசி ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர்கள் இந்த இக்கட்டான நிலையில் கொரோனா காலத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் படிப்பதற்கு செல் தேவை என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு இப்படி மெகா மோசடி நடந்து வருவதை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது .
பெண்களை வேலைக்கு வைத்து பேசி ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர்கள் இந்த இக்கட்டான நிலையில் கொரோனா காலத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் படிப்பதற்கு செல் தேவை என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு இப்படி மெகா மோசடி நடந்து வருவதை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது .
ஆகவே இந்த மோசடிக் கும்பலை தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் நேரடி விசாரணைக்கு ஒரு தனி குழு அமைத்து இந்த மோசடிக் கும்பல்கள் எத்தனை கோடி மோசடி செய்து உள்ளார்கள் என்பது வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இது போல் மோசடிகளை வேறு எந்த நபர்களும் செய்யாமல் விழிப்புடன் இருக்க காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி னால் மட்டுமே இதுபோன்ற தொடர் நூதன மோசடி கும்பலிடம் இருந்து அப்பாவி பொதுமக்கள் தப்பிக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.