அரசு நலத்திட்டங்கள்

கொரோனா மற்றும் சாலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 2.87 கோடி நிவாரண நிதி வழங்கிய முதல்வர் !

இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எவர்வின் பள்ளியில் 560 பயனாளிகளுக்கு ரூபாய் 2.87கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மற்றும் பெரியார் நகர் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் ஜி கே எம் காலனி யில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மேஜைகள் மற்றும் நாற்காலிகள் முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 5 பயனாளிகளுக்கு திருமண உதவி நிதி உதவி இரண்டு பயனாளிகளுக்கு வங்கி கடன் மானியம் தையல் இயந்திரங்கள் 197 பயனாளிகளுக்கு

முதியோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள்  ஓய்வூதியம் பெறுவதற்கு ஆணை வழங்கப்பட்டது.

மற்றும்
சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த 312 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி.

5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி . கொரோனா தோற்றால் பெற்றோர்களை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி .

என 560 பயனாளிகளுக்கு 2.87 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை முதல்வர் வழங்கினார் .


தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகர் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு அவசர கால ஊர்தியையும் ,கொரோனா தடுப்பு ஊசி பணிக்காக இரண்டு வாகனங்கள் சேவைகளையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
210 நபர்கள் அமரக்கூடிய மூன்று இருக்கைகள் கொண்ட 70 நாற்காலி களையும் மருத்துவமனை பயன்பாட்டிற்கு முதல்வர் வழங்கினார்.
கொளத்தூர் ஜி கே எம் காலனியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் 34 ஆசிரியர்களுக்கு  சிறப்பு செய்தார்.
மேலும் அப்பள்ளியில் கட்டுமான கட்டடங்களை கட்டுவதற்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மூலம் வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியை மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் கேவி ராமமூர்த்தி அவர்கள் முதல்வரிடம் வழங்கினார்.
மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பாக 1500 மாணவர்கள் அமரும் வகையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்காலிகள் மேஜைகள் பள்ளி பயன்பாட்டிற்கு முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி,அமைச்சர் சேகர் பாபு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் IAS
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.விஜயராணி IAS அவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button