சட்டமன்றத்தில் இன்று கலைஞர் முத்துவேல் கருணாநிதி!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 02/08/21 காலை 10 மணிக்கு புறப்படும் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் 12:45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் அவர் 16:50 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தருகிறார் .அங்கு கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றவுள்ளார் .
சட்டமன்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். மறுநாள் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலையில் விமானத்தில் சூலூர் விமானப்படை தளத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்கிறார் .அங்கிருந்து ஹெலிகாப்டரில் உதகமண்டலம் சென்று அன்றைய தினம் முழுவதும் அங்குள்ள ராஜ்பவனில் தங்குகிறார் .ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை உணவுக்கு பிறகு வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரிக்குச் செல்கிறார் .அங்கு பார்வையிட்ட பின்னர் பகல் பன்னிரண்டு முப்பது மணிக்கு மீண்டும் உதகை ராஜ்பவனுக்கு செல்கிறார் .ஆகஸ்ட் 5-ஆம் தேதி அங்கேயே ஓய்வெடுக்கும் அவர் ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை ஹெலிகாப்டரில் சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்