கோமாவில் (rest house)இருக்கும் மதுரை உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம்!? அனுமதியில்லாமல் முறைகேடாக நான்கு மாடி கட்டிடம் கட்டி உள்ள ஜெய்சி ரெடிமேட் ஜவுளிக்கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுப்பாரா உசிலம்பட்டி நகராட்சி ஆணையர்!??
கோமாவில் (rest house)இருக்கும் மதுரை உசிலம்பட்டி நகராட்சி!?? அலுவலகம்!? சட்டவிரோதமாக விதிகளை மீறி புற்றீசல் போல அடுக்குமாடி கட்டிடங்கள் அனுமதியில்லாமல் கட்டுவதற்கு பல லட்சங்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் உசிலம்பட்டி நகராட்சி அலுவலக அதிகாரிகள்!??
நடவடிக்கை எடுப்பாரா சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்!??
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகைக்கடை பஜாரில் இயங்கிவரும் ஜெய்சி ரெடிமேட்கடை எனும் ஜவுளி கடை உரிமையாளர் திருப்பதி என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் 100 சத்ரடியில் சிறிய கடை வைத்து அந்த கடைக்கு நகராட்சியில் பணம் செலுத்தி ரசீது வாங்கி வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறி இடத்தில் இருந்த கடையை இடித்துவிட்டு புதியதாக 4 மாடி கட்டிடம் கட்டி முடித்து ஜெய்சி ரெடிமேட் கடையை விரிவுபடுத்தி தற்போது நடத்திவருகிறார் திருப்தி .
ஆனால் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால்
இந்த 4மாடி கட்டிடம் கட்ட உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முறையாக கட்டிட வரைபட அனுமதி பெறாமல் அரசு விதிகளை மீறி 10 அடி தெருவில் 10 அடி அகலமுள்ள இடத்தில் சட்டவிரோதமாக முறைகேடாக நான்கு மாடி கட்டிடத்தை கட்டி உள்ளதாகவும் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கேட்டதற்கு என் இடத்தில் நான் எத்தனை மாடி கட்டிடம் வேண்டுமானாலும் கட்டுவேன் . நகராட்சியில் ஏன் அனுமதி வாங்க வேண்டும் என்றும் இந்த நான்கு மாடிக் கட்டிடத்திற்கு அனுமதி வாங்கவில்லை என்றும் நான் ஒன்றும் நான்கு மாடி கட்டுவதற்கு முட்டாள் இல்லை எனக்குத் தெரிந்த இன்ஜினியரை வைத்து கட்டிடத்தை கட்டி உள்ளேன் என்றும் உசிலம்பட்டியில் 10 மாடி வரை கட்டிடம் கட்டி உள்ளார்கள் அதற்கெல்லாம் உசிலம்பட்டி நகராட்சிகள் அனுமதி வாங்கி உள்ளார்களா என்றும் நான் மட்டும் நான் நான்கு மாடி தான் கட்டியுள்ளேன் இதற்கு நான் அனுமதி வாங்க வேண்டுமா என்று கூறுகிறார்.
இப்படி நான்கு மாடி கட்டிடம் கட்டிய பின்பு நகராட்சிக்கு கடந்த இரண்டு வருடமாக எந்த வரியும் கட்டவில்லையே அப்படி என்றால் நகராட்சி அதிகாரிகளை ஏமாற்றுகிறாய் என்று கேட்டதற்கு உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள வரைபட அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் உங்களிடம் வரைபட அனுமதி நகலை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் விதிகள் மீறி கட்டியுள்ள நான்கு மாடி கட்டிடம் என்று எங்கு வேண்டுமென்றாலும் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள்.
நான் அதற்கெல்லாம் பயந்து இந்தக் கட்டிடத்தைக் கட்டவில்லை என்று கூறிவிட்டார்.
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் கேட்டபோது அந்தக் கட்டிடத்திற்கு நாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும் அது சட்ட விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது என்றும் இதற்கு முன்பு இருந்த நகராட்சி ஆணையர் தற்போது பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சில மாதங்களாக புதிய நகராட்சி ஆணையர் வந்துள்ளதாகவும் சரியான பதிலை தர மறுத்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதைப் பற்றி களத்தில் இறங்கி விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்களை நமக்கு அப்பகுதி மக்கள் அது என்னவென்றால் தற்போது உசிலம்பட்டியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதால் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் உசிலம்பட்டியில் இடத்தை வாங்கி கட்டிடங்களை கட்டி வருகின்றனர் என்றும் சில வருடங்களாக உசிலம்பட்டி நகராட்சியில் ஈசல் போல் பல மாடிகள் உள்ள பல கட்டிடங்கள் சட்டவிதிகளை மீறி அரசுக்கு எதிராக கட்டி உள்ளதாகவும் இதற்கெல்லாம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரைபட அனுமதி அதிகாரி சதுரடிக்கு முப்பது ரூபாய் என்ற கணக்கில் பல மாடி கட்டிடத்திற்கு பல லட்ச ரூபாய் வரை லஞ்சம் வாங்கி கொண்டு பல கட்டிடங்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்கியும் சில கட்டிடங்களுக்கு வழங்காமலும் வருகின்றனர் என்றனர் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட சாமானிய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
எது எப்படியோ தற்போது நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி அலுவலகத்தில் உட்காரும் நகராட்சி சேர்மன் அவர்கள் இதுபோன்று சட்டவிரோதமாக விதிகளை மீறி கத்தி உள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்தக் கட்டிடங்களை கட்ட உறுதுணையாக இருந்த நகராட்சி வரைபட அனுமதி அதிகாரிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பல முறைகேடுகள் அதிமுக ஆட்சியில் நடந்து வந்ததாகவும் ஆனால் தற்போதுள்ள திமுக ஆட்சியில் அதுபோல முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!