சட்ட விரோதமாக புலியின் பற்கள், நகங்கள் விற்பனை செய்த கும்பல்! சுற்றி வளைத்து கைது செய்த வனப் பாதுகாப்பு படை குழுவினர்!

சட்ட விரோதமாக புலியின் பற்கள், நகங்கள் விற்பனை செய்த கும்பல்!
சுற்றி வளைத்து கைது செய்த வன பாதுகாப்பு படை குழுவினர்!
28.06.2024 மாலை
அடையாளம் தெரியாத நபர்கள் புலியின் பற்கள், நகங்கள் விற்பனை செய்யும் நோக்கத்தோடு சுற்றி வருவதாக உதகை வன பாதுகாவலர், வனப் பாதுகாப்புப்படை குழுவினர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் நாடுகாணி அருகில் புலியின் பற்கள், நகங்கள் விற்பனை செய்ய முயற்சி செய்த ஆமைக்குளம் , பால்மேடு பகுதியை சேர்ந்த மூவரை வன பாதுகாப்பு படை குழுவினர்கள் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் விசாரணை செய்ததில்

புலியின் நகங்கள் மற்றும் புலியின் பற்கள் இருப்பது கண்டறியப்பட்டு மேல் நடவடிக்கைக்காக நாடு காணி வனச்சரக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு மாவட்ட வன அலுவலர் கூடலூர் அவர்களின் உத்தரவுபடி உதவி வன பாதுகாவலர் தலைமையில் புலன் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்த புலியின் நகங்கள் மற்றும் பற்கள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டது . அதன் பிறகு 29.06.2024 மாலை பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி அவர் ஆணைக்கு இணங்க மூவரையும் நீதிமன்ற காவலிற்காக கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிடிபட்ட நபர்கள்: பெயர் மற்றும் முகவரி 1.சுப்பிரமணியம்
த/பெ கோவிந்த சாமி பாண்டியார் குடோன் 2.சிமியோன்
த/பெ ராசையா பாண்டியர் குடோன் 3.பாலகிருஷ்ணன்
த/பெ தனபால்
பால் மேடு.