கொலை செய்த மகன்களை காப்பாற்ற கொலையாளிகளாக அப்ரூவரான அப்பா& அம்மா! வினோத சம்பவம்!உண்மையான கொலை குற்றவாளிகளை தேடும் மதுரை சோழவந்தான் காவல்துறை!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசித்து வரும் சதீஷ் என்ற சிவாஜி 45 கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்! இவரது மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். அதனால் சதீஷின் மனைவி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சென்று வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் 4/10/2024 வெள்ளிக்கிழமை அன்று இரவு செக்கானூரணியில் வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் சோழவந்தான் மேலக்கால் கணவாய் கருப்பு கோவில் அருகே வந்தபோது டாட்டா குட்டி யானையில் கொத்தனார் சதீஷின் சித்தப்பா மகன்கள் 3 பேர் மற்றும் கூட்டாளிகள் 4 மொத்தம் 7 பேர் பின் தொடர்ந்து வந்து சக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். நிலை தடுமாறி கீழே விழுந்த சதீஷின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி சரமாரியாக வெட்டியதில் கொத்தனார் சதீஷ் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
இதனைத் தொடர்ந்து காடுபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கிடந்த கொத்தனார் சதீஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
ஆனால். அவர் செல்லும் வழியிலேயே உயிரிலிருந்து விட்டார்.
உடனே கொத்தனார் சதீஷின் உடலை உடல் பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட சதீஷின் சித்தப்பா மகன்கள் மற்றும் கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் தங்களது மகன்களை காப்பாற்றுவதற்கு கொத்தனார் சதீஷை கொலை செய்தது நாங்கள் தான் என சதீஷின் சித்தப்பா மற்றும் சித்தி இருவரும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதை எடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து மேலும் கொலை செய்த ஏழு குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலை நடந்த சம்பவம் பற்றி மேலக்கால் கிராம பகுதியில் உள்ள ஒரு சிலர் கூறும் போது கொலை செய்யப்பட்ட சதீஷ் இன் அப்பாவிற்கும் அவருடைய சித்தப்பாவிற்கும் பொதுவில் ஒரு இடம் இருப்பதாகவும் அந்த இடத்தில் கோவில் கட்டலாம் என சதீஷ் சித்தப்பா கூறியதாகவும் அதற்கு சதீஷ் மறுத்து பிரச்சினை செய்து வந்ததாகவும் இதனால் கொத்தனார் சதீஷ் மற்றும் அவருடைய சித்தப்பா குடும்பத்தினருக்கும் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சதீஷ் சித்தப்பா வீட்டிற்கு சென்று சித்தப்பா முருகன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த சித்தப்பா முருகனின் மகன்கள் மூன்று பேர் சதீஷை கொலை செய்ய திட்டமிட்டு ஒரு வாரமாக சதீஷ் எங்கு செல்கிறார் எப்பொழுது செல்கிறார்? எதில் செல்கிறார் என நோட்டமிட்டு வந்துள்ளனர். மட்டுமில்லாமல் கொலை செய்வதற்கு முருகனின் மகன்கள் மூன்று பேர் தங்களது கூட்டாளிகள் நான்கு பேரை சேர்த்துக்கொண்டு டாட்டா ஏசி குட்டி யானை வண்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷை பின்தொடர்ந்து சதீஷை வெட்டி கொலை செய்துள்ளனர் என தகவலை தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ பங்காளிகளுக்குள் சொத்து பிரிக்கும் பிரச்சனை கொலையில் முடிந்ததால் இச் சம்பவத்தால் மேலக்கால் கிராம மக்கள் அப்பகுதி முழுவதும் பதற்றத்துடன் இருந்து வருகின்றனர்!