சட்டவிரோதமாக கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
விருதுநகர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, பான்மசாலா, குட்கா, போன்ற போதைப் பொருட்கள் கள்ளச்சந்தையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவது, மற்றும் மேற்படி போதைப்பொருட்களை வாங்கி உபயோகிப்பது குறித்து தெரிய வந்தால், மேற்படி நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒராண்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், வைத்தியலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.பேச்சியம்மாள் என்பவர் கஞ்சா என்ற போதைப் பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறிந்து, மேற்படி நபரை குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 1.8.2021-ம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளர்.
தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, பான்மசாலா, குட்கா, போன்ற போதைப் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் ஃ வாங்குபவர்கள் குறித்து, அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்தால், மேற்படி நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.