சர்வாதிகாரியாக செய்ல்படும் பழனி முருகன் கோயில் உதவி ஆணையர்!
பக்தர்கள் வேதனை! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
விஐபிகளுக்கு இலவச சிறப்பு அனுமதி இல்லை! ஆனா இருக்கு!
பழனி முருகன் கோவில் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொலைபேசி எண் இருக்கு… ஆனா இல்லை…
ஊழியர்களை மிரட்டி வைத்திருக்கும் பழனி முருகன் கோவில் உதவி ஆணையர் லட்சுமி!
பழநி மலை முருகன்
திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காம தேனுவும், இனன்-என்ற சூரியனும். குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது.
திரு – லட்சுமி
ஆ – காமதேனு
இனன் – சூரியன்
கு – பூமாதேவி
டி – அக்கினிதேவன்
இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு “திருவாவினன் குடி” என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.
பழனி முருகனை வழிபட்ட ஐந்து ஐந்து பேர்களில் ஒரு பெயர் கொண்ட உதவி ஆணையர் திரு – லட்சுமி. சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று
பக்தர்கள் வேதனை! திருவாவினன் குடி என்ற பெயருக்குள் உதவியாளரின் லட்சுமி பெயரும் இருப்பதை தெரிந்து கொண்டு இனிமேல் முருகப் பெருமானை வழிபட வரும் பக்தர்களுக்கு தொண்டு செய்யும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். என்பதுதான் அனைவரின் ஆதங்கம். ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு தற்போது சர்வாதிகாரியாக உதவி ஆணையர் லட்சுமி தொடர்ந்து நீடிப்பது தான் வேதனையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள முருகர் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேகத்தை உலகத்தில் உள்ள அனைத்து முருகர் பக்தர்களும் நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தனர். 48 வது நாள் மறு கும்பாபிஷேகத்திற்கு முன்பு ஒரு முறையாவது பழனி முருகர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற ஆசை அனைத்து முருகர் பக்தர்களுக்கும் உள்ளே இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.
தற்போது கோடைகாலமாக இருப்பதால் வெயில் 106 டிகிரி வாட்டி வதைக்கின்றது . பழனி மலை மீது பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும் இடங்களில் மேற்கூரை அமைக்காமல் திறந்த வெளியாக இருப்பதால் வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை வெயிலில் நீண்ட நேரம் நிற்பதால் உடல் பாதிக்கப்பட்டு சோர்வடைந்து வருவதாக பக்தர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். வெயிலில் இருந்து தப்பிக்க பக்தர்களுக்கு போதுமான நிழற்குடை வசதி இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அதேபோல் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த சில தினங்களுக்கு பின்பு சிறப்பு இலவச தரிசனம் அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இது அனைவருக்கும் ஒரே வழிபாடு என்பதற்காக இந்த அறிவிப்பு பலகை கோவில் நிர்வாகம் வைத்துள்ளதாக நாம் நினைப்பது சரியாக இருக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஏனென்றால் கோவில்களுக்கு வரும் அரசியல்வாதிகள் முக்கிய அரசு அதிகாரிகள் காவல்துறையினர் தங்களது குடும்பத்தினருடன் வந்து சிறப்பு தரிசன பாதையில் சென்று வழிபட்டு வருவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டினால் இந்த முடிவை கோவில் நிர்வாகம் எடுத்ததாக தெரிவித்துள்ளது.
ஆனால் அப்படித்தான் நடக்கிறதா என்றால் அது முற்றிலும் உண்மை இல்லை என்று மறுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். குறிப்பாக பத்திரிக்கை துறையைச் சார்ந்தவர்களுக்கு இலவச சிறப்பு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் கடுமை காட்டி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் இருக்கும் சாதாரண ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களை சிறப்பு தரிசன பாதையில் இலவசமாக அனுமதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரமிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ,பழனி கோவில் நிர்வாகத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் அதுவும் முக்கியமாக விடுமுறை நாட்களில் குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன பாதையில் இலவசமாக சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து சிறப்பு தரிசன பாதையில் சென்று வழிபட்டு வருவதற்கு அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி அரசியல் கட்சிகளில் உள்ள முக்கிய புள்ளிகளின் உறவினர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பொழுது அவர்களிடம் பெரிய தொகையை சன்மானமாக பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் குடும்பத்தினரை ராஜமரியாதையுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்து அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு இதை யார் செய்கிறார்கள் என்று அங்கு இருக்கும் கோவில் ஊழியரிடம் கேட்டதற்கு நாங்கள் யாரும் இதுபோன்று பணம் வாங்கி அழைத்துச் செல்வதில்லை என்று கூறினார்கள். இதை யார் செய்கிறார்கள் என்று ரிப்போர்ட்டர் விஷன் நிருபர் நேரடியாக கோயில் மலைமீது சென்று 200 ரூபாய் டிக்கெட் எடுத்துக் கொண்டு சிறப்பு தரிசனம் செல்லும் பாதையிலன் முகப்பில் நின்று டிக்கெட் சரி பார்த்து உள்ளே அனுமதித்தவரை பார்த்து உங்கள் பெயர் என்ன என்று கேட்பதற்கு அவர் பெயரை சொல்ல மறுத்து இருக்கிறார். நேர்மையான ஊழியர் என்றால் அவர் பெயரை தெரிவிக்க வேண்டும். இதிலிருந்து தெரிகிறது அவர் நேர்மையானவர் இல்லை என்று. அதன் பின்பு கோவில் நிர்வாகத்தில் உள்ள ஊழியரிடம் கேட்டபோது அவர் பெயர் கருப்பசாமி அவர் கோவில் நிரந்தர ஊழியர் இல்லை என்றும் கோவிலுக்கு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் இருந்து ஆட்களை நியமித்துள்ளதாகவும் அவர்களுக்கு சூப்பர்வைசர் தான் இந்த கருப்பசாமி என்றும் தெரிவித்தனர். கோவில் நிர்வாகத்தில் நூற்றுக்கணக்கான நிரந்தர ஊழியர்கள் இருக்கும்போது தனியார் செக்யூரிட்டி சூப்பர்வைசரை அந்த இடத்தில் நிறுத்துவதற்கு காரணம் என்ன என்று விசாரித்தால் அரசியல் முக்கிய புள்ளிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சிறப்பு தரிசன பாதையில் இலவசமாக அனுமதிக்கும் போது அவர்கள் ஒரு பெரும் தொகைய சன்மானமாக கொடுத்து விட்டு செல்வது வழக்கமாக இருக்கிறதாம் . இதுபோன்று பணம் பெற்றுக் கொண்டு சிறப்பு தரிசன பாதையில் அனுமதிக்க பணம் வாங்குகிறார்கள் என்ற புகார்கள் மீது கோவில் நிர்வாக அதிகாரிகள் ஊழியர்கள் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்கு இதுபோன்று தனியார் நிறுவனத்தில் இருந்து நியமித்திருக்கும் ஒருவரை வைத்து பணம் வசூல் செய்து வருகிறார்கள் என்கின்றனர் அங்குள்ள நேர்மையான கோவில் நிர்வாக ஊழியர்கள். இது சமந்தமாக சமூக ஆர்வலர்கள் உதவி ஆணையர் லட்சுமி அவர்களிடம் கேட்டதற்கு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டினர்.
🚩🚩🚩🚩🚩 அருள்மிகுபழனி தண்டாயுதபாணி சுவாமி. திருக்கோயில் மே மாதத்தை முன்னிட்டு அதிக அளவு பக்தர்கள் கூட்டம் வருகைவந்துள்ளனர்.
இன்றுஒரு மாற்றுத்திறனாளிஅவர் குடும்பத்தோடு வந்திருந்தார்.
அவர் மாற்றுத்திறனாளி செல்லும் வழியில் சென்ற போது அங்கு உள்ள செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தினார்கள் ஏன்
என்று கேட்டபோது இதில் நீங்கள் செல்லும் பாதை அல்ல
விஐபி செல்லும் பாதைஎன்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டனர். மின் ரயிலில் உள்ள.பெண் சூப்பரண்டு கேட்டபோது. இது மாற்றுத்திறனாளிசெல்லும் வழியல்ல .விஐபி செல்லும் வழி என்று பதிலளிக்கின்றன. ஒரு கோயிலுக்கு வெட்கக்கேடாக உள்ளன.பழனிக்கு வரும் மாற்றுத்திறனாளிகூட ஒரு நபர் துணையாக போகலாம். என்று.தமிழக முழுவதும் அனைத்து கோயில்களிலும் சட்டம் இருக்கின்றன ஆனால் பழனி கோயில் மட்டும் தான் அது இல்லை . இணை ஆணையர். திரு நடராஜன் அவர்கள் எத்தனை முறை சொன்னாலும் இங்கிருக்கும் சூப்பர்ண்டுகள் அதை கண்டு கொள்ளவில்லை. உடனடியாக இந்த வீடியோவை ஆதாரமா எடுத்துக் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
உதவி ஆணையர் லட்சுமி மீது உள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு பழனி முருகர் கோவில் உதவியாளர் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால் அந்த தொலைபேசியை தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் எடுக்கிறார். அவரிடம் உதவி ஆணையர் லட்சுமி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டால் ஆபீசுக்கு வரவில்லை என்று எப்போது வருவார் என்று கேட்டால் தெரியாது என்று கூறுகிறார். எங்கு சென்றுள்ளார் என்று கேட்டால் மதுரைக்கு சென்றுள்ளார் என்று கூறுகிறார் . எப்போது வருவார் என்று கேட்டால் தெரியாது என்று பதில் கூறுகிறார்.அவரது செல் போன் நம்பர் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று கூறுகிறார். எதுவுமே தெரியாத ஒரு ஊழியரை உதவி ஆணையர் அலுவலகத்தில் எதற்கு வைத்துள்ளார்கள் என்று விசாரித்தால் அதிர்ச்சி தரும் தகவலை அங்குள்ள ஒரு சில ஊழியர்கள் தெரிவிக்கின்றன. யார் உதவியாளரை பற்றி கேட்டாலும் யாரும் வாய் திறக்கக் கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறாராம். எந்த ஊழியராவது உதவியாளரைப் பற்றி தெரிவித்தால் அவர்களை வேலையை விட்டு உடனே நீக்கி விடுவேன் என்று மிரட்டி வைத்திருக்கிறதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. உதவி ஆணையரின் சர்வாதிகாரி போக்கை கண்டித்து பலமுறை பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் திருக்கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு முறையாக குத்தகை செலுத்தி வரும் நிலங்களை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதவி ஆணையர் லட்சுமி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பழனி திருக்கோயிலை சுற்றி சாலை ஓரக்கடைகளில் வியாபாரம் செய்து வந்த பெண்களை கடைகளை அகற்றி சொல்லி ஒரு பெண்ணை கழுத்தில் இருந்த தாலியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அடித்து சர்வாதிகாரி போல் செயல்பட்டதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்று கூடி உதவி ஆணையர் லட்சுமி அவர்களை முற்றுகையிட்ட போது காவல்துறையினர் உதவி ஆணையர் லட்சுமியை பொதுமக்களிடமிருந்து காப்பாற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சர்வாதிகாரி போல் செயல்பட்டு வரும் பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருக்கும் முரளிதரன் ஐஏஎஸ் மௌனமாக இருப்பதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.
பழனி முருகர் கோவிலில் தனியார் நிறுவனத்தின் செக்யூரிட்டி சூப்பர்வைசர் மூலம் பணம் சம்பாதிக்கும் கோவில் நிர்வாக உதவி ஆணையர் லட்சுமி மீது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே போல் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களில் உள்ள அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதுவும் குறிப்பாக திருச்செந்தூர் பழனி முருகர் கோவில்களில் உயர் அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகளை கடந்த அதிமுக ஆட்சியில் நியமித்தனர். ஆனால் அந்த அதிகாரிகள் ஏதோ தங்களுக்கு இந்த கோவிலை எழுதிக் கொடுத்தது போல் நடந்து கொள்வது தான் வேதனை அளிக்கிறது. அதைவிட அவர்களுக்கு கீழ் உள்ள இணை ஆணையர், உதவி ஆணையர் இவர்கள் செய்யும் அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல !கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் அலட்சியப் போக்கை மட்டுமே கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
பொதுமக்களின் புகார்கள் மீது கவலை படாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.