குடற்புழு தொற்றிலிருந்து குளைந்தைகள் விடுபட அல்பெண்டசோல் மாத்திரை அவசியம்!14/03 to 19/3 /2022 வரை தேசிய குடற்புழு நீக்க நாள்”
நாள்: 12.03.2022
விருதுநகர்மாவட்டம்.
“தேசிய குடற்புழு நீக்க நாள்” – 14.03.2022 முதல் 19.03.2022 வரை 2 தவணையாக நடைபெற உள்ளது –
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் “தேசிய குடற்புழு நீக்க நாள்” நமது மாவட்டத்தில் இரண்டு தவணைகளாக நடைபெற உள்ளது. முதல் தவணையாக எதிர் வரும் 14.03.2022 திங்கட்க்கிழமை முதல் 19.03.2022 சனிக்கிழமை வரை (15.03.2022 மற்றும் 16.03.2022) தவிர மற்றும் விடுப்பட்ட குழந்தைகளுக்கான குடற்புழு மாத்திரை வழங்கும் நாள் 21.03.2022 (திங்கட்க்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5,65,343 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே,குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.
மதிய உணவு சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து இம்மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்;. இதனால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. இம்மாத்திரைகள் மாவட்டத்தின் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அங்கனவாடி பணியாளர்கள் மூலம் 1 வயது முதல் 19 வயது வரை குழந்தைகளுக்கு;; வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு அக்காப்பகத்திலே அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும்.
1 வயது முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் ½ மாத்திரை வழங்கப்படும். 2 வயதிற்கு மேற்பட்ட 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை வழங்கப்படும். சிறிய குழந்தைகளுக்கு மாத்திரையை நன்றாக பொடி செய்து தண்ணீருடன் கலந்து கொடுக்க வேண்டும். நோய் வாய்பட்டிருந்தால் மாத்திரையை வழங்கக்கூடாது.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி., தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை மலம் கழித்த பின்பும், மண்ணில் விளையாடி முடித்த பிறகும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த குடற் புழுக்களின் முட்டைகள் பல நாட்கள் மண்ணில் இருக்கும்.
குழந்தைகள் விளையாடிய பின்பு கைகழுவாமல் கைகளை வாயில் வைப்பதனால் இந்தப் புழுக்களின் முட்டைகள் வாயின் வழியாக குடலுக்குச் செல்கிறது. இதனால் குழந்தைகளின் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளின் கைவிரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ஏனெனில் நகங்களின் வழியாக இந்த குடறபுழுக்களின் முட்டைகள் குடல் பகுதியை சென்றடையும்.
சுத்தமான தண்ணீர் மற்றும் நன்கு வேகவைத்த அசைவ உணவுகளை உண்பதன் மூலம் குடற்புழுக்களை குறைக்கலாம்.
வீட்டிலுள்ள செல்லப் பிராணிகளுக்கும் இந்த குடற்புழு நீக்கம் செய்யவேண்டும் ஏனென்றால் பிராணிகளின் மீது உள்ள குடற்புழு முட்டைகள் மனிதரின் கைகளின் மூலம் குடல் பகுதியை சென்றடையும்.
குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த பாரம்பரியம் குடற்புழு நீக்க சிகிச்சை முறைகளை செய்வதன் மூலம் குடற்புழுக்கள் வராமல் தடுக்கலாம்.