சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் !திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெருகவாழ்ந்தான் காவல் சரகம்
கெழுவத்தூர் பகுதியில்
கொலை வழக்கில் தொடர்புடைய
குமார்@ ராஜ்குமார் 39/2011 த.பெ.பிச்சைகண்ணு, கீழத்தெரு, தென்கோவனூர், கூத்தாநல்லூர்
என்பவரையும்,
மன்னார்குடி நகர காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில் தயார் செய்து விற்பனை செய்ததாக
சரவணன் 36/2021
த/பெ கலைசெல்வம், ஒத்தவீடு, மேலநத்தம், மன்னார்குடி
என்பவரையும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.C.விஜயகுமார்
தனிப்படை அமைத்து
கைது செய்து வழக்குப்பதிவு செய்து
அதனை தொடர்ந்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில்
குற்றவாளி இரண்டு பேரும் (06.12.2021)
குண்டர் சட்டத்தில்
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் மீது
குண்டர் சட்டத்தில்
நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்த
காவல் ஆய்வாளர்கள்
திரு.விஸ்வநாதன்
(மன்னார்குடி நகர காவல் நிலையம்) திரு.சிவப்பிரகாசம் (பெருகவாழ்ந்தான் காவல்நிலையம்) மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால்
அவர்கள் மீதும்,
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.