Uncategorized

கோடியில் கொடி கட்டி பறக்கும் குமரி மாவட்டப் பத்திரப்பதிவு அலுவலகம்.
அடக்க நினைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!அடங்க மறுக்கும் பத்திரப்பதிவு சார் பதிவாளர்கள் !
சவால்களை சாதித்து காட்டுவாரா பத்திரப்பதிவு துறை ஐஜி!

கோடியில் கொடி கட்டி பறக்கும் குமரி மாவட்டப் பத்திரப்பதிவு அலுவலகம்.
அடக்க நினைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!அடங்க மறுக்கும் பத்திரப்பதிவு சார் பதிவாளர்கள் !
சவால்களை சாதித்து காட்டுவாரா பத்திரப்பதிவு துறை ஐஜி!

லஞ்சம் வாங்காமல் தங்கள் வேலை செய்யப் போவதில்லை என்ற சபதத்துடன் செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட பத்திரப்பதிவு சார் பதிவாளர்கள்!

சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் 12 அரசுத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 41000/- ரூபாய் லஞ்சப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் லஞ்சமாக வாங்கிய பல லட்ச ரூபாய் மறைக்கப்பட்டிருப்பதை அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்திரப்பதிவு செய்து கொடுக்க லஞ்சம் கேட்ட சார்பதிவாளர்.
லஞ்சம் கொடுத்து என்னுடைய பத்திரத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் என்னுடைய தாயை எப்படி காப்பாற்றப் போகிறேன் என்று கூறிக்கொண்டே கண்ணீர் மல்க வெளியே வந்த நபரைப் பார்த்து காண்போரை கண்கலங்க வைத்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொன்னீஸ்வரன் என்ற நபர் தன்னுடைய தாயின் மருத்துவ செலவிற்காக கணபதி நகரில் உள்ள இடத்தை விற்க பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளார். அங்குள்ள சார் பதிவாளர் இந்த இடம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதனால் இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தில் ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே பத்திர பதிவு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டதாகவும். ஆனால் அதே சர்வே நம்பரில் வாங்கிய வேறு மூன்று நபர்களுக்கு இடத்தை விற்க பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார். இவருக்கு மட்டும் பத்திரப்பதிவு செய்து கொடுப்பதற்கு பத்து சார் பதிவாளர் ஃபார்மாலிட்டி எதிர்பார்ப்பதாகவும் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்து கொடுத்ததற்கு பெரிய தொகை பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததால் என் தன்னிடமும் பெரிய தொகை லஞ்சமாக எதிர்பார்ப்பதாகவும் கடந்த 25 நாட்களாக இரண்டு மூன்று சார் பதிவா அலுவலர்கள் மாறி மாறி வருகின்றனர். வருகின்ற அனைவருமே லஞ்சம் எதிர்பார்த்து பேசுவதாகவும் தன்னுடைய குமுறலை பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளருக்கு முன் பாதிக்கப்பட்ட பொன்னி ஸ்வரன் கூறியது..
பதிவாளராக பணி செய்பவர் திருமலை இவரிடம் பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்றால் பத்திரம் பதிவு செய்ய செல்கின்றவர்கள் முதலில் அவருடைய
உதவியாளரிடம் பதிவாளருக்கான தொகையை கொடுத்தால் மட்டுமே அந்தப் பத்திரம் பதிவு செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய தாயின் மருத்துவ செலவிற்காக ஒரு பெரும் தொகை தேவைப்படுவதால் தன் தாயார் பெயருக்கு இருக்கும் பத்திரத்தை விற்பனை செய்வதற்காக அந்தத் தாயும் அவருடைய மகனும் அந்த இடத்தை விலைக்கு வாங்குபவரும் சென்றிருந்தனர்
அவர்களிடத்தில் உதவியாளர் பதிவாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறவே நேரடியாக பதிவாளர் இடம் சென்று தன் குடும்ப நிலையை எடுத்துக் கூறி பத்திரத்தை பதிவு செய்து தருமாறு கேட்டனர் ஆனால் அந்த ரிஜிஸ்டர் பத்திரம் பதிவு செய்ய வேண்டுமென்றால் மாவட்ட பத்திரப்பதிவு பெண் மேலாளருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கொடுக்க வேண்டும் அப்படி கொடுத்தால் மட்டுமே உன்னுடைய பத்திரம் பதிவு செய்யப்படும் என்று கூறவே பத்திரப்பதி அதிகாரிக்கும்
தாயின் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது உடனே பத்திரப்பதிவு அலுவலர் நீ என் அலுவலகத்தில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் உன்னால் முடிந்ததை செய்து கொள் என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் நான் மாவட்ட பத்திரப்பதிவு பெண் மேலாளருக்கு கப்பம் கட்டிவிட்டுதான் இங்கு வேலை செய்கிறேன்
எனவே எனக்கு ஒன்று என்றால் என்னுடைய மேலாலரும் மார்த்தாண்டத்தில் வேலை பார்க்கும் அதிகாரியும் என்னை பாதுகாத்துக் கொள்வார் என திமிரடனும் அதிகாரத்துடனும் கூறியதாக சொல்லப்படுகிறது.
பத்திரபதிவு செய்ய நீதிமன்ற ஆணையிருந்தும் சரியான ஆவணங்களை கொண்டு வா என உரிமையில் பேசுவதோடு கடந்த 25 நாட்களாக அலைக்கழிப்பதால்
மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளதாக தெரிவித்ததுடன்
தமிழ்நாட்டில் பத்திர பதிவு செய்ய வேண்டும் என்றால் இவ்வளவு பெரிய தொகை லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு நடைபெறும் என்றால் அப்படிப்பட்ட ஒரு பத்திர பதிவு எனக்கு வேண்டாம்,
என்னுடைய தாயின் மருத்துவ செலவை நான் பிச்சை எடுத்துப் பார்த்துக் கொள்கிறேன் ஆனால் இது போன்ற பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்னுடைய தாயை இறைவன் பாதுகாத்துக் கொள்வார் என்று கூறிக்கொண்டே கண்ணீரோடு வெளியே வந்தார்.
இதனால் பத்திர பதிவு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பத்திரபதிவுக்காக காத்து இருந்தவர்கள்
நேற்று தான் கொட்டாரம்
பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையில் பல ஆயிரம் ரூபாய் சிக்கியது!!!
ஆனால்
இந்த அதிகாரி பலே கில்லாடி தான் என புலம்பினர்,
எனவே தமிழக முதல்வர் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஏதோ ஒரு தேவைக்காக தன்னுடைய நிலத்தை விற்பனை செய்யும் பொதுமக்களை இதுபோன்ற அதிகாரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது.

நடவடிக்கை எடுப்பாரா? தமிழக முதல்வர்
மற்றும் துறை சார்ந்த அமைச்சர் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.

தமிழக அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் விளைநிலங்கள் அனைத்தையும் வீட்டு மனைகளாக பதிவு செய்யும் பலே ஊழல் ராணிகளான
ஸ்வீட்லின் பிளாரன்ஸின் கைக்கூலியும்,
கட்டப்பஞ்சாயத்து செய்யும் பெண்மணியும், மேலாளருமான நாகேஸ்வரி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 25 ஆண்டு காலமாக பணிபுரியும் ஸ்வீட்லின் பிளாரன்ஸ் மற்றும் அலுவலகத்திற்கு இரண்டு மணிக்கு வேலைக்கு வருபவரும், ஸ்வீட்லின் பிளாரன்ஸின் கைக்கூலியாக செயல்படும் பெண்மணியும், மேலாளருமான நாகேஸ்வரி இவர்கள் இருவரும் சேர்ந்து 16.02.2023-ம் தேதியன்று அன்வர் அலி என்பவரிடமிருந்து சுமார் 35 லட்சம் ரூபாய் லஞ்சப் பணமாக பெற்றுக்கொண்டு அவருக்கு சார்பதிவாளர் பொறுப்பில் இருந்து பத்திரங்களை பதிவு செய்யும் பொறுப்பினை வழங்கியுள்ளனர். இதில் அன்வர் அலி என்பவர்
அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் விளைநிலங்கள் அனைத்தையும் வீட்டு மனைகளாக பதிவு செய்து
ஸ்வீட் லின் பிளாரன்ஸ், பெண் மேலாளர் நாகேஸ்வரி இவர்கள் இரண்டு பேருக்கும் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் குமரி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இல்லாத விளைநிலங்களை பதிவுசெய்ய வேண்டுமென்றால் இவர்களை தொடர்பு கொண்டால் மட்டும் போதும். உடனே அந்த நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து விடுவார்கள் என்று அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஐஜி அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! அதிலும் பெண் மேலாளர் நாகேஸ்வரி மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படுமா??
என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குமரியில் இரண்டு பத்திரபதிவு பெண் அதிகாரிகளால் தலைவிரித்தாடும் லஞ்சம்!!!!!!
தமிழகம் முழுவதும்
லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையிட்டும்


.

Related Articles

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button