கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்ட கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம்!!
விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரியின் மாசு காற்றில் கலந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அபாயம்! நிரந்தரமாக மூட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்ட கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம்!!
விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரியின் மாசு காற்றில் கலந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அபாயம்! நிரந்தரமாக மூட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு விதியை மீறி இயங்கும் கல்குவாரியால் மாசு படர்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கும் உடல் நலத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்து வருகிறார்கள். ஆகவே அரசு விதி மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொது மக்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு அளித்தபோது ! ஆட்சியாளரின் அணுகுமுறை வேதனை அளிப்பதாக கிராம மக்கள் !!
கன்னியாகுமரி மாவட்டம்
முள்ளங்கினா விளை ஊர் பொதுமக்கள் தங்களுடைய உயிருக்கும் உடல் நலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக அப்பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் கல் குவாரியை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் நிகழ்வில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :
தங்களுடைய வசிப்பிடத்திற்கு மிக அருகில் நட்டாலம், முள்ளங்கினா விளை, கொல்லஞ்சி ஆகிய ஊராட்சிகளை எல்கையாக கொண்டு வி கே ப்ளூ மெட்டல்ஸ், என்ற கல் குவாரி சுமார் 20 வருடங்களாக ஆறரை ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வந்தது.
தற்போது அந்தக் கல்குவாரி வேறு எந்த அனுமதியும் பெறாமல் கனிம வளத்தை கடத்தும் நோக்கத்துடன் அப்பட்டுக்குழி பொற்றை மலை, சிந்தம் பொற்றை மலை, குளமாங்கி பொற்றை மலை , எனும் மூன்று மலைகளையும் உள்ளடக்கி விரிவாக்கம் செய்து பல ஏக்கர் பரப்பளவில் தடை செய்யப்பட்ட கனரக இயந்திரங்கள் மூலமாக அங்கீகரிக்க பட்ட அளவை விட அதிகமான வெடி மருந்துடன் ஆழ்துளைகளில் எட்டு அடி வரை அதிக அடர்த்தியுடன் மிக அதிக நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பாறைகளை மின் இயக்கியல் மூலம் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் வெடிக்க வைக்கிறார்கள்
இத்தகைய அதி அழுத்த வெடிப்புகளால் ஏற்படும் நச்சுப் பாறை பொடிகள் மற்றும் தூசிகள் காற்றில் கலப்பதால் காற்று மாசடைந்து அப்பகுதியில் வாழும் எங்களுக்கு நேரடி உடல் நலப் பாதிப்பாக மூச்சுத் திணறல், சளி, இருமல், கண் எரிச்சல், மன அழுத்தம், ஆகியவை ஏற்படுகிறது இந்தப் பாறை பொடியை தொடர்ந்து சுவாசிப்பதால் எங்கள் குழந்தைகளுக்கு சிலிகோசிஸ், போன்ற தீவிர நோய்களும் நிரந்தர நுரையீரல் பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது இதன் நேரடி பாதிப்பால் முதியவர்களும் சிறு குழந்தைகளும் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள் எனவே அவர்கள் சார்ந்த குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது
அது மட்டுமல்லாமல் எங்கள் பகுதியில் வாழும் பெரும்பாலான மக்களின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்தே உள்ளது
ஆனால் இந்த கல் குவாரி நிலம் மட்டத்திலிருந்து மிக அதிக ஆழமாக சுமார் 250 அடிக்கு மேல் கீழ் இயங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து ஊடுபயிர் விவசாயம் முழுவதுமாக நலிவுற்றுள்ளது அதேபோல் பெரும்பான்மை வருவாயை ஈட்டும் ரப்பர் மரத்தின் இலைகள் முழுவதுமாக பாறை துகள்களால் மூடப்பட்டுள்ளது எனவே இதிலிருந்து கிடைக்கும் வருவாயும் மிகவும் குறைந்து அந்த மரங்களின் நிலைப்பு தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே இதை நம்பியுள்ள வருங்கால சந்ததியின் படிப்பு மற்றும் தொழில் போன்ற இதர பொருளாதார வளர்ச்சிகள் முழுவதும் தடைப்படும் அபாயத்தை எட்டியுள்ளது
இது தவிர இரண்டாம் கட்ட பொருளாதாரத்தை ஈட்டி தரும் கால்நடைகள் சாப்பிடும் பசுமை இலைகள் முற்றிலுமாக பாறை துகள்கள் மூடி உள்ளதால் மிருக ஜீவன்களும் அழியும் அபாயம் எட்டியுள்ளது
அதுபோல் நாங்கள் எங்கள் குடிநீர் மற்றும் இதர தண்ணீர் தேவைகளுக்கு பெரும்பாலும் திறந்த நிலை நீர் நிலைகளை( கிணறு மற்றும் குளம் ) ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறோம் ஆனால் சட்ட விரோதமாக விதிகளை மீறி இயங்கி வரும் இந்த கல் குவாரியின் பாறை துகள்களால் இந்த நீர் நிலை ஆதாரங்கள் முழுவதுமாக மாசடைகிறது எனவே எங்களுடைய தேவைகளுக்கு அடுத்த கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது .
பெரும் பாறை வெடிப்பின் போது ஏற்படும் அதிக அதிர்வால் மக்கள் வசிக்கும் வீடுகளில் மற்றும் இதர கட்டுமானங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது மேலும் கல் குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வைக்கும் வெடி மருந்தின் அதிக அழுத்தத்தால் அந்தப் பாறை வெடிக்கும் போது அதி உயரத்தில் உந்தி தள்ளப்படும் சிறு கற்கள் நேரடியாக வீடுகளின் கூறைகளில் விழுந்து அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது அதேபோல் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு நேரங்களில் வெடி வெடிப்பதால் சிறு குழந்தைகள் அலறியபடி எழுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது
இது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைத்து பொருட்கள் மீதும் பாறை துகள்களால் மூடப்பட்டுள்ளதால் எங்கள் உணவு மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு மாசடைந்து நச்சு ஆகிறது இத்தகைய உயிர் அபாயத்தை ஏற்படுத்தி அதிகமான மன உளைச்சலுக்கு பொதுமக்களை ஆளாக்கி அவர்களுடைய பொருளாதாரத்தை சிதைத்து இளம் தலைமுறையின் எதிர்காலத்தை முழுதாக பாழாக்கி அரசின் அனைத்து விதிமுறைகளையும் மீறி சட்ட விரோதமாக 24 மணி நேரமும் இயங்கி வரும் இந்தக் கல் குவாரியை உடனடியாக நிரந்தரமாக மூடி எங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் மூலமாக ஊர் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சீமான் கன்னியாகுமரியில் பத்திரிக்கையாளரை சந்தித்தபோது தற்போது கல்குவாரிகளை தடுத்து நிறுத்த கூறுவதைப் போல் கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் ஏன் போராடவில்லை என்று செய்தியாளர் கேட்டதற்கு பத்து வருடங்களாக அனுமதி இல்லாமல் கல்குவாரியை தடுத்து நிறுத்த போராடி வருவதாகவும் கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி தற்போது திமுக ஆட்சியிலும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் கல்குவாரிகள் இயங்கினாலும் நான் அமைச்சர் பதவி விலக தயார் என்று பகிரங்கமாக பேட்டி அளித்தார். இந்த நிலையில் தற்போது கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொது மக்கள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்..