கொரோனா தடுப்புப் பிரிவு

கொரோனா மூன்றாவது அலை விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்

(01.08.2021) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வார துவக்க விழாவை மாண்புமிகு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் கொரானா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் 31.07.2021 அன்று கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் மாண்புமிகு ஊரக தொழிற்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து டி.பி.சி. பணியாளர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளையும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.  அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலை மற்றும் பண்பாட்டு துறையின் சார்பில் திரு.சிட்டுவின் அறிவொளி தீபம் கலைக்குழுவினரின் கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.  அதன் பின்னர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கை கழுவும் முறை மற்றும் கைகளை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன எல்.ஈ.டி. வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்ட கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை மாண்புமிகு ஊரக தொழிற்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.எஸ்.எம்.திவாகர், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.அனுராதா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.முத்து மாதவன், குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.முகமது ரிஸ்வான், குன்றத்தூர் முன்னால் பேரூராட்சி தலைவர் திரு.சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button