மாவட்டச் செய்திகள்
சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலைகளை மூடி அதரடி நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் வெடிவிபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆய்வு செய்யும் பொருட்டும், சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கிலும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்கும் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அலுவலர்கள் அடங்கிய 5 சிறப்பு ஆய்வுக் குழுக்கள் இரண்டாவது முறையாக கடந்த 09.07.2021 அன்று அமைத்து ஆணையிடப்பட்டது.
- இரண்டாவது முறையாக அமைக்கப்பட்ட ஐந்து சிறப்பு குழுவானது திங்கள் முதல் சனி வரை (12.07.2021 முதல் 17.07.2021 வரை) நியமனம் செய்யப்பட்டது. மேற்படி குழுவினால் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய வட்டங்களில் 100 பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்யப்பட்டதில், அதிக்கபடியான விதிமீறல்களில் ஈடுபட்ட 9 தொழிற்சாலைகள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது.
- மேலும், 2 பட்டாசு கடைகள் விதிமீறல்களில் ஈடுபட்டதால், பட்டாசு கடைகள் மூடி முத்திரையிடப்பட்டு, அகிலேஷ் பயர் ஒர்க்ஷ் ஏஜேன்சிஸ் என்ற பட்டாசு கடையின் உரிமதாரர் திரு.மாரியப்பன் என்பவர் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண்: 227/2021 பிரிவு இந்திய வெடிபொருள் சட்டம் 1884 பிரிவு 9 (B) (1) (b) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது மற்றும் கவிதா கிராக்கர்ஸ் என்ற பட்டாசு கடையின் உரிமதாரர் திரு.ராமசாமி என்பவர் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண்: 226/2021 பிரிவு இந்திய வெடிபொருள் சட்டம் 1884 பிரிவு 9 (B) (1) (b) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- சிறப்பு ஆய்வுக்குழுவானது சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களையும் ஆய்வு செய்தது. இதில், சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் திரு.ஆறுமுகம் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டு, தனியர் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண்: 228/2021 பிரிவு இந்திய வெடிபொருள் சட்டம் 1884 பிரிவு 9 (B) (1) (b) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- தற்போது, சிறப்புக்குழுவானது மாற்றி அமைக்கப்பட்டு, திங்கள் முதல் சனி வரை (19.07.2021 முதல் 24.07.2021 வரை) புதிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
- மேற்படி குழு சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய வட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும்;.
- மேற்படி ஐந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வட்டங்களில் உள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களை ஆய்வு செய்யும்.
- சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தொடர்ச்சியாக சட்ட விரோதமாக வெடி செய்யும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி உற்பத்தியினை மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.
- மேலும், சட்ட விரோத பட்டாசு உற்பத்தி செய்யும் நபர்கள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு தொழிற்சாலைகள் மீது புகார் அளிக்க தனி வட்டாட்சியர் (தீப்பட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வு) -ஐ அலைப்பேசி எண்: 9342694959 -ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்.ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்