காவல் செய்திகள்
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த லாவண்யா – ஜெயக்குமார் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் இவர்களது காதல் இரு வீட்டார் இடையே ஏற்று கொள்ளாத நிலையில் நேற்று 17.09.2023 பள்ளிப்பாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

தொடர்ந்து இரு வீட்டார் மறுப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடிகள் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்
தொடர்ந்து இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பியனர்
இதை தொடர்ந்து தந்தை பெரியார் பிறந்த நாளான நேற்று
கொண்டாடப்பட்ட நிலையில்
காதல் ஜோடிகள் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது