கெட்டுப்போன சிக்கன் சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 12 பேர்வாந்தி மயக்கம்! மருத்துவமனையில் அனுமதி!
சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பின்பு ஐவிண்ஸ்”ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர் அங்கு சிக்கன் சவர்மா வங்கி சாப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 12 பேர்களுக்கு வாந்தி எடுத்துள்ளனர். அதன் பின்பு அனைத்து மாணவர்களும் மயக்கத்துடன் இருந்துள்ளனர் .உடனே நாமக்கல் அரசு மருத்துவமனையில் 12 மாணவ மாணவிகளையும் ஸ்ரீ சக்தி அனுமதித்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ அவர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அதன் பின்பு மருத்துவர்களிடம் மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட உணவகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தார்கள்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் 12 பேர்கள் நேற்று இரவு நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள “ஐவிண்ஸ்” என்ற தனியார் ஹோட்டல் ஒன்றில் சவர்மா சாப்பிட்டு உள்ளனர்
முன்னதாக இவர்கள் ஐந்து மாணவர்கள் ஆறு மாணவிகள் இந்த உணவை சாப்பிட்டு இருக்கிறார்கள் சாப்பிட்டு வாந்தி மயக்கம் அதற்கு முன்னதாக இவர்கள் ஒரு மாணவியின் பிறந்தநாள் விழாவை நேற்று இரவு கொண்டாடி அதன் பின் இந்த ஹோட்டலில் இரவு 15 பேர்களும் “சவர்மா” சிக்கன் உணவு சாப்பிட்டு உள்ளார்கள்
இந்த உணவில் ஃபுட் பாய்சன் இருந்துள்ளது இதனால் அவர்கள் வாந்தி பேதி எடுத்து இன்று காலை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி தலைமையில் உள்ள மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
இவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெற்றோர்கள் அருகில் வந்து கவனித்து வருகிறார்கள்
இவர்களுக்கான தீவிர சிகிச்சையை மருத்துவ துறையும் தீவிரமாக செய்து வருகிறார்கள்
இதற்கு இடையில் இந்த மாணவ மாணவிகளை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று மதியம் நேரில் வந்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா மருத்துவ மாணவ மாணவிகளை நலம் விசாரித்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று நேரில் விசாரணை செய்தார்
அது மட்டும் இல்லாமல் மருத்துவ மாணவிகள் சாப்பிட்ட இந்த ஜவிண்ஸ் ரெஸ்டாரன்ட் ஹோட்டலுக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச. உமா ஆய்வு செய்து விசாரணை செய்தார்
அவர்கள் உரிய முறையில் அனுமதி பெற்று இருக்கிறார்களா? சுகாதார முறையில் உணவை தயாரிக்கிறார்களா? ஏன் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று உரிமையாளர் நவீன் குமார் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ச.உமா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அந்த ஐவிண்ஸ் ஹோட்டலை பூட்டி சீல் வைத்தனர்.நேற்று இரவு அதே நேரத்தில் சாப்பிட்ட பொதுமக்களும் சிலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வியாபார நோக்கத்தோடு மாணவர்களை குறி வைத்து சிக்கன் ஷவர்மா சிக்கன் கிரில் சிக்கன் தந்தூரி போன்ற துரித உணவுகளை தயாரித்து அதை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கெட்டுப் போனாலும் பரவாயில்லை அதை விரும்பி சாப்பிட வரும் மாணவ மாணவிகளுக்கு கொடுத்து சம்பாதிக்கும் நோக்கத்துடன் தற்போது ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதைக் கண்டும் காணாமல் இருப்பதால் தான் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சாப்பிடுபவர்களின் நலன் கருதி உணவகங்களுக்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாகும்.