கல்வி

சிறு சேமிப்பு என்ற பெயரில் சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களிடம் நூதன முறையில் வசூல் செய்த  40 லட்சம் ரூபாய் பணம் மோசடி ! சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது
கல்வித்துறை  நடவடிக்கை எடுப்பாரா  மதுரை மாவட்ட ஆட்சியர்!

சிறு சேமிப்பு என்ற பெயரில் சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களிடம் வசூல் செய்த  40 லட்சம் ரூபாய் பணம் சுருட்டல்!!
கல்வித்துறை விதிகளை மீறிய தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள்  மீது நடவடிக்கை எடுப்பாரா  மதுரை மாவட்ட ஆட்சியர்!

2023 /2024   கல்வி ஆண்டு முடிந்தும் சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளியில்  பயின்ற மாணவ, மாணவிகளிடம் சிறுசேமிப்பு என்ற பெயரில்  வசூலித்த பணத்தை திருப்பி தரமால் ஏமாற்றி மோசடி செய்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது,
மாணவர்கள், மாணவிகளிடம் கட்டிய பணத்தை திருப்பி தரமால் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளி நிர்வாகிகள் விரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது!


மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பாடசாலை தொடங்கி,இன்று வரையிலும் ஏழை எளியோர்கள் பயன் பெரும் வகையில் கல்வி சேவை செய்து வருகின்றனர்,
   
இதில் தமிழ் வழி பள்ளி கூடத்தை அரசு உதவி பெறும் பள்ளியாகவும் , ஆங்கில வழி பள்ளி  கூடத்தை தங்கள் நிர்வாகத்தின் கீழ் என தனித்தனியே இரண்டு பள்ளிகளை நடத்தி வருகின்றனர், இந்த வணிக சமுதாய உறவின் முறையில் பள்ளிகளை மட்டும் நிர்வாகித்து  வந்த பொறுப்பாளர்கள் செய்த குளறுபடியால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன், தமிழ் வழி பள்ளியான காமாஜர் நடுநிலை பள்ளி  தமிழக அரசின் நேரடி பார்வையின் கீழ் வழி இயங்கி வருகிறது.

தமிழ் வழி பாட பள்ளியை உறவின் முறையாளர்கள் நடத்தும் போது முப்பது ஆசிரியர்களுடன் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வந்தனர், ஆனால் தற்போது 150க்கும்  கீழே மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க,
காமராஜர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற பெயரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய உறவின் முறையாளர்கள்  ஆரம்பித்து அதிலும் ஆங்கில வழிபாடமாக குறைவான கல்வி கட்டணத்தில் மாணவ,மாணவியர்கள் சேர்க்கை செய்து LKG ,UKG , 1ம்வகுப்பு முதல் 12ம் வகுப்புகளை அரசின் வழிகாட்டுதல் படி பள்ளி இயங்கி வருகிறது
இந்த ஆங்கில வழி பாட பள்ளியை உறவின் முறையாளர்கள் தலைமையின் கீழ் செயலாளர், தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு வரை உறவின் முறையாளர்கள் தலைமையின் கீழ்  சிறந்த முறையில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகம் நடந்து வந்தாக சொல்ல படுகிறது, அதன்பின் உறவின் முறை பொறுப்பாளர்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புதிய பொறுப்பாளர்களை மெட்ரிக் பள்ளிக்கு தேர்வு செய்து மாற்றம் செய்வது வழக்கமாக கொண்டு இருந்தனர், ஆனால் காமராஜர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின்  இப்போ  உள்ள நிர்வாகியான தலைவராக உள்ள எம்.கருப்பு சிவபாலனும், செயலாளராக  வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளராக  பணி செய்து ஓய்வு பெற்ற பென்ஜாமின் உள்ளனர்,
இந்த நிலையில் உறவின் முறை நிர்வாகத்துக்கு  எதிராக செயல்படுவதாகவும் யாராவது  கேள்வி கேட்டால் காவல்துறையை வைத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில்  மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அது மட்டுமில்லாமல் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு இடம் இது சம்பந்தமாக புகார் கொடுத்தாலும் அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதற்கு காரணம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளையும் தன் வசம்   வைத்துக்கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு விதிகளுக்கு முரணாக செயல் பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு ஆதரவாக காவல்துறை மற்றும்  அரசியல் கட்சி முக்கிய  பிரமுகர்கள் இருப்பதாகவும் .
அவர்களின் துணையுடன்  அரசுக்கு எதிராக சட்டவிரோத செயல்களை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என
இதற்கு முன் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளுடன் விசாரித்த போது அவர்கள் அதிர்ச்சி தரும் தகவலை ஒன்றை கூறினர்கள்
அது என்னவென்றால் கல்வி நிர்வாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக  கஷ்டபட்டு சேர்த்து வைத்த பணத்தை நிர்வாக சீர்கேட்டால் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஊழல் முறைகேடுகளுக்கு காமராஜர் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தில் தலைவராக இருக்கும் கருப்பு சிவபாலனும், செயலாளராக இருக்கும் பென்ஜாமும்
ஆகியோர்தான் தெரிந்துதான் இந்த ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் உறவின் முறை நிர்வாகிகள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

அது மட்டுமில்லாமல்
கல்வித்துறை விதிகளை மீறி காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் தன்னிச்சையாக மாணவ மாணவியர்களிடம் சிறுசேமிப்பு என்ற பெயரில் 40 லட்சம் ரூபாய் வரை பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர் அது என்னவென்றால்.

பள்ளி மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினால், வருங்கால இந்தியாவே சேமிப்பில் சிறந்து விளங்கும் என்பதால்தான் தொடக்கப் பள்ளிகளிலேயே சஞ்சாயிகா என்னும் மாணவர்களுக்கான சிறு சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் தினமும் மாணவர்கள் தங்களிடம் இருக்கும் சிறு தொகையை அந்த பொறுப்பாளரிடம் கொடுத்தால் அதை அந்த மாணவரின் கணக்கில் வரவு வைத்து அந்த தொகையை அஞ்சலகத்தில் சேமிப்பர். இவ்வாறு சேமிக்கப்படும் பணத்திற்கு அஞசலகங்களில் 3 சதவீதம் வட்டி தரப்படும். இந்த வட்டியை மட்டும் மாணவர்களுக்கு தராவிட்டாலும், அந்த வட்டித்தொகையை பள்ளியின் வளர்ச்சி நிதியில் சேர்க்கப்படுகிறது.
அடுத்த வகுப்புக்குச் செல்ல மாணவர்களுக்கு இந்த சேமிப்பு தொகை பயன்படுவதுடன், பெற்றோர்களுக்கும் பேருதவியாக இருக்கும். 
மாணவர்களுக்கு சிறு வயது முதல் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. பள்ளி கல்லூரிகள் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சமர்ப்பிப்பது அவசியம் ஆகும். அதன் படி 10 வயது நிரம்பிய அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இயங்கி வரும் இந்திய தபால் துறையின் வங்கி சென்று சேமிப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம்
இந்த வங்கி கணக்கில் இருப்புத் தொகை எதுவும் தேவையில்லை. மேலும் கணக்கு தொடங்கியதும் ஆரம்ப நிதியாக ரூ. 100 மட்டும் செலுத்த வேண்டும் . இந்த சேமிப்பு கணக்கை தொடங்க மாணவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் செல்போன் கொண்டு வர வேண்டும். கணக்கு தொடங்கப்பட்ட பின் மாணவர்களுக்கு கணக்கு எண், பெயர் விவரம், உதாரணமாக ஐ.எப்.எஸ்.சி. கோடு : IPOS0000001, எம்.ஐ.சி.ஆர். கோடு : 627768004 போன்ற விவரங்கள் வழங்கப்படும் அதை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களின் வங்கி கணக்கு சமர்ப்பிக்கும் இணையதளத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் விவரங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் மூலமாக மாணவர்களின் விவரங்களை எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும். பள்ளிகளில் மாணவர்களுக்கு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்தால், தபால் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து அதிக மாணவர்களுக்கு கணக்கு தொடங்கி கொடுப்பார்கள். இந்த வங்கி சேவைகள் உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கண்டிப்பாக மாணவர் சிறு சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு. திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் களடம், சிறு சேமிப்பை ஊக்கப்படுத்தாமை போன்ற காரணங்களால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சிறு சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை என கல்வி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பள்ளிக் கல்வித் துறையின் விதிகளை காற்றில் பறக்க விட்டு சட்ட விரோதமாக
சோழவந்தான்  காமராஜர் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் தன்னிச்சையாக  மாணவ மாணவியர்களிடம்  சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் பணம் சேமியுங்கள் என்று கூறி 40  லட்சத்துக்கும் மேலாக பணம் வசூல் செய்துள்ளதாகவும்
கல்வி ஆண்டு முடிந்தும் சிறுசேமிப்பிற்காக வழங்கிய மாணவ , மாணவிகளுக்கு  சிறுசேமிப்பு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர், ஒரு மாணவனின் பெற்றோர் கூறுகையில் சார் என் மகன் சிறுக சிறுக சேர்த்த பணம்  இப்ப இந்த கல்வி ஆண்டு முடிந்து , கோடை விடுமுறையும் முடிந்து விட்டது ஆனாலும் எங்க சேமிப்பு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகின்றனர், சிறு சேமிப்பு பணத்தை எப்போது  கொடுப்பீர்கள் என்று கேட்டால் உங்கள் குழந்தையின்   (TC) யை வாங்கிக்கொண்டு சொல்லுங்கள் என மிரட்டும் தோனியில் பேசி வருவதாகவும் இதனால்  மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என வேதனையுடன் தெரிவித்தார்.

  தமிழக பள்ளி கல்வி துறைக்கும் ,மாவட்ட பள்ளி கல்வி அலுவலகத்திற்கும், அவப்பெயர் ஏற்படுத்தும்,  சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தின் தலைவர் செயலாளர் மற்றும் துணை போகும் நபர்கள் மீது வந்துள்ள குற்றச்சாட்டை மதுரை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நியமித்து பள்ளியில் சட்ட விதிகள் மீறி மாணவிகளிடம் பெறப்பட்ட சிறுசேமிப்பு பணத்தை கொடுக்காமல் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிந்து ஊழல் முறைகேடு நடந்திருந்தால் அதற்கு உடந்தையாக இறந்தவர்கள் மீது  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் சிறு சேமிப்புக்கு வழங்கிய மாணவ மாணவிகளுக்கு அந்த பணத்தை திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக உள்ளது.
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் , பொறுத்திருந்து பார்ப்போம்???

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button