கிராம நிர்வாக உதவியாளர் பணி நியமனம் வழங்க 10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் மீது குற்றச்சாட்டு!? மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 கோடி வரை லஞ்சம் !?74கிராம நிர்வாக உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடா!? கோ
தமிழகம் முழுவதும் சில தினங்களுக்கு முன்பு உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பித்த நிலையில்
கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் இருவரும் நேர்முகத்தேர்வு நடத்தி நியமனம் செய்து ஆர் டி ஓ மற்றும் டி ஆர் ஓ அவர்கள் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் அதன்பின் மாவட்ட ஆட்சியாளர் பணி நியமன ஆணையை வழங்குவார்.
ஒரு கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு8 லட்சம் முதல் 12 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்துள்ளதாகவும் அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள 2000 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் பணி நியமனம் செய்ததில் 100 கோடி வரை லஞ்சம் பெற்று முறைகேடு நடந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது!
ஒரு கிராம உதவியாளர் பணிக்கு 8 லட்சம் முதல் 12 லச்சம் வரை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாச்சியர் சண்முகம் மற்றும் துணை வட்டாட்சியர் சுந்தர் இருவரும் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு !?
மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி. குத்தாலம், தரங்கம்பாடி இந்த நான்கு தாலுக்காவில் 74 கிராம நிர்வாக உதவியாளர்கள் பணிக்கு சமீபத்தில் நேர்முகத் தேர்வு நடைப்பெற்றது.
https://youtu.be/1QJaOjCCaZM
தமிழகத்தில் அனைத்து தாலுகாவிலும் லஞ்சம் முறைகேடு ஊழல்கள் நடைப்பெற்றதாகவும். குறிப்பாக சீர்காழியில் 16 காலியிடங்களுக்கு. 1500 நபர்கள் விண்ணப்பித்த ஆகவும் அதில் தகுதியில்லாத நபர்களிடம் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு ஒருவருக்கு ரூபாய் 8 முதல் 12 லட்சம் பெற்றுக்கொண்டு சுமார் ஒன்றரைக்கோடி வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு இரவோடு இரவாக பணி நியமனம் செய்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட தகுதியுடைய நபர்கள் சீர்காழி வட்டாச்சியர் சண்முகத்தின் மீதும் துனைவட்டாச்சியர் சுந்தர் மீதும்
இந்த பணி நியமனத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பணி நியமனம் வழங்கி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து செயல்பட்ட வட்டாட்சியர் சண்முகம் மற்றும் துணை வட்டாட்சியர் சுந்தர் அவர்கள் மீது துறை ரீதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முறைகேடாக வழங்கிய கிராம நிர்வாக உதவியாளர் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று
மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் இது சம்பந்தமாக புகார் மனு கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.
இந்த முறைகேடான பணி நியமன ஆணையை நிறுத்த வலியுறுத்தி
நீதி மன்றத்திற்கு செல்லவும் தயாராக உள்ளதாகவும் .கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட அப்பாவிகள்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் 74 கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் சட்டமன்ற உறுப்பினர் சுமார் 10 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு!
மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் மீது கட்சி மூத்த நிர்வாகிகள் உச்சகட்ட கோபத்தில் உள்ளதாக தகவல்!மயிலாடுதுறை மாவட்ட முழுவதும் உள்ள திமுக கட்சி உறுப்பினர்கள் ஆவேசம்!
இந்தியாவிலேயே லஞ்சம் ஊழல் முறைகேடு இல்லாத முதல் மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் கனவை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளும் திமுக கட்சி மாவட்ட முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள்!?
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வந்த சூழலில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 8லட்சம் முதல் 12லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு திமுக கட்சிக்காரர்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
இதை மூடி மறைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் இவ்வாறு செய்துவிட்டார் என்றும், மாவட்ட ஆட்சியர் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் அப்பட்டமாக கூறியுள்ளார்கள். பணியானை செய்யக் கூடிய அதிகாரம் பெற்றவர் வட்டாட்சியர் மேற்பார்வையிட்டு சரியான முறையில் நடக்கிறதா என்று பார்க்கக் கூடியவர் தான் மாவட்ட ஆட்சியர். மேலும், மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சாதமாக செயல்பட்டால் ஏன் எங்கள் உரிமைகள் மாவட்டத்தில் பறிக்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் போராட்டங்கள் செய்யப்போகிறோம்!
என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். சொந்த கட்சிக்காரர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வெறியர்களாக மயிலாடுதுறை மாவட்ட திமுகவினர் உள்ளார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
இது திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் குற்றச்சாட்டு செய்தி!?