குழந்தைகளை காவு கொடுக்கும் முன்பு வாடிப்பட்டி மேட்டு நீரேதான் குழந்தைகள் மையம் கட்டிடத்தை அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள அரசு கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்று அறிக்கையால் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் இந்த சுற்றறிக்கையின் மீது இனிமேல் எவ்வளவு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஏனென்றால் சுற்றறிக்கை வந்து சில தினங்கள் ஆகியும் இதுவரை அந்த சுற்றறிக்கை காண நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாடிப்பட்டி பேரூராட்சி 18-வது வார்டு மேட்டு நீரேதான் கிராமம். அங்கு குழந்தைகள் சத்துணவு மையம் உள்ளது .
அந்த கட்டிடம் 25 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது அந்த கட்டிடத்தில் சமையல் அறை உட்பகுதியில் மேலே சென்ட்ரிங் முழுவதும் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது .
அதுமட்டுமல்லாமல் மழை நேரங்களில் அந்தக் கட்டிடத்திற்குள் தண்ணீர் புகுந்து சத்துணவு மையத்திற்கு கொள்ளும் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் தகவலை தெரிவிக்கின்றனர்.
ஆனால் அந்த கட்டிடத்தில் தான் குழந்தைகளுக்கு சமையல் செய்து கொடுத்து வருவதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றனர் இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு ஆபத்து உண்டாகும் என மக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். ஆகவே உடனடியாக குழந்தைகள் மையம் கட்டிடத்தில் உள்ள சமையலறையை இடித்து புதிதாக கட்டித் தர மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் அதே கிராமத்தில் 25 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட பொதுக்களித்துறை முட்புதர் முண்டி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்களின் கூடாரமாக தற்போது இருக்கிறது இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் அந்த வழியில் சென்று வருகின்றனர். ஆகவே அந்த பொதுக் கழிப்பிட கட்டிடத்தையும் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் வாடிப்பட்டி பேரூராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் 25 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் சத்துணவு மையம் முதல் பொதுக் கழிப்பறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள் இதேபோல் பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது இது சம்பந்தமாக இந்த கட்டிடங்களை இடிக்க பல முறை கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமைச் செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பேரூராட்சி நகராட்சிகளில் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை கண்டறிந்து உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.