சர்வாதி காரியாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர்! நடவடிக்கை எடுப்பாரா!? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!
மயிலாடுதுறை மாவட்டத்தில்
மயிலாடுதுறை
சீர்காழி நகராட்சி களாகவும்
குத்தாலம்
தரங்கம்பாடி
மணல்மேடு
வைத்தீசுவரன் கோவில் பேரூராட்சிகளாகவும்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்
சீர்காழி ஊராட்சி ஒன்றியம்
குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்
செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களாகவும் தற்போது உள்ளது.
மயிலாடுதுறை ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில்
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் 37 ஊராட்சி மன்றங்களை உ்ளடக்கியதாகும் . ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி (BDO ). அலுவலகம் சீர்காழியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தில்லை விடங்கன் ஊராட்சியிலிருந்து திருத தோனிபுரத்து கிராம மக்களை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புரவேலு புறக்கணித்து சர்வாதிகாரியாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழந்துள்ளது.இப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எவ்வித அரசு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படாமலும் தெரு விளக்கு. குடிதண்ணீர் வசதி .சாலை வசதி . போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற விடாமல் ஊராட்சி மன்ற தலைவர் தடையாக இருப்பதாக கிராம பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடக்கும் நூறு நாட்கள் வேலை திட்டத்தில் தனக்கு வேண்டப்பட்ட நபரை மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் அமர்த்தி பல லட்ச ரூபாய் ஊழல் முறைகேடு செய்து செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
இதுவரை எந்த கையொப்பமும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகாவிடம் வாங்கவில்லை என்றும். ஊராட்சி மன்ற தலைவரே தன்னிச்சையாக ஒரு சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாகவும் இதற்கு உடந்தையாக ஊராட்சி மன்ற செயலாளர் பக்கிரி சாமியும் செயல்பட்டு வருவதாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கார்த்திகா மற்றும் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரி குற்றம் சாட்டியுள்ளனர்.
பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அது மட்டும் இல்லாமல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு கொடுக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.