சில லட்சங்கள் லஞ்சமாக பெற்று
பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய தோவாளை வட்டாட்சியர் !!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன்புதூர் பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பக்கு காரணமானவர் தோவாளை வட்டாட்சியர் சாரு ராமன் என்ற அதிர்ச்சித் தகவல்!
தனியார் நில உரிமையாளரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு
பெரிய குளம் கரைகள் உடைவதற்கு காரணமாக இருந்தவர்
தோவாளை வட்டாட்சியர் சாரு ராமன்
கன்னியாகுமரிமாவட்டம் தோவாளை வட்டாட்சியர் அலட்சியப் போக்கால்
செண்பகராமன்புதூர் பெரியகுளம் உடைந்ததால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு!
அருகில் வசித்த மக்கள் அனைவரும் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்ற அவலம்!! பேரிடர் பணியை சரியாகச் செய்யாமல் ஏமாற்றிய தோவாளை வட்டாட்சியர் சாரு ராமன்!
நான்கு மாதங்களுக்கு முன்பே வடகிழக்கு பருவமழை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன்புதூர் பெரியகுளம் அருகே உள்ள தமிழன் கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் பொதுப்பணித்துறைக்கு பெரியகுளம் தண்ணீர் வெளியே கால்வாய் வழி சொல்லமுடியாமல் ஒரு தனியார் விவசாய நிலத்தை சுற்றி தடுத்து வைத்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் குளங்களும் நிரம்பி வழிந்து வரும் நிலையில் தமிழக முதல்வர்
வடகிழக்கு பருவமழையையொட்டி பெய்த கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தோவாளையில் உள்ள பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அமைச்சர் மனோ தங்கராஜ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர்அருகில் பெரியகுளம் உள்ளது. அதன் அருகில் தமிழன் கல்லூரி அமைந்துள்ளது.
கல்லூரி உள்ளே 6அடி கால்வாய் அமைந்துள்ளது. அந்தக் கால்வாய் வழியே பெரியகுளம் குளத்திற்கு மழைநீர் வெள்ளம் செல்வது வழக்கம். பலமுறை குளம் மற்றும் கால்வாயில் தூர்வார அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இந்த பகுதியின் வட்டாட்சியாளர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மற்றும் தமிழன் கல்லூரி பின்புறம் கிறிஸ்டி என்ற சாமுவேல் என்பவருக்கு 60 ஏக்கர் நிலம் உள்ளது.
அந்த நிலத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கால்வாய் மூலம் குளத்திற்கு மழைநீர் செல்லும் பாதை அனைத்து மூடிவிட்ட தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக பொதுப்பணித்துறைக்கு பலமுறை தகவல் கொடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து தோவாளை வட்டாட்சியர் சாரு ராமன் அவர்களுக்கு குளத்திற்கு செல்லும் கால்வாய் போக மற்ற இடங்களை அளந்து கொடுக்குமாறு பரிந்துரை செய்து 4 மாதங்கள் ஆகியும் தோவாளை வட்டாட்சியர் கிரிஸ்டி என்ற சாமுவேல் அவர்களிடம் பல லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பொதுப்பணித் துறை பரிந்துரை ஆக்கிரமிப்பு செய்த விவசாய நிலங்களின் அளவை அளந்து கொடுக்காததால் தற்போது கால்வாய்கள் வழியாக மழை நீர் செல்ல முடியாமல் தற்போது பெய்து வரும் கன மழையால் பெரியகுளம் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள சிமிண்ட்கல் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் தமிழன் கல்லூரி முழுவதும் மழை வெள்ளம் மழை வெள்ளம் புகுந்து காணப்படுவதால் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் வசித்த கிராம பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று உள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
இப்பொழுது பெரியகுளம் கரை உடைந்து உள்ளதால் பாலம் கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை பொதுப்பணித்துறைக்கு உருவாகியுள்ளது.
இதனால் பல கோடி ரூபாய் பொதுப்பணித்துறைக்கு இழப்பு ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .
அதுபோல கால்வாய்களை சரி செய்ய வேண்டுமென்றால் தற்போதுள்ள சூழ்நிலையில் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் பொதுப்பணித்துறை உள்ளதற்கு வட்டாட்சியர் சாரு ராமன் தான் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் ஆகையால் தயவு செய்து தமிழக முதல்வர் அவர்கள் இது போன்ற பேரிடர் காலங்கள் அறிவிக்கும் முன்பு அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து சரி செய்தால் மட்டுமே இதுபோல பேரில் அவர்கள் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்கும் .
தக்க சமயத்தில் அரசுப் பணியை செய்யாமல் மெத்தனமாக இருந்த காரணத்தினால் தற்போது பெரியகுளம் கரை உடைப்பு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்கு காரணமாக இருந்த வட்டாட்சியர் சாரு ராமன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.