மாவட்டச் செய்திகள்

சமுதாயக் கூடங்கள் தனியாருக்கு ஒப்பந்த விட பல லட்சம் லஞ்சம்!??
ஏழை,எளிய மக்களை சுரண்டும் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!!
கலைஞர் விரும்பிய ஜாதி ஒழிந்த மாதிரி உலகம் (Model World). சமுதாயக் கூடங்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முதல்வருக்கு கோரிக்கை!


மத்திய அரசு பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருவதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி தமிழகத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அனைவரும் அறிவோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்கு மிக்க நபர்கள் அரங்குகளை மொத்தமாக முன்பதிவு செய்து, பின்னர் அதிக தொகைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாடகைக்கு விடுவார்கள். முன்பதிவு செய்வதற்கு சில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வலியுறுத்திய பிறகு இது பெரும்பாலும் தடுக்கப்பட்டது.


அப்படி இருக்கும் சூழ்நிலையில் பேரூராட்சி நகராட்சியில் இருக்கும் ஏழை ஏழை எளிய பாமர மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி கட்டிய சமுதாய கூடங்களை தனியாருக்கு ஒப்பந்தம் விடப் படுவதை தற்போது பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்தத்தை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபங்களின் கட்டணங்கள் குறைந்த பட்சமாக ரூ. 25000 லிருந்து 100000 வரை நிரூபிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

தற்போது ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் தங்களது இல்லத்தில் நிகழும் சுப காரியங்களுக்கு குறைந்த வாடகை பெறப்படும் சமுதாயக் கூடங்களையே நம்பியுள்ளனர்..
அதனையும் மதுரை மாவட்டம் T. வாடிப்பட்டி பேருராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரைவார்த்துக் கொடுப்பது என்பது ஏழை,எளிய மக்களை கட்டணம் எனும் பெயரில் சுரண்டுவதாகும்.
எனவும் சமுதாய கூடத்தை பல லட்சம் கட்டி ஒப்பந்தம் எடுப்பவர்
மக்களுக்கு சேவை செய்ய முன் வருவாரா?
தன்னுடைய வருமானத்தைப் பெருக்க முயற்சிப்பாரா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.


பேரூராட்சி நிர்வாகம் உடனடியா சமுதாயக் கூடங்களை ஏலம் விடும் முயற்சியை பேரூராட்சி நிர்வாகம் நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து 17/06/22 அன்று நடைபெற இருந்த ஏல ஒப்பந்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உடலால் மறைந்தார் எனினும், உணர்வால், சாதனைகளால் நம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். கொள்கையால் வாழும் கொற்றவர் அவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சமுதாயச் சிந்தனையானாலும், அரசியல் ஆனாலும், ஆட்சியானாலும் அவர் பொறித்துச் சென்ற முத்திரைகள் என்றும் நிலைக்கக் கூடியவை.

தமிழர்களிடத்தில் இனமானமும், இனவுணர்வும் தழைத்தோங்க என்னென்ன காரியங்களை நாம் செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு
கலைஞர் பதில் : “
தமிழர்களுடைய வரலாறு, மரபு, பண்பாடு, இலக்கியக் கருத்து இவையெல்லாம் தமிழ் இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
அத்தகைய கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நாள்தோறும் நடைபெற வேண்டும். மிகக் குறிப்பாக பல்வேறு ஜாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற தமிழ் சமுதாயத்தில் முக்குலத்தோர், வன்னியர், முதலியார், செட்டியார் என்பது போன்ற பல்வேறு ஜாதிப் பிரிவுகளையெல்லாம் அகற்றி எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் எல்லோரும் தமிழ் ஜாதிதான் என்கிற அந்தவுணர்வை உருவாக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.

அந்த அடிப்படையில் தான் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நாடெங்கும் உருவாக்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் எவர் சிந்தனையிலும் உதிக்காத இந்தக் கருத்து – சாதனை காலம் உள்ளவரை கணீர் கணீர் என ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஜாதிக்கென்று தனி சுடுகாடு கிடையாது – எந்த மதத்தின் வழிபாட்டுச் சின்னங்களும் கிடையாது – நூலகம் உண்டு, சமுதாயக் கூடம் உண்டு என்பதெல்லாம் எத்தகைய ஆக்கப்பூர்வமான சிந்தனை? அவர் காண விரும்பிய ஜாதி ஒழிந்த மாதிரி உலகம் (Model World).
பெரும்பாலான பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்து வைத்த பெருமை உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.

திராவிடர் இயக்கச் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை, நியாயமாக அண்ணாவின் பெயராலே கட்சியை வைத்துக் கொண்டு, கடந்த ஆட்சியில் அண்ணா தி.மு.க ஆட்சி, அதனை மேலும் விரிவுபடுத்தியிருக்க வேண்டாமா? நிலைமை என்ன என்றால், சரிவரப் பராமரிப்பு இன்றிப் பாழ்பட்டுக் கிடக்கும் பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் வடிக்கும் நிலைதான் இருந்ததை அனைவரும் அறிவோம். ஆகவே திமுக ஆட்சியில் மட்டுமே சமூக கூடங்கள் சமத்துவபுரங்கள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் அப்படி மறுசீரமைப்பு செய்ய பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு ஏழை எளிய பாமர மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
ஆனால் அப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் சமுதாய கூடங்களை ஏதோ ஒரு சில கட்சி லாபம் கிடைக்கும் என்ற சுயலாபத்திற்காக ஒப்பந்த முறையை கையிலெடுப்பது கலைஞரின் சமத்துவத்தில் கனவை சிதைக்க எடுக்க முயற்சி ஆகும் என்று குற்றம்சாட்டி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button