காவல் செய்திகள்

கேரள போலி சாமியாரை நம்பி போன திருப்பூரை சேர்ந்த 19 வயது மாணவி மரணம்! போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை!கேரளா முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!

ஆயுர்வேத சிகிச்சைக்கு பெயர் போன மாநிலம் கேரள மாநிலம் ஆகும். ஆன்மீகத்திலும் கேரள மாநிலம் சிறந்து விளங்குகிறது. ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை குறிவைத்து கேரளாவில் ஒரு சில மோசடி கும்பல் பில்லி சூனியம் இருப்பதாக கூறி அதற்கான சிறப்பு பூஜைகள் செய்து அந்த பில்லி சூனியத்தை எடுத்து விட்டால் உங்கள் குடும்பத்தில் சுபிட்சமாக இருக்கும் என்றும் அதற்கான பூஜை செலவு என கூறி பல லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்து வருகிறார்கள் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடி செய்யும் போலி நபர்களை கேரளா மற்றும் தமிழ்நாட்டு காவல்துறையினர் கைது செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இருந்தாலும் தங்களுடைய குடும்ப கஷ்டத்தை போக்க ஒரு சிலர் பில்லி சூனியம் இருப்பதாக நம்பி அந்த பில்லி சூனியத்தை எடுத்தால் தங்கள் தொழில் மற்றும் குடும்பம் நன்றாக இருக்கும் என நம்பும் பணம் வசதி படைத்த ஒரு சிலர் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் பூஜை செய்து வருபவர்களை சந்தித்து தங்களுக்கு பூஜை செய்து கொடுக்குமாறு தேடி செல்வதால் இதை சாதகமாக பயன்படுத்தி போலி ஆசாமிகள் பூஜை செய்வதாக பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

ஐயப்ப சேவ ரத்தினம் பங்கஜாக்ஷ குரு சுவாமிகள் என்ற பெயரில் இயங்கி வரும் இடம்


இந்த நிலையில் தான் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட ஓ பி சி அணியின் நிர்வாகி பழனிச்சாமி இரண்டு மாதத்திற்கு முன்பு பாலக்காடு மாவட்டம் கொல்லங்காடு பகுதி எழவஞ் சேரியில் (Pin code 678508) உள்ள ஐயப்ப சேவ ரத்தினம் பங்கஜாக்ஷ குரு சுவாமிகள் என்ற பெயரில் குறி சொல்லும் சாமியாரிடம் 19/09/2023 அன்று தன் மகள் வளர்மதியை (வயது (19)அழைத்துச் சென்றுள்ளார். அதுவும் சாமியாரை பார்க்க வேண்டும் என்றால் முன்கூட்டியே டோக்கன் பெற்று தான் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் டோக்கன் பெற்று சாமியாரை சந்தித்துள்ளார். சாமியாரும் அந்தப் பெண்ணை அமர வைத்து ஏதோ மந்திரம் செய்து கடைசியாக தீர்த்தம் போல் ஏதோ கொடுத்து குடிக்க சொல்லி இருக்கிறார். அதைக் கொடுத்த பின்பு இனிமேல் எந்த பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது என்று சொல்லி அனுப்பியுள்ளார் சாமியார். தன் மகளை அழைத்துச் சென்று பழனிச்சாமி திருப்பூர் செல்லும் வழியிலேயே தன் மகள் மயக்கம் அடைந்து சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தன் மகள் இறந்துள்ளார். உடனே பழனிச்சாமி தன் மகள் இறந்த சம்பவத்தை கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் பழனிச்சாமி. புகாரை பெற்றுக் கொண்ட கொல்லங்கோடு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்பு 19 வயதான பெண் எப்படி இறந்தார் என்று கேரளா கொல்லங்கோடு காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி சாமியார் மீது எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்காததால் எதை பற்றியும் கவலைப்படாமல் ஆசிரமத்தில் சாமியார் வழக்கம் போல குறி சொல்லி வருகிறார் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர் . ஆகவே கேரளா முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!

இந்த போலி சாமியாரைப் பற்றி அந்தப் பகுதியில் உள்ள ஒரு சிலரிடம் விசாரித்த போது தற்போது ஆசிரமம் வைத்து குறி சொல்லி வரும் இவர் 30 வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக பில்லி சூனியம் எடுப்பதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக பல புகார்கள் இவர் மீது கொடுக்கப்பட்டு இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததாகவும் அதன் பின்பு அந்தப் பகுதி மக்கள் இவரைப் பற்றி மறந்துவிட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு. ஐயப்ப சேவ ரத்தினம் பங்கஜாக்ஷ குரு சுவாமிகள் என விளம்பர பதாகை வைத்து திடீரென்று ஆசிரமம் வைத்து மறுபடியும் தனது பழைய மோசடி தொழிலை ஆரம்பித்துள்ளதாகவும் இது தெரியாத பலர் இவரிடம் வந்து குறி கேட்க செல்வதாகவும் இதனால் இவர் கொடுப்பதை சாப்பிட்டு பல பேர் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் தன் மகளைப் பறிகொடுத்த பழனிச்சாமி புகார் கொடுத்ததற்கு பின்பு சாமியாரின் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித முயற்சி எடுக்கவில்லை என்றும் அதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் சாமியார் அவருக்கு தெரிந்த ஒரு சில முக்கிய புள்ளிகளை வைத்து இவரை மிரட்டுவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது . ஆனால் இது சம்பந்தமாக நடந்ததை விசாரிக்க மரணமான வளர்மதி தந்தை திருப்பூர் பழனிச்சாமியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அவர் தொலைபேசிய எடுத்து பதில் சொல்ல மறுக்கிறார். 19 வயது மகளை இழந்த தந்தை தன் மகள் இறந்ததற்கு சாமியார் தான் காரணம் என வெளிப்படையாக பத்திரிக்கைக்கு சொல்வதற்கு அச்சம் படுவது எதனால் என்ற மர்மம் நீடித்துக் கொண்டுள்ளது. ஆகவே கொல்லங்கோடு காவல் நிலைய காவல் உயர் அதிகாரிகள் மரணம் நடந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டால் மட்டுமே சாமியாரைப் பற்றியும் 19 வயது மாணவி எப்படி இறந்தார் என்று உண்மை தெரியவரும். எது எப்படியோ சட்டவிரோதமாக குறி சொல்லி மாந்திரீகம் என்ற பெயரில் உயிர் பறிபோகும் நிலை தொடர்ந்து நடந்து வருவதை தடுக்க கேரள மாநில பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
அது மட்டும் இல்லாமல் குறி மற்றும் பில்லி சூனியம் இருப்பதாக கூறும் போலி நபர்களை நம்பி தமிழகத்திலிருந்து செல்லும் பாமர மக்கள் மற்றும் பணம் வசதி படைத்த ஒரு சிலர் பாதிக்கப்படுவதால் தமிழ்நாட்டு காவல் துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் குறி சொல்வதாக விளம்பரம் செய்யும் கேரளா போலி மோசடி கும்பல் மீது தமிழக காவல்துறையும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மோசடி சாமியாரின் லீலைகள் பற்றி தொடர்ச்சி விரைவில்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button