மாவட்டச் செய்திகள்

சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாறைகளை வெட்டி கனிமவள கொள்ளை! அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை!

திண்டுக்கல் மாவட்டத்தில் கருங்கல் ஜல்லி எம்சாண்ட் ஆகிய தேவைகளுக்காக மாநில அரசு வரைமுறை வகுத்து பாறைகள் உடைத்து எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி வருகிறது ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் அரசு அனுமதி பெறாமலே சட்ட விரோதமாக வெடி மற்றும் இயந்திரங்களை வைத்து பாறைகளை வெட்டி எடுத்து கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல் குவாரிகளுக்கு அரசு வழங்கிய அனுமதி காலம் முடிந்து காலவதியாகியும் தொடர்ந்து சட்ட விதிகளை மீறி பாறைகளை வெட்டி எடுக்கப்பட்டு வருவது. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அது மட்டும் இல்லாமல் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. மக்களின் வரிப் பணத்தின் மூலமாக அரசிடம் ஊதியம் பெறும் அலுவலர்கள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவது பொதுமக்களுக்கு மேலும் வரிச்சுமையை அதிகரிக்கும் எனவே இதனை முறையாக கண்காணிக்க வேண்டிய மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் மற்றும் மாவட்ட சுரங்க துறை இணை இயக்குனர் ஆகியோர் முறையாக கண்காணிக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் கண்டு கொள்ளாமலும் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம் ,வேடசந்தூர் ,ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் நிறைந்த இயற்கை வளங்களை ஏலம் விடப்பட்டிருந்தாலும் குறிப்பாக வேடசந்தூர் தாலுகாவில் புளியம்பட்டி அம்மா பட்டி முள்ளம் பட்டி தென்னம் பட்டி விடுதலைப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் குஜிலியம்பாறை பகுதிகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாறைகளை இயந்திரங்கள் வைத்து வெட்டி எடுத்து கனிம வளம் கடத்தும் மாமியா கும்பல்களின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

ஒரு கல் குவாரிக்கு அரசு அனுமதி வாங்கிவிட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சட்ட விரோதமாக அரசு அனுமதி இன்றி பாறைகளை வெட்டி எடுத்து கனிம வளங்களை கடத்தி வருகின்றனர். குறிப்பாக வேடசந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 60% குவாரிகள் நடத்தும் உரிமையாளர்கள் மாதம் பல லட்சம் ரூபாய் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு அனுமதி என்று சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகளை செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் அலட்சிய போக்கால் திமுக ஆட்சி மற்றும் கட்சியின் மீது பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரிகள் என்ற பெயரில் இருக்கும் கருப்பு ஆடுகளை கலை எடுத்து இயற்கை வளங்களை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் நடவடிக்கையை.. ஆட்சி காலத்தின் கடைசி ஒரு வருடத்திலாவது பொதுமக்களிடம் அவப்பெயர் போக்கும் வகையில் இது போன்ற அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Back to top button