கோவில் பசு ஐந்து நாட்களாக காணவில்லையா!?புதுக்கோட்டை திருகோரணம் ஶ்ரீ பிரகதாம்பாள் கோவில் நிர்வாகம் தேடுவதாக தகவல்!?
காணாமல் போன கோவில் பசுவை ஐந்து நாட்களாக புதுக்கோட்டை திருகோரணம் ஶ்ரீ பிரகதாம்பாள் கோவில் நிர்வாகம் தேடுவதாக தகவல்!?
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்களும் அதற்கு பல வரலாறுகளும் உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல புகழ்பெற்ற கோயில்கள் உள்ளது
அதேபோல புதுக்கோட்டையில் உள்ள புகழ் பெற்ற
திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதம்பாள் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் நிச்சயமாக பக்தர்கள் பசுவை காணிக்கையாக வழங்கி வருவது வழக்கம்!
காணவில்லையா!?
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து 5ந்து நாட்களாக கோவில் பசு காணவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்!
‘இதுவரை கோவில் பசு காணவில்லை என்று பிரகதாம்பாள் கோவில் நிர்வாகம் திருக்கோகரணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்ற தகவலும் வந்துள்ளது.
காணவில்லை என்று பக்தர்கள் கூறும் கோவில் பசுவை ஆலயத்தின் நடைவாசல் திறக்கும்முன் நிற்கவைத்து நடை திறப்பது வழக்கம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
காணாமல் போன கோவில் பசுவை பற்றி கோவில் நிர்வாகத்தில் உள்ள ஊழியர்கள் குறி கேட்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
உடம்பில் காயத்துடன் இருக்கும் பசுவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டதற்க்கு தவறான செய்தி என்று காவல் நிலையத்திற்க்கு சென்று புகார் கொடுத்த கோவில் நிர்வாக செயல் அலுவலர் பசு காணவில்லை என்று தகவல் தெரிந்தவுடன் இந்து சமய அறநிலை துறை உயர் அதிகாரிகளுக்கும் காவல் நிலையத்திற்கும் கோவில் நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளார்களா என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பசு காணவில்லை என்ற தகவலுக்கு இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!
Ищете доступ к игре? Скачайте 1xslots на телефон и начните выигрывать.
Сначала потренируйтесь на Lucky Jet демоверсия, чтобы понять, как лучше всего действовать.