கோவை கேரளா எல்லை சோதனைச் சாவடி அருகே அனுமதி இல்லாமல் மதுபான கூடமாக செய்ல்பட்ட கடையை சீல் வைத்து வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த ஆனைமலை காவல் துறையினர் !
மதுபான கூடமாக செயல்பட்ட கடையை சீல் வைத்து இரண்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ஆனைமலை காவல்துறையினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை காவல் உட்கோட்டம் தமிழக கேரளா எல்லை மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே 2278 டாஸ்மார்க் உள்ளது. ஆனால் அங்கு அரசு மதுபான கூடம் இல்லை சோதனைச் சாவடி அருகே காய்கறி கடை தியாகு என்பவர் கடையில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக மதுபான கூடமாக நடத்தி வருவதாகவும் அந்த மதுபான கூடத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாகவும் 26/08/2023 அன்று வீடியோ ஆதாரத்துடன் ரிப்போர்ட்டர் விஷன் புலனாய்வு பத்திரிகை இணையதளத்தில் செய்தி வெளியிட்ட நிலையில் உடனே கோவை மாவட்டம் ஆனைமலை காவல் ஆய்வாளர்
குமார் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடைக்குள் மது அருந்தி கொண்டிருந்த நபர்களை வெளியேற்றிவிட்டு கடையை சீல் வைத்து கடையை நடத்தி வந்த தியாகு மற்றும் மணிகண்டன் இவர்கள் இரண்டு பேர் மீது குற்ற எண் : Cr/no :394/23 u/s 4( 1)(k) கீழ் வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப் பட்டதால் ஆனைமலை காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
தற்போது கேரளா எல்லை சோதனைச் சாவடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.