காவல் செய்திகள்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்று அழைக்கப்படுபவர் தலைமை காவலர் லிஸ்டிலும் இல்லை உதவி ஆய்வாளர் லிஸ்டிலும் இல்லை!?பாதிக்கப்பட்ட இந்த போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் இரவு பணி பார்க்கும் பொழுது மறுநாள் ஓய்வு வழங்க முதல்வருக்கு கோரிக்கை!

இரவு வேலை பார்க்கும் சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் இதற்கான ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், இரவு நேரங்களில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இரவு பணிக்கு அடுத்த நாள் மதியம் முதல் வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.. இந்த ஒருநாள் விடுப்பு போலீசாருக்கு மிகுந்த பலனை தரும் என்று நம்பப்படுகிறது.. அவர்கள் குடும்பத்து உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட்டு, மனசுமையை குறைக்க முடியும், அத்துடன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வாராந்திர ஒய்வு பற்றி அறிவிப்பு இல்லை,!!

தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும் காவல் ஆணையாளர் அவர்களுக்கும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் கோரிக்கை…

போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அவர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அதாவது உதவி ஆய்வாளர் முதல் உதவி ஆணையாளர் வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடுகிறது மறுநாள் முழுவதும் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுகிறது அதேபோல் சென்னை மாநகரத்தில் முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து இரவு (Traffic petrol vechile) ரோந்து வாகனத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மட்டும் இரவு ரோந்து பணியை முடித்த முடித்த பிறகு கூட மறுநாள் ஓய்வு கொடுக்க மறுக்கிறார்கள் உதவி ஆய்வாளர் முதல் உதவி ஆணையாளர் அவரை கொடுக்கப்பட்டு வருகிறது அதேபோல் (Traffic petrol vechile) சிறப்பு உதவி ஆய்வாளர் களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் காவலர் முதல் தலைமை காவலர் வரை அனைவருக்கும் ஒருநாள் வாராந்திர ஓய்வு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார் ஆனால் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகிய நாங்கள் தலைமை காவலர்கள் லிஸ்டிலும் இல்லை காவல் உதவி ஆய்வாளர் லிஸ்டிலும் இல்லாமல் .திரி சங்கு சொர்க்கம் போல் திண்டாடுகிறோம். என்று புலம்பிக் கொண்டு இருக்கிறோம்.

1.காவலர் முதல் தலைமை காவலர் வரை ஒருநாள் வாராந்திர ஓய்வு முதல்வரால் கொடுக்கப்பட்டது.

2.அதேபோல் வாகன இரவு ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கோ ஒருநாள் வாராந்திர ஓய்வும் கிடையாது இரவு ரோந்து பார்த்தால் ஓய்வும் கிடையாது.

ஆகவே தமிழக முதலமைச்சர் அவர்களும் காவல் ஆணையாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட இந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இரவு பணி பார்க்கும் பொழுது மறுநாள் ஓய்வு வழங்கப்பட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button