சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக கனிம வளம் கடத்தல்! புகார் கொடுத்த விவசாயிகளை மிரட்டும் பல்லடம் காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்!
கனிம வளம் கடத்துவதாக தகவல் கொடுத்த விவசாயிகளின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி வரும் பல்லடம் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்!
திருப்பூரில் விதிமீறும் கல்குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் புது உத்தரவை காற்றில் பறக்க விட்ட காவல்துறை!
விவசாயிகளை மிரட்டும் கனிம வள கொள்ளைக்கு கைக்கூலியாக செயல்படும் பல்லடம் காவல் ஆய்வாளர்!
திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் மீது புகார்கள் வந்தால், ஒரு வார காலத்துக்குள் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கல்குவாரிகள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில், விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆங்காங்கே தொடர் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர்
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை உதவி இயக்குநர் வள்ளல் அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு மாவட்ட ஆட்சியர் சு.வினீத், வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு வரும் புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர். இது அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.கல்குவாரிகள் மீது பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வரும்பட்சத்தில் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல், கனிமவளத்துறையில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் மனுக்கள் தேங்காத வகையில், கனிமவளத்துறை வேகமாக செயல்பட வேண்டும். கல்குவாரிகள் மீதான புகார்கள் தொடர்பாக மனுக்கள் அளித்தால், ஒருவார காலத்துக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அது தொடர்பான அறிக்கை ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை அனைத்தையும் விருப்பம் மாவட்டம் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கனிமவள கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுவும் அளவுக்கு அதிகமாக சட்ட விரோதமாக தனகிரக வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில
அனுமதிக்கப்பட்டதை விட அதிக எடையுடன் சட்டவிரோதமாக கேரளாவிற்கு கொண்டு சென்ற கனிமக்கடத்தல் அதிக கனரக வாகனங்களை பிடித்து ஒப்படைக்கும் கடமையைச் செய்த பொதுமக்கள் மீதும், விவசாயிகள் மீதும் பொய் வழக்கு போடுவேன் சிறையில் அடைப்பேன் என பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் மிரட்டி, அச்சுறுத்தி விட்டு சட்டவிரோத கனிம கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனங்களில் உரிமையாளர்களிடம் பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வாகனங்களை பல்லடம் காவல் ஆய்வாளர் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் ஜெய் சிங் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி மற்றும் திருப்பூர் மாவட்ட எஸ்பி அவர்களுக்கு புகார் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சௌமியா( DSP)
சுர்தன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் சார் ஆட்சியர் இருவரும் நேர்மையான அதிகாரிகளாக இருந்தும் கனிம வள கடத்தல் மாபியா கும்பல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் தடுக்கும் அரசியல் முக்கிய புள்ளி யார் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது என்பதுதான் நிதர்சனம். அதுமட்டுமில்லாமல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளல் அவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு மற்றும் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது துறை ரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கனிமவளத் துறை உதவி இயக்குனர் வள்ளலுக்கு பின்புலமாக இருப்பது யார் என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது. அவர் யார் என்றால் மூத்த அமைச்சர் ஒருவர் என்றும் தகவல் வந்துள்ளது. அதனால்தான் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு கனிமவள மாபியா கும்பலுக்கு உடந்தையாக கனிமவளத் துறை உதவி இயக்குனர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளல்,பல்லடம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சௌமியா( DSP)
காவல் ஆய்வாளர் மணிகண்டன்
வட்டாட்சியர் ஜெய் சிங் சிவக்குமார்
IAS சார் ஆட்சியர் Sruthan Jai Narayanan,
===================
அனுப்புனர்:-
இரா. சதீஷ்குமார்
(தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர்)
1/223a, காளம்பாளையம், பொங்குபாளையம்,
திருப்பூர்-641666
7010050472
ந.சண்முகம்,
ஒருங்கிணைப்பாளர், சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம்,
97919-78786
பெறுநர்:-
காவல்துறை தலைவர் அவர்கள்,
காவல்துறை, சென்னை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
திருப்பூர்.
அன்புடையீர் வணக்கம்,
(திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சுக்கம்பாளையம் கிராமத்தில் பல்லடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதி)
நாட்டின் கனிம வளம் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் தினமும் வருவாய் இழப்பு ஏற்படுத்துவது மட்டுமல்ல கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு நீர் எல்லாம் வற்றி, விவசாய நிலங்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்த பகுதி எல்லாம் பாலைவனமாகி, நிலநடுக்கம் வரும் சூழலில்- எதிர்கால சந்ததிகள் வாழ்வதற்காக விவசாயிகளும், பொதுமக்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 51a, 51g- அடிப்படை கடமையை நிறைவேற்ற கனிம வளத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் சட்டவிரோத கனிம கடத்தல் வாகனங்களை பிடித்துக் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை வசம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதற்கு முன் பல முறை பல்வேறு அலுவலர்களுக்கு புகார் கொடுத்து, பல்வேறு முறை தகவல் தெரிவித்து, துண்டு பிரசுரம் விநியோகித்து, பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள், சுவரொட்டிகள் வைத்து அறிவிப்பு செய்தும் – தொடர்ந்து இந்த சாலைகளில் எல்லாம் சட்டவிரோதமாக அதிக எடையுடன் கூடிய கனிமக் கடத்தல்கள் நடைபெற்று வருகிறது. இதனை உரிய துறை சார்ந்த அலுவலர்கள் கண்டு நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.
ஆகவே ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அதிக எடையுடன் இந்த கிராம, ஒன்றிய சாலை பகுதியில் அதிக கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தி மேலும் மோட்டார் வாகன சட்டத்தில் கூறியுள்ள விதி 113,114,115- படி அதிக எடையுடன் வாகனங்கள் இயக்கக் கூடாது என்ற விதிகளையும் பின்பற்ற வேண்டி தெரிவிக்கப்பட்டது.
அதன்படியே நேற்று (12.05.2023) சட்டவிரோத அதிக கனரக கனிம கடத்தல் கேரள வாகனங்கள் மாலை சுக்கம்பாளையம் ஊர் பொதுமக்களாலும், விவசாயிகளாலும் சிறை பிடிக்கப்பட்டு வருவாய்த்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையில் எடை சரிபார்க்கப்பட்டு விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் மூன்று வாகனங்களுக்கு சுமார் 2 லட்சத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது.
அதே பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக கனிமக்கடத்தலில் வாகனங்கள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் அறிந்து சட்டவிரோதமாக இயக்கிய வாகனங்கள் இரவு 10:30 மணி அளவில் சிறைபிடிக்கப்பட்டது.
உடனடியாக வருவாய் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
11 மணிக்கு மேல் வந்திருந்த வருவாய் துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் சுமார் 1 மணி நேரம் இந்த வாகனங்களை விடக் கோரி முயற்சித்தனர்.
ஆனால் தொடர்ந்து பொதுமக்கள் சார்பாக இந்த வாகனங்களின் எடையை சரிபார்த்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக விவசாயிகளின் மீது பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டி, அதட்டி, அச்சுறுத்தி வந்தனர்.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட கனிமக்கடத்தலில் ஈடுபட்ட கேரள எண் கொண்ட அதி கனரக வாகனங்களை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் எடை சரிபார்க்காமல் காவல்துறை கடும் முயற்சியில் முன் நின்று வாழ்த்தி தப்பித்துக் கொள்ள வழி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆகவே சுற்றுச்சூழலை பாதுகாத்து கனிம வளத்தை பாதுகாக்கும் கடமையில் சட்டவிரோத கனிமக் கடத்தல் வாகனங்களை பிடித்து நடவடிக்கைக்காக ஒப்படைத்த விவசாயிகள், பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவேன், சிறையில் அடைப்பேன் என்று மிரட்டல் விடுத்து தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய காரணத்திற்காகவும், சட்டவிரோத கனிம கடத்தல் வாகனங்களின் மீது உரிய எடை கூட பார்க்காமல், நடவடிக்கை எடுக்காமல் வாழ்த்தி கொள்ளை கும்பலுக்கு வழி ஏற்படுத்தி தப்பவிட்ட காவல்துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உத்தரவிடவேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கூட்டுக்குழு முயற்சியில் பல்வேறு துறை அலுவலர்களை உள்ளடக்கி சிறப்பு பறக்கும் படை அமைத்து தொடர்ந்து சட்டவிரோத கனிம கடத்தல் வாகனங்கள் பிடிக்கப்பட்டு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், மேலும் இந்த பகுதிகளுக்குள் 10 சக்கரத்திற்கு மேல் அதிக எடை கொண்ட வாகனங்கள் எல்லாம் நுழைய கூடாது என்று ஆங்காங்கே தடுப்பு வைத்து காவல்துறை பாதுகாக்கும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கனிம கடத்தலை தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் எதுவும் எடுக்காமல் பறக்கும் படை எல்லாம் அமைக்காமல் அதனை கடமையாகக் கொண்டு தடுக்க நினைக்கும் விவசாயிகளையும், பொது மக்களையும் அச்சுறுத்தி , மிரட்டல் விடுத்து, அடக்கி ஒடுக்கி அழிக்க நினைக்கும் செயலை என்னவென்று கருதுவது. இது மக்களாட்சி நாடா, சட்டத்தின் ஆட்சியில் தான் அரசு இயந்திரம் இயங்குகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
இப்படிக்கு
இரா.சதீஷ்குமார்
7010050472
சட்ட விழிப்புணர்வு அணி
மாநில செயலாளர்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
ந. சண்முகம்
ஒருங்கிணைப்பாளர்
சட்டவிரோத கல்குவாரிகள் எதிர்ப்பு இயக்கம்