கொடிகட்டி பறக்கும் இலஞ்சம்! 20 முதல் 30 சதவீதம் வரை கராராக கரன்சி வாங்கும் புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர்! குழு குழு அறையில் நகராட்சி ஆணையர்!!

லஞ்சம் கொடிகட்டி பறக்கும் புதுக்கோட்டை நகராட்சி!?நகராட்சியில் நடக்கும் பணிகளுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை கரன்சி லஞ்ச வாங்கும் புதுக்கோட்டை நகராட்சி பொறியாளரை கடிவாளம் போடுவது யார்!?
பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குளுகுளு அறையில் தூங்கி வழியும் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜ்.

புதுக்கோட்டை நகராட்சியில், நகராட்சி ஆணையரை நியமிக்காமல் பொறுப்பு ஆணையர் மூலமாகவே 2021 ஜூன் மாதாம் வரை கடந்த அதிமுக ஆட்சியில் பத்து வருடங்களுக்கும் மேலாக நகராட்சி இயங்கி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் புதிதாக பொறுப்பு நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாலும் அவர்களும் ஒரு சில மாதங்களே புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் சூழ்நிலை இருந்து வந்த நிலையில் கடந்த 22/07/21 ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு மேல் நாகராஜ் அவர்கள் புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணியில் இருக்கிறார். இதற்கு முன்பு தேனி நகராட்சி ஆணையராக நாகராஜ் அவர்கள் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம் கொடிகட்டி பறக்கும் புதுக்கோட்டை நகராட்சி!
புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் 23 வார்டு கவுன்சிலர்கள் . ஒரு வார்டு கவன்சிலராக மதிமுக சேர்ந்தவர், திமுக 3 வார்டுகளில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 8 வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்களும் , 6 வார்டுகளில் சுயேச்சை கவுன்சிலர்கள் ஒரு அமமுக கவுன்சிலர் தற்போது இருக்கின்றனர்.
. இந்த 42 வாரங்களில் மக்களின் அடிப்படைத் தேவையான அன்றாடம் பயன்படுத்தும் குடிதண்ணீர் தொடர்ந்து வழங்குவதில் தோல்வியை தழுவி வரும் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் . புதுக்கோட்டை நகர் வீதிகளில் கழிவு குப்பைகள் சரியாக அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகின்றது .மேலும் சாலைகள் பழுதடைந்து கொண்டும் தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் ஒரு சில இடங்களில் பல நாட்களாக பழுதடைந்து பராமரிப்பின்று காணப்படுகிறது.
கழிவு நீர் செல்லும் கால்வாய்களில் கழிவுதேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
புதுக்கோட்டை நகராட்சியில் குடிதண்ணீர் ,மின்சாரம் ,சாலை ,கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்தல் ,கழிவு குப்பைகளை அகற்றுதல் , இந்த ஐந்து பணிகள் அன்றாடம் புதுக்கோட்டை நகராட்சியில் கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது. ஆனால் இவை எல்லாவற்றிலும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறது புதுக்கோட்டை நகராட்சி.
இதற்கெல்லாம் காரணம் யார் என்று விசாரித்தால் புதுக்கோட்டை நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்து வரும் PT.சேகரன் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

பொறியாளர் டிடி சேகரனை பற்றி அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சி தரும் தகவலை கூறுகின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர் பிடி சேகரன் லஞ்சம் வாங்குவதில் மட்டும் முதலிடம் வகிக்கிறார் என்றும் நகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்குவது முதல் புதிதாக எந்த வேலை நடக்க வேண்டும் என்றாலும் பொறியாளர் சேகரன் தலையசைத்தால் மட்டுமே நகராட்சியில் டேபிளில் இருக்கும் கோரிக்கை மனு அடுத்த நிலைக்கு தள்ளப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மேலும் நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்தல் ,புதிய வீடு கட்ட வேண்டும் என்றால் கட்டட வரைவு (பிளான் அப்ரூவல்) வாங்குவதற்கு லகர கணக்கில் லஞ்சம்வாங்கி குவிப்பதாகவும் பிடி சேகரன் மீது குற்றச்சாட்டு
மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது .
நகராட்சி நிர்வாகத்திற்கு எந்த ஒரு பணியையும் செய்ய வேண்டும் என்றால் ஒப்பந்தக்காரர்கள் பொறியாளர் சேகரனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு கூடுதலாக பல வைட்ட மின் (வயகரா)மாத்திரைகளையும் சிறப்பாக இவருக்கென்று அயல்நாடுகளில் இருந்து வரவழைத்து கொடுப்பதாக வளர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது.
மேலும் நகராட்சி ஆணையர் நாகராஜன் குளுகுளு ஏசி அறையில் எப்பொழுதும் தஞ்சம் அடைந்து கொண்டு போண்டா பஜ்ஜி ஸ்னாக்ஸ் சூடான காபி & டீ அருந்துவதில் மட்டுமே அன்றாட பணியாகும்.
மக்கள் பிரச்சனையை எப்படி சரி செய்ய வேண்டும் மக்களின் பிரதான கோரிக்கையான குடிநீர் பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் தற்போது மழை காலம் என்பதால் கொசுக்கள் அதிகமாக இருப்பதால் தொற்றுநோய் பரவாமல் இருக்க தேங்கி கிடக்கும் கழிவு குப்பை கைகள் கழிவு நீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை எப்படி சரிசெய்ய வேண்டும் யார் யாருக்கு எந்த மாதிரியான வேளையை வழங்கி பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் புதுகை நகரில் சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை எவ்வாறு அப்புறப்படுத்தி சரிசெய்ய முடியாமல். பொதுமக்களை கடித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார் நகராட்சி ஆணையர் .
நகராட்சி ஆணையர் என்ற பதவிக்கு தகுதி இல்லாத நபர் என்று சமூக ஆர்வலர்கள் இவரைப் பற்றி பேசாத நாட்கலே இல்லையாம்.
அப்படி தினம் தினம் புதுக்கோட்டை நகராட்சி மீது பொதுமக்கள் கடும் கோபத்தின் உச்சிக்கே சென்று உள்ளனர் .தற்பொழுது மழைக்காலம் என்பதால் மலை நீர் செல்லக்கூடிய தோரண வாய்க்கால் உள்ள மண்களை சமிபத்தில் அள்ளப்பட்டு அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே போட்டுவிட்டு அலட்சியமாக சென்றதால் மீண்டும் கன மழை பெய்த போது அந்த மணலானது அதே தோரண வாய்க்காலில் நிரம்பி அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் மழை நிர் உடன் கழிவு நீரும் நிரம்பி வழிவதாகவும் பாதாள சாக்கடை திட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் தோல்வியே தழுவிய நிலையில் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் என்னென்ன குறைகள் உள்ளன மக்களின் பிரதான கோரிக்கைகள் என்ன அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று ஆணையருக்கு எதுவும் தெரியாமல் இருந்து வருவதாக பலர் புலம்புகின்றனர்.
.இது ஒரு புறம் இருக்க சாலைகளை எப்படி சீரமைக்க வேண்டும் மழைக்கால வடிகால் நீரை எப்படி சரி செய்ய வேண்டும் போன்றவற்றை செய்யாமல் லஞ்சம் வாங்குவதிலே முடிசூடா மன்னனாக வலம் வரும் நகராட்சி பொறியாளர் சேகரன் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் பார்வை கூடிய விரைவில் படுமா ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர் .
கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆண்டு புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கிர் பாஷா நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தம் நிறுவனமான மதுரை மீனாட்சி நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்ய பல லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதுக்கோட்டை நகராட்சிகளில் சரியாக வேலை பார்ப்பது போல வெளியே காட்டிக் கொண்டு உள்ளே நகராட்சி பொறியாளர் லஞ்ச வசூலில் கராராக இருப்பதாக புதுக்கோட்டை நகராட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும் பேசிக்கொள்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.