கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் அவதியில் பக்தர்கள்! அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா!?
முருகனின் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனால், ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கந்தனுக்கு அரோகரா.. தண்டாயுதபாணிக்கு அரோகரா என்ற மக்களின் முழக்கங்களுக்கு இடையே தங்க விமானத்தில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின்போது ராஜகோபுரம், தங்க விமானம் மற்றும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மலர் தூவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பழனி திருக்கோயிலின் அலட்சிய போக்கு பரிதவிப்பில் பக்தர்கள்*
*கண்டுகொள்ளுமா பழனிதிருக்கோயில் நிர்வாகம்?
பழனிஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய மலைகோயிலுக்குபல்லாயிரக்கணகான பக்தர்கள்100 கட்டன சீட்டு பெற்று கொண்டு சுவாமியை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கோடைவெப்பத்தின் தாக்கம்அதிகரித்து வரும்நிலையில் பக்தர்கள் வெயிலில் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் அவலநிலை அதிகம் காணப்படுகின்றது பக்தர்கள் நலன் கருதி மலைகோயில் பகுதியில் நிழல்பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்;பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்*