காவல் செய்திகள்

சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் அமோக விற்பனை!! கண்டுக் கொள்ளாத கோவை மாவட்ட பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல்துறை!!

சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் விற்பனை.
கண்டு கொள்ளாத கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல்துறை!!

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு
கோவை மாவட்டம்
போலி மது பாட்டில் விற்பனை
சரளபதி
அனுமதி இல்லாத போலி மது பாட்டில் விற்கும் இடம் ஒடையகுளம்


அனுமதி இல்லாத போலி மது பாட்டில் விற்கும் இடம்.ஒடையகுளம்

கோவை மாவட்டம் ஆணைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வால்பாறை தொகுதி கோழிபண்ணை டாஸ்மாக் மதுபானக் கூடத்தை அதிமுக கட்சியை சேர்ந்த சீனு என்ற சீனிவாசன் மேற்பார்வை பார்த்து வருவதாகவும் , டாஸ்மாக் கடை மூடிய பின் அருகில் உள்ள தோப்பில் சட்ட விரோதாமாக கள்ளத்தனமாக போலிமதுபாட்டில்களை எந்த நேரமும் விற்று வருவாதவும் அதுமட்டும் இல்லாமல் வேட்டைக்காரன் புதூர் (அழுக்குச் சாமி சித்தர் கோவல் அருகில்) மற்றும் ஒடைகுளம் (தென்னத்தோப்பில் )சரளபதி, சேத்துமடை( பஸ்டாப் அருகில்)ஆகிய இடங்களிலும் சட்ட விரோதமாக போலி மது பாட்டில்கள் சீனி விற்று வருவதாகவும் இதில் கள்ளச் சாராயம் கலந்த மது பாட்டில்கள் சேர்த்து விற்று வருவதாகவும் இதை வாங்கிக் குடித்தவர்கள் மன நிலை பாதிக்கப் பட்டு உள்ளார்கள் என்றும் இது சமந்தாமாக சமூக ஆர்வலர்கள் 15/11/21 பொள்ளாச்சி துணை வட்டாட்சியர் அவர்களிடம் மற்றும் பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல் துறை யிடனும் புகார் கொடுத்தும் இதுவரை சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்கும் சீனி மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றச் சாட்டு எழுப்பி உள்ளனர்.
இதுசம்மந்தமாக களத்தில் விசாரித்ததில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சில திமுக கட்சி நிர்வாகிகளை தொடர்பு வைத்துக்கொண்டு
சட்டவிரோதமாக மாதுபாட்டில் விற்றுவரும் .
அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் சீனி பச்சோந்தி போல் தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அதனால் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில் விற்பனை தொழிலை படு ஜோராக சீனு செய்து வருகிறார் என்று அந்தப் பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

சீனி என்ற சீனிவாசன் கடந்த கால வரலாறு!!!!

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் உறவினரான சீனிவாசன் என்ற சீனி என்பவர் தாமரைக்குளம்,நெகமம், ராசக்காபாளையம், காட்டரம் பட்டி, பிரிவு கினத்துக் கடவு போன்ற ஐந்து இடங்களில் டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்துள்ளார். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை 24மணி நேரமும் விற்றுவததாகவும் இது சம்மந்தமாக அப்போது இருந்த பொள்ளாச்சி துனை வட்டாட்சியர் மற்றும் மதுவிலக்கு காவல்துறை அவர்களிடம் புகார் கொடுத்ததற்கு சீனி மீது எந்த வழக்கும் பதிவு செய்து நடவைக்கை எடுக்கக்கூடாது என்றும் என்னுடைய பினாமி என்றும் அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் சீனி க்கு உதவி செய்து வந்துள்ளார்.

10 வருடா அதிமுக ஆட்சியில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்ற சீனி என்பவர் 100கோடி ரூபாய் அளவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வைதிருப்பருப்பதாக தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ இதியாவிவிலே தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதே முதல்வர் லட்சியம் ஆகும்.

ஆனால் அதிமுக கட்சியில் இருந்தவர்கள் தற்போது கோவை மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதால் திமுக கட்சியின் நற்பெயரை கலங்கப் படுத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தள்ளப்பட்டு உள்ளார் என்பதுதான் நிதர்சனம்!

தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் ( மது விற்பனை, கஞ்சா விற்பனை ,மூணு நம்பர் லாட்டரி விற்பனை இது போன்ற சட்டவிரோதமாக ஈடுபடுபவருபவர்களுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் குற்றச்சாட்டில் இருந்து மாறவில்லை என்பதைத்தான் காண முடிகிறது.
தமிழ்நாட்டிலே கோவை மாவட்டத்தில் தான் அரசுக்கு எதிரான சட்டவிரோதமான செயல்களை சமூக விரோதிகள் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக பரவலாக செய்தித்தாள்களிலும்
அதுமட்டுமில்லாமல் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு சமூக ஆர்வலர் மூலம் புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
எது எப்படியோ தமிழ்நாட்டில் சட்டவிரோதமான ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் நேர்மையான அதிகாரிகளை நியமித்தல் மட்டுமே இது சாத்தியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button