Uncategorizedமாவட்டச் செய்திகள்

சட்டவிரோதமாக கல்குவாரிகள் !மாதம் 10 லட்சம் கல்லாக்கட்டும் திருமயம் வட்டாட்சியர் !?சைலன்ட் மோடில் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்!? திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் புகார் மனு!?

கோடிகளில் புரலும் திருமயம் வட்டாட்சியர் அலுவலகம்!? சைலன்ட் மோடில் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்!? திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு புகார் மனு!?



திருமயம் பகுதியில் திறந்த வெளியில் இயங்கும் கல்குவாரிகள்!
திருமயம் பகுதியில் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் இயங்கும் கல் குவாரிகள் இரவு நேரம் செயல்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளை சுற்றியுள்ள கல் குவாரிகளில் இருந்து பெருமளவிளான கற்கள் அறுத்து அறுக்கப்பட்டு அவைகள் கிரஷர் மூலம் ஜல்லி,எம்.சாண்ட், எடுக்கும் குவாரிகள் சுமார்
50க்கும் மேற்பட்டவை உள்ளன.10க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகிறது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம்,கல், எம்.ஜாண்ட் தயாரிக்கப்பட்டு சிவகங்கை, ராமநாதபுரம்,தஞ்சாவூர், புதுக்கோட்டை,நாகை,திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கல், மண் உள்ளிட்ட பாறைகள் அனுப்பட்டு வருகிறது .
கடந்த சில ஆண்டுகளாக அதன் எண்ணிக்கை செயல்படும் நேரம் அதிகாித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா காட்டுவா பள்ளிவாசல் அருகில் உள்ள மெய்யபுரம் என்ற கிராமத்தில் கல் உடைக்கும் குவாரி நடத்த குத்தகை அனுமதி கனிமவளத்துறை வழங்கி ஆறு மாத காலத்திற்கு மேலாக கல் உடைத்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இந்த கல்குவாரிகளில் தினமும் மாலை ஐந்து 5.00 மணி ஆனால் போதும் நிலநடுக்கம் வந்தால் கூட இப்படி கட்டிடங்கள் அதிர்வதில்லை ஆனால் கல்குவாரியில் வைக்கும் வெடி கட்டடங்கள் அதிரும் அளவிற்கு வெடிக்கும் சத்தம் கேட்குமமாம். அந்த சத்தம் 10 கிலோமீட்டர் அளவில் உள்ள சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் அதிரும் அளவிற்கு அந்த சத்தம் கேட்குமாம்.
நிலத்தில் உள்ள பாறையை உடைக்க விதிகளை மீறி சட்டவிரோதமாக மிகப்பெரிய அளவில் பைப்பு குழாயின் உள்ளே அதிக அளவிலான வெடிமருந்து நிரப்பபட்டு சட்ட விரோதமாக வெடிக்க வைக்கப்படுகிறது .
அதன்பின்பு மாலை 6 மணிக்கு மேல் அனுமதி இல்லாமல் விதிகளை மீறி வெடிவைத்து தகர்த்தி எடுத்த பாறைகளை ஜேசிபி இயந்திரத்தில் இரும்பு ராடு கொண்ட பிரேக்கர் பொருத்தி அதன் மூலம் இரவு முழுவதும் பாறையை உடைப்பதால் அந்த சத்தம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் அது மட்டும் இல்லாமல் அப்பகுதி முழுவதும் புகைமண்டலாக மாறி மாசு அடைந்த பகுதியாக இருப்பதால் சிறு குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பல குழந்தைகளுக்கு தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இருதய நோய் உள்ள ஒரு சிலர் இந்த வெடி சத்தத்தால் இறந்து போன சம்பவம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



அது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் ஜேசிபி இயந்திரங்களும் மூலம் உடைக்கும் சத்தத்தினால் மாணவ மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் போவது மட்டுமல்லாமல் சரியாக தூங்காமல் காலையில் பள்ளிக்கு சென்றவுடன் உடற் சோர்வு ஏற்பட்டு உடலளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


முதியவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களிடம் பல முறை புகார் மனுக்கள் கொடுத்தும் இது வரை கனிமவளத்துறை அதிகாரிகளை அழைத்து இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் போக்கில் இருந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி அவர்களிடம் பொதுமக்கள் பல முறை புகார் மனுகொடுத்துள்ளார்கள்.

ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று இது சம்பந்தமாக மௌனம் மட்டுமே வட்டாட்சியரின் பதிலாக இருப்பதாக சமூக ஆர்வாளர்களின் குற்றச்சாட்டு.

ஆனால் இது சம்பந்தமாக ரிப்போட்டர் விஷன் புலனாய்வு குழு களத்தில் இறங்கி கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்ததில் அதிர்ச்சி தரும் தகவல்களை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருமயம் வட்டாச்சியர் அலுவலகம் என்றாலே லஞ்சம் மட்டுமே கொடிகட்டி பறப்பதாகவும்
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மீது ஆலோசனைக் கூட்டம் நடக்கிறதோ இல்லையோ வாரத்தில் சனி ஞாயிறு இரண்டு தினங்களில் திருமயம் சுற்றி உள்ள கல்குவாரி உரிமையாளர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் பிரவீனா மேரி தலைமையில் தவறாமல் நடப்பதாகவும் அன்று மட்டும் வட்டாட்சியர் அலுவலகங்களில்
ஆடம்பர சொகுசு கார்கள் அணிவகுத்து நிற்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குவாரிகள் நடத்தும் உரிமையாளர்களுடன் நடக்கும் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் எந்த கல்குவாரிக்கு மாதம் எவ்வளவு மாமுல் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வட்டாட்சியரின் சொகுசு கார் ஓட்டுனர் போல (மீடியேட்டர் வேலைக்கு) இளைஞர் ஒருவரை நியமித்துள்ளதாகவும்
குவாரிகளில் இருந்து வரவேண்டிய மாமுல் லஞ்சப் பணத்தை (மாதம் சுமார் 10 லட்சம் வரை) அந்த இளைஞன் சொகுசு காரில் சென்று சரியான நேரத்தில் வசூல் செய்து வந்தவுடன் யாருக்கும் சந்தேகம் வராத அளவில் அந்த இளைஞர் பயன்படுத்தும் காரில் ஏறி கனிமவளத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் வரை வசூல் செய்த லஞ்சப் பணத்தில் இருந்து பிரித்து வழங்கி வரும் ஊழல் முறைகேடான பணியை நேர்மையான அரசு பணியாக திருமயம் வட்டாட்சியர் நினைத்துக் கொண்டு (பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் உலகமே இருண்டு போனதாகவும் யாரும் நம்மளை பார்க்கவில்லை என்றும் நினைத்துக் கொண்டு இருக்குமாம்)
அதேபோல திருமயம் வட்டாட்சியர் கண்மூடித்தனமாக அரசுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் முறைகேடு செய்து வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெருமளவில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக விதிகள் மீறி கல் குவாரிகள் கிரஷர் மற்றும் கிராவல் மணல் எடுத்தல் ஆற்று மணல் கடத்தல் போன்றவைகள் தொடர்ந்து சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்பட்டு வருவதாகவும் இதனால் அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

குவாரிகள் மீது திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரிக்கு புகார் வந்தால் உடனே சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களிடம் தனக்கு உதவியாக தரகர் வேலை பார்க்கும் இளைஞரை வைத்து ரகசிய தகவலை தெரிவித்தவுடன் திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரிக்கு மிகப்பெரிய தொகையை சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமையாளர்கள் தரகர் இளைஞரிடம் கொடுத்துவிட்டு விஷயத்தை அப்படியே வெளியில் தெரியாமல் அமுக்கி விடுவார்களாம்.

அதைவிட ஒரு அதிர்ச்சி தகவல் வட்டாட்சியர் பிரவினா மேரியை பார்க்க வேண்டும் என்றால் இவரது ஓட்டுநரும் பர்சனல்( PA) என்று சொல்லிக் கொள்ளும் ஏஜென்ட் இளைஞரிடம் தான் முதலில் அனுமதி பெற வேண்டுமாம் .
அப்படி அவர் அனுமதி கொடுத்தால் மட்டுமே வட்டாட்சியரை பார்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருமயம் வட்டாட்சியர் பிரவீணா மேரிக்கு அரசு ஓட்டுனர்கள் இரண்டு போர் இருக்கின்றனர்.
அவர்களை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மட்டும் பிரவீனா மேரி அரசு வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கமாம் .
மற்ற நேரங்களில் பிரவீனா மேரியின் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரில் செல்வது தான் வழக்கமாம்.
வட்டாட்சியர் பிரவீனா மேரி மீது பல குற்றச்சாட்டுகளை திருமயத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலரும் போஸ்டர் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தியும் அது எல்லாமே புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பிரவீனா மேரிக்கு இருக்கும் செல்வாக்கிற்கு முன் எதுவுமே செல்லுபடியாகவில்லையாம் அந்த அளவிற்கு திருமயம் வட்டாட்சியர் பிரிவினாமேரி அவர்களின் செல்வாக்கு உயர்ந்து விட்டது என்றும் வட்டாட்சியருக்கு பிரவினா மேரி அவர்களை திருமயத்திலிருந்து பணியிடம் மாற்றம் செய்யவில்லை என்றால் கடவுளே வந்தாலும் இப்பகுதி மக்களின் புகார் மீது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொண்டனர்.
எது எப்படியோ ஆட்சிக்கும் கட்சிக்கும் நற்பெயரை கலங்கப்படுத்தும் வகையில் ஒரு சில அதிகாரிகள் தொடர்ந்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதை தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். அது மட்டுமல்லாமல் ஒரு சில தினங்களில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் பெரியவர்கள் சிறியவர்கள் முதியவர்கள் அனைவரும் ஒன்று கூடி 21/11/2022 திங்கள் கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Articles

10 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button