காவல் செய்திகள்

கோவை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இளம் காதல் ஜோடி நகை செயின் வழிப்பறி செய்து வந்த அதிர்ச்சி சம்பவம்! கண்டு பிடித்துக்கைது செய்த தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு !

கோவை மாவட்டம்
பேரூர் உட்கோட்டம்
தொண்டாமுத்தூர் காவல் நிலையம்

………………………………………….
கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீயணைப்புத்துறை அருகே சுடுகாட்டில் கடந்த 28.04.2022 ஆம் தேதி மதியம் சுமார் 14.30 மணி அளவில் காளியம்மாள் (65)
என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது முகவரி கேட்பது போல் கழுத்தில் இருந்த சுமார்
5½ சவரன் தங்கச் சங்கிலியை கழற்றி எடுத்து Jupiter என்ற இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 20 வயது ஹெல்மெட் அணிந்த பெண் வாகனத்தை ஓட்ட 20 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் பின்னால் அமர்ந்து தப்பிச் சென்றுவிட்டனர்.இந்த குற்றம் சம்பந்தமாக தொண்டாமுத்தூர் காவல்நிலைய குற்ற எண் 130/2022 u/s 392 IPC என வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர் .

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் காவல்- துணை கண்காணிப்பாளர் திருமால் மேற்பார்வையில் தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் மற்றும் காவலர்கள் Gr-1- 1409 கண்ணதாசன், Gr1- 2170 சுரேஷ்பாபு* ஆகியோர்களை தனிப்படை அமைத்து இக்குற்றச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் உள்ள அனைத்து CCTV கேமரா ஆராய்ந்து பார்த்த போது 02.05.2022 ஆம் தேதி அதிகாலை சம்பவத்தில் ஈடுபட்டது பிரசாத் வயது 20
S/o அனந்த நாராயணன்
24/A காஸ்மோ கார்டன் சோமயம்பாளையம்
வடவள்ளி. இவர் கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள பச்சை பாளையத்தில் இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் 3 ஆண்டு B.tech IT படித்து வருகிறார் . இவரது காதலி செல்வி .தேஜ ஸ்வினி வயது 20

தேஜா ஸ்வனி

OD/o ஹரி 70/1 தேஜா நிவாஸ் ஸ்ரீ நகர் முதல் வீதி மேற்கு சுங்கம் பைபாஸ் ரோடு கோவையை சேர்ந்த பெண் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் மேலும் செலவுக்கு பணம் அடிக்கடி தேவைப்படுவதாலும் மற்றும் மேற்படி பிரசாத் என்பவருக்கு ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள Betting என்ற App மூலமாக பணத்தை இழந்ததாகவும் அதன்மூலம் அதிகமாக கடன் தொல்லை ஏற்பட்டு மேலும் கடன்களை சரிகட்ட மேற்கண்ட குற்ற சம்பவத்தை செய்துள்ளனர்

இந்நிலையில் மேற்படி இருவரும் தனிப்படையினர் மூலம் மேற்படி இருவரை கைது செய்து அவர்கள் பரித்த 5 பவுன் தங்க செயினை அவர்களிடம் கைப்பற்றி மேற்படி இருவரையும் சிறையில் அடைத்தனர்.


கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை அதிகாரிகளையும் மற்றும் காவலர்களை அனைவரையும் பாராட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button