ரயில்வே

சரியான திட்டமிடல் இன்றி இயக்கப்படும்  ஏசி மின்சார ரயில்! கடும்  வெயிலின் தாக்கத்தால் பயணிகள் வேதனை!

சென்னை மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனை ஏற்று பயணிகள் வசதிக்காக ஏ.சி மின்சார ரயில் சேவை விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது. அதன்படி,

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே  முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை தொடங்கியது
சென்னை கடற்கரையில் இருந்து  செங்கல்பட்டிற்கு இயக்கப்படும் ஏசி மின்சார ரயிலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் .35 ரூபாய் அதிகம் ஆக 105 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வெயில் அதிகமாக இருக்கும் நண்பகலில்  ஏசி மின்சார ரயிலை இயக்காமல்
காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 10.40 மணியளவில் கடற்கரை ரயில் நிலையம் வந்தடையும். பின்னர் கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடைகிறது.
அதுமட்டுமில்லாமல் தனியார் மற்றும் அரசு அலுவலகம் செல்வோர் வசதிப்படியும் தற்போது இயக்கப்படும் ஏசி மின்சார ரயில் சேவையின் நேரம் இல்லை என்பது பயணிகள் முன்வைக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இந்த மின்சார ரயில் சேவைக்கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறைந்தபட்ச கட்டணமே ரூ.35 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரயில் கட்டணத்தை விட அதிக கட்டணம்  என்றும் ஆனால் இந்த ஏசி மின்சார ரயில் பயணிகளுக்கு தேவையான சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என தங்கள் அதிருப்தியை சென்னை புறநகர் மின்சார ரயில் பயணிகள் முன்வைத்து இருக்கிறார்கள். இப்படி சரியான திட்டமிடல் இன்றி இந்த ரயிலை இயக்குவதற்கு இயக்காமலே இருக்கலாம் எனவும் பயணிகள் ஆதங்கத்துடன் கூறியதை பார்க்க முடிகிறது.

Back to top button