காவல் செய்திகள்

சிறை கைதி மனைவிக்கு வாட்ஸ் ஆப் காலில் உல்லாசத்திற்கு அழைத்த சேலம் மத்திய சிறைக் காவலர் மீது  நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார்!

சிறையில் கணவனை பார்க்க சென்ற  மற்றொரு சிறை கைதி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறைக் காவலர் மீது  நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த எடப்பாடி தனபால்!

தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் தீர்வு காணவும் எடப்பாடி   தனபால் பேட்டி!

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்தவர் பைக் மெக்கானிக் சிவக்குமார்.  இவர் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ளார்.

இந்நிலையில் அங்குள்ள தன் கணவரை பார்க்க சிவக்குமார்.  மனைவி முருகேஸ்வரி (29) கடந்த 25.08.2023 அன்று சேலம் மத்திய சிறைக்கு சென்றுள்ளார்.

அப்போது மனு பதிவு செய்யும் இடத்தில் இருந்த சிறைகாவலர் விஜயகாந்த் என்பவர் முருகேஸ்வரி செல்போன் எண்ணை குறித்து வைத்துக்கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு வாட்ஸ் ஆப் காலில் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த  முருகேஸ்வரி  கணவன் சிவகுமாரிடம்  கூறி உள்ளார்.

இதனையடுத்து தன்னுடன் சிறையில்  நில அபகரிப்பு வழக்கில் இருந்த  எடப்பாடி தனபாலிடம் கூறி உள்ளார்கள்.  சிவகுமார். மற்றும் அவர் மனைவி முருகேஸ்வரி

இது சம்பந்தமாக சிறையில் இருந்து வெளியே வந்த எடப்பாடி தனபால் சிறைத்துறை  விஜிலென்ஸ் அலுவலகத்தில் புகார் தெரிவித்த போது அங்குள்ள காவலர்கள் மணிக்குமார்,இளமாறன் மற்றும் ஒரு காவலர் மீது புகார்  கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் குற்றம் சாட்டப்பட்டவருடன் உடந்தையாக இருக்க வேண்டும் என கூ றி உள்ளார்கள்

இது தொடர்பாக முருகேஸ்வரி (29). மற்றும்  எடப்பாடி தனபால் ஆகியோர்  இன்று

09.09..2023 நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகம் வருகை தந்து நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில்   சம்பந்தப்பட்ட சிறத்துறை காவலர்கள் மீது புகார் மனு    கொடுத்தனர் இது சுமந்தமாக செய்தியாளர்களை எடப்பாடி தனபால் சந்தித்து பேட்டி அளித்தார்

அப்போது இதில் பாதிக்கப்பட்ட சிவகுமார் மனைவி முருகேஸ்வரி தன்னிடம் இது சம்பந்தமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டதாகவும் தற்கொலையை விட்டால் வேறு எனக்கு எதுவும் தெரியவில்லை என்று எடப்பாடி தனபால் இடம் புலம்பியுள்ளதாகவும் இதை அடுத்து எடப்பாடி தனபால்  முருகேஸ்வரிக்கு ஆறுதல் கூறி இந்த மாதிரி முடிவை எடுக்க கூடாதம்மா இதற்கு பல்வேறு வழி இருக்கிறது என்று தனபால் கூறியதாக பேட்டி அளித்துள்ளார்.

அதன் பின்பு எடப்பாடி தனபால் இது சம்பந்தமாக  நாமக்கல் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச.உமா ஆகியோரிடம்  புகார் கொடுத்தால் இதற்கு உடனடியாக அவர்கள் தீர்வு காணுவார்கள் என்று  கூறி இன்று முருகேஸ்வரி உடன் வந்து  எடப்பாடி தனபால் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்திருப்பதாக  தெரிவித்த எடப்பாடி தனபால்   தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button