காவல் செய்திகள்

காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசு பேருந்தில் பட்டப் பகலில் பேட்டரி திருட்டு! வழக்கு பதிவு செய்ய மறுத்த  கொடை ரோடு அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்!
நடவடிக்கை  எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?


மதுரை மாவட்டம் சோழவந்தான் பணிமனையின் அரசு பேருந்து 8/05/2023 அன்று மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கோவைக்கு மதியம் 2.40 மணிக்கு  பயணிகளை ஏற்றுக் கொண்டு (TN.59 N.2432)புறப்பட்டு சென்றுள்ளது.மாலை 3.50 அளவில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிப்காட் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று லாரி  (TN 46B. 7941 )சிப்காட் அருகே நான்கு வழிச்சாலையில் திரும்பி உள்ளது . அப்போது எதிர்பாராத விதமாக  லாரியும் அரசு பேருந்தும் மோதியதில் அரசு பேருந்து  கண்ணாடி உடைந்து ஹெட்லைட் சேதம் அடைந்துள்ளது. 

உடனே லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார்.உடனே அரசு பேருந்து நடத்துனர் ஓட்டுநர் இராண்டு பேரும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில்  புகார்  கொடுத்துள்ளனர் .

புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் காவல் நிலையம் அருகே அரசு பேருந்து நிறுத்தினால் பாதுகாப்பு இருக்காது என்று அரசு பேருந்ததை பணிமனைக்கு எடுத்துச் சென்று நாங்கள் சொல்லும் போது எடுத்து வாருங்கள் என்று கூறியவுடன். அங்கே நிறுத்த போதுமான வசதியும் பாதுகாப்பும் இல்லாததால்  அந்தப் பேருந்து ஓட்டுநர் சோழவந்தான் பணி மனைக்கு அரசு பேருந்தை எடுத்துச் சென்று விட்டார்.அதன் பின்பு  09/05/23 அன்று அரசு பேருந்தை சோழவந்தான் பணிமனையிலிருந்து அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.காவல் நிலையம் அருகே அரசு பேருந்தை நிறுத்திவிட்டு  ஓட்டுனர் காவல் நிலையத்திற்குள் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் அரசு பேருந்து மீது மோதிய லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை அழைத்துள்ளார் ஆனால் லாரி உரிமையாளர் வரவில்லை என்பதால் அதன் பின்பு அரசு பேருந்தை சோழவந்தான் பணிமனைக்கு மீண்டும் எடுத்து செல்லுமாறு காவல் நிலையத்தில் கூறியுள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து அருகே வந்து பார்த்தபோது பேருந்தில் பேட்டரி வைத்துள்ள கதவு திறந்து இருப்பதைக் கண்டு உள்ளே பார்த்துள்ளார் அதில் 20 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் வந்து காவல் ஆய்வாளரிடம் புகார் தெரிவித்துள்ளார் .

அம்மையநாயக்கனூர்
காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் குறுவ தாய்

ஆனால் அம்மையநாயக்கனூர் பெண் காவல் ஆய்வாளர் குருவத்தாய் புகார் கொடுத்த ஓட்டுநரை பார்த்து எப்படி பேருந்தில் உள்ள பேட்டரி திருடு போகும் அதெல்லாம் புகாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீங்களே திருடியதாக உங்கள் மீது  வழக்கு பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அதன் பின்பு பேருந்து ஓட்டுநர் சோழவந்தான் பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் பணிமனையில் இருந்து ஒரு பேட்டரியை எடுத்து வந்து பேருந்ததில் பொருத்தி பேருந்தை சோழவந்தான் பணிமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதற்கு பின்பு அன்று இரவு இரவு 7.30 மணி அளவில் காவல் உதவி ஆய்வாளர் பேட்டரி திருடு போன புகாரை பெற்றுள்ளார். ஆனால் அந்த புகாரின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் எட்டாம் தேதி நடந்த விபத்திற்கு 11ஆம் தேதி வரை மூன்று நாட்களாக வழக்கு பதிவு செய்யாமல் அரசு பேருந்து ஓட்டுநரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்.அதன் பின்பு அரசு பேருந்து ஓட்டுநர் வழக்கு பதிவு செய்து ரசீது கொடுக்காமல் நான் செல்ல முடியாது என்று காவல் நிலையத்திலேயே இருந்துள்ளார் அதன் பின்பு ( 11ஆம் தேதி) மதியம் 2. 28 மணியளவில்  புகார் மனு மீது ரசீது  வழங்க காவல் உதவி ஆய்வாளர் வழங்கியுள்ளார்.

ஆனால் திருடு போனது சம்பந்தமாக கொடுத்த புகாருக்கு வழக்கு பதிவு செய்த ரசீது கொடுக்க முடியாது என்றும் அப்படியே கொடுத்தால் காவல் நிலையம் அருகே பேருந்தில் திருடு நடந்துள்ளதால் உயர் அதிகாரிகள் எங்களைத்தான் கேள்வி கேட்பார்கள் என்றும்
அம்மையநாயக்கனூர் பெண் காவல் ஆய்வாளர் குருவதாய் கூறியதாக அரசு பேருந்து ஓட்டுநர் பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்பு காவல் உதவி ஆய்வாளர் ரசீது போட்டுத் தரும்படி தலைமை காவலரிடம் கூறியதாகவும் 11/05/2023 மாலை 6 மணி வரை காத்திருந்து 6.30மணி அளவில் பேட்டரி திருடு போயுள்ளதாக ரசீது வழங்கி உள்ளார்கள்.


அம்மைய நாயக்கனூர் காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்தில் இருந்த பேட்டரி திருடு போனதை பற்றி அப்பகுதியில் விசாரித்ததில்  அம்மையநாயக்கனூர் கொடைரோடு சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போய் உள்ளதாகவும் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் ஆனால் பேட்டரி திருடும் நபர்கள் பற்றி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். எது எப்படியோ காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அரசுபேருந்து மற்றும் லாரி மற்றும் கார் போன்ற வாகனங்களில் பேட்டரி திருடு நடப்பதை அம்மையநாயக்கனூர் காவல் நிலைய காவலர்கள் கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button