காவல் செய்திகள்

சமூக ஆர்வலர்களுக்கு தொடர் மிரட்டல்!திருப்பூர் காவல் ஆணையரிடம் புகார்!

திருப்பூர் செப் 17,,
புகாரை திரும்பப் பெறக்கோரி சமூக ஆர்வலர்களுக்கு தொடர் கொலை மிரட்டல்! திருப்பூர் காவல் ஆணையாளரிடம் புகார்.


தங்கம் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் பொது மக்களிடம் நடைபெற்று வருகின்ற மோசடிகள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை திரும்பப்பெற கூறி சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணனை மிரட்டி வருவது தொடர்பாக மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனு.*

*திருப்பூரில் திருப்பூர் பல்லடம் சாலையிலுள்ள வித்யாலயம் பகுதியில் ஆதரவற்ற விலங்குகள் பராமரிக்கும் முருகன் செட்டியார் அறக்கட்டளை, தங்கம் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் பொது மக்களிடம் நடைபெற்று வருகின்ற மோசடிகள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை திரும்பப்பெற கூறி பல்வேறு செல்போன் எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மிரட்டல் எடுத்து அச்சுறுத்தி வருவது தொடர்பாக உரிய சட்டரீதியாக தீர்வுகண்டு இது தொட‌ர்பாக 19 ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுவது சம்பந்தமாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார்.*

முன்னதாக இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், உள்ளிட்டவர்களுக்கும் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…

திருப்பூரில் திருப்பூர் பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியில் ஆதரவற்ற விலங்குகள் பராமரிக்கும் முருகன் செட்டியார் அறக்கட்டளை, தங்கம் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் நடைபெற்ற வருகின்ற மோசடிகள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை திரும்பப்பெற கூறி பல்வேறு செல்போன் எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மிரட்டல் எடுத்து அச்சுறுத்தி வருவது தொடர்பாக உடனடியாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் பகுதிகளிலுள்ள பொது மக்களுக்களுடைய குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வுகண்டு பொது மக்களுக்கு சேவை செய்வதால் எங்களுடைய உயிருக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
எங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் தொடர்ந்து போராடி வருகிறோம் ஆனால் தவறு செய்யும் நபர்களால் எந்த நேரத்திலும் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது இது ஒரு புறமென்றால் மறுபுறம் நியாயமான பிரச்னைக்காக அறவழியில் போராடும் எங்களுக்கு சிலர் பண பலத்தை கொண்டு அடியாட்கள் மூலமாக அச்சுறுத்தி பயம் காட்டி, வாய்ப்பூட்டுச் சட்டம் போடலாம் எனப்பார்க்கிறது.
எங்களுக்கு மரணத்தைக் கண்டு பயம் இல்லை அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்தி வரும் போராட்டத்திலிருந்து எந்த சூழ்நிலையிலும் பின் வாங்க மாட்டோம் எனவே சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மேற்படி சங்கத்தில் மாநில இணை பொது செயலாளராக இருந்து கொண்டு மேற்படி முகவரியில் வசித்து வருகின்றேன் சமூகத்தில் ஏற்படும் பொது மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு கண்டு சமூக பணிகள் செய்து வருகிறேன்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திருப்பூர் மாநகரம் பல்லடம் சாலையிலுள்ள வித்யாலயம் பேருந்து நிறுத்தம் எதிர் புரத்தில் இருக்கும் [ முருகன் செட்டியார்சண்முகம் அறக்கட்டளை தங்கம் நினைவு அறக்கட்டளை என்ற கால்நடை ( நாய்கள் பராமரிப்பு மற்றும் வளர்ப்பு ) தனியார் டிரஸ்ட் என்ற பெயரில் நாய்கள் பராமரிப்பு மற்றும் வளர்ப்பு என்ற பெயரில் சமூக ஆர்வலர்கள், பொது மக்களிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்டு வருவது தொடர்பாக உரிய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க விரைவாக உரிய தீர்வுகாண வேண்டி புகார் அளித்திருந்தேன்.
அதன் பேரில் தற்போது விசராணை நடைபெற உள்ள நிலையில் விசாரணையை நடத்த விடாமல் சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி மேற்படி திருப்பூர் பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியில் ஆதரவற்ற விலங்குகள் பராமரிக்கும் முருகன் செட்டியார் அறக்கட்டளை, தங்கம் நினைவு அறக்கட்டளை தரப்பில் அடையாளம் தெரியாத பலரை சட்டவிரோதமாக துண்டி விட்டு எனக்கு செல்போனில் தொடர்ச்சியாக தொடர்புக்கொண்டு அச்சுறுத்தி மிரட்டல் விடுத்து வருவது தொடர்பாக உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில் மின்சார வாரியம், தாலுகா அலுவலகங்கள்,ரேசன்கடைகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தலையீடு, ரேசன் கடைகள் முறைகேடுகள், ரேசன் அரிசி கடத்தல் போன்ற பொது பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்களுருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டு வருவது தொடர்பாக உரிய தீர்வுகாண வேண்டும் கடந்த வாரம் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்களாகிய K.A.K.P. கிருஷ்ணசாமி அவர்களின் வீட்டுக்கே சென்று அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தி்ல் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு விசாரித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்ட பகுதிகளில் இரவு பகலாக தன்னிலம் இல்லாமல் சமூகத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் திருப்பூரிலுள்ள பொது மக்களுக்கு ஏற்படும் மாநாகராட்சி ,குடிநீர், மின்சாரம், சாலை வசதி, போன்ற பொது பிரச்சனைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் இப்பிரச்சினைகள் முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர்கள் கவனத்துக்கு எடுத்து உரிய தீர்வுகாணப்பட்டு பொது மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்து வருகின்றோம்.திருப்பூரில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தெருக்களில் அடிபட்டு உயிருக்குப் போராடும் நாய்களை கொண்டு சென்றால், அதிகளவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் பணம் வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்தது.

இது குறித்து சமூகத்தில் உள்ள அக்கறையின் காரணமாக சமூக ஆர்வலர்கள் என்ற முறையில் கடந்த ஜூன் மாதம் 27-06-2023 ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர்,காலைநடை துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர்களுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையி்ல் கடந்த வாரம் இது தொட‌ர்பாக மீ்ண்டும் மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக புகார் அளிக்கப்பட்டதின் பேரில்,
இப்புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது வருகின்ற 19ம் தேதி செவ்வாய்க்கிழமை திருப்பூர் பல்லடம் சாலையிலுள்ள வீரபாண்டி கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் காலை 11 மணியவில் இது குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை நடக்கவுள்ளது இது தொட‌ர்பாக எங்களுடைய சங்கத்திற்கு மேற்படி விசாரணை அதிகாரி மேற்படி விசாரணையி்ல் கலந்து கொண்டு திருப்பூர் பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியில் ஆதரவற்ற விலங்குகள் பராமரிக்கும் முருகன் செட்டியார் அறக்கட்டளை, தங்கம் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் நடைபெற்ற வருகின்ற மோசடிகள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான ஆவணங்களை நேரிடையாக வந்து அளிக்கும் படி கடிதம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் மேற்படி 19 ம் தேதி நடைபெற உள்ள விசாரணையி்ல் எங்களை கலந்து கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக இன்று காலை முதல் சம்பந்தப்பட்ட தனியார் அறக்கட்டளையை சேர்ந்த நபர்கள் பலர் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து எனது செல் போன் எண் 9344617449 எண்ணில் தொடர்ச்சியாக தொடர்புக் கொண்டு மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசி அச்சுறுத்தி மிரட்டி அநாகரீகமாக நடந்து வருகின்றனர்.
எனவே இது தொட‌ர்பாக போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகண்டு 19 ம் தேதி நடைபெற உள்ள விசாரணையி்ல் பங்கேற்க விடாமல் தடுத்து அச்சுறுத்தி மேற்படி புகரை திரும்பப்பெறக்கோரி தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வருவது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் எதிர் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்டு வருகின்ற வித்யாலயம் பகுதியில் ஆதரவற்ற விலங்குகள் பராமரிக்கும் முருகன் செட்டியார் அறக்கட்டளை, தங்கம் நினைவு அறக்கட்டளையின் மீது உடனடியாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்களுக்களுடைய பொது பிரச்சனைகளுக்காக சமூகத்தில் பணியாற்றி வரும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button