லஞ்ச ஊழலில் கொடிகட்டி பறக்கும் கொள்ளிடம் மேலாண்மை உதவி இயக்குனர் !!குடும்பத்தைப்பற்றி வாட்ஸ் ஆப் இல் கொள்ளிடம் அவதூறு பரப்பிய அதிமுக ஒன்றியச் செயலாளர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார்!? ஒன்றியச் செயலாளர் பதவி பறிக்கப்படுமா!?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் குடும்பதைப் பற்றி அவதூராக முகநூலில் பதிவிட்ட கொள்ளிடம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நற்குணன் மீது சைபர் கிரைமில் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக தகவல்!??
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நற்குணன் வாட்ஸ்அப் முகநூலில் மேலாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் மற்றும் அவரது மனைவி அவர்கள் மகள் பற்றி மிக மோசமான வார்த்தைகளில் அவதூராக பதிவிட்டுள்ளார் .
இது கொள்ளிடம் அதிமுக வட்டாரத்தில் தற்போது வைரலாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்றிய செயலாளர் நற்குணனன் மீது மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த புகார் சம்மந்தமாக அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப் பட்டிருப்பதாகவும் இதனால் கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பதவி கூட பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிமுக சீர்காழி உட்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப் படுகிறது!
இது சம்பந்தமாக கொள்ளிடம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நற்குணன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு இந்தப் பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றும் இந்தப் பதிவு தவறாக யாரோ என் பெயரை களங்கப்படுத்த பதிவிட்டு உள்ளதாகவும் இது சமந்தாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக கொள்ளிடம் மேலாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் பற்றி விசாரித்ததில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அரசு நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்க சீர்காழி மேலான் உதவி இயக்குனர் லஞ்சம் முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக பல புகார்கள் உதவி இயக்குனர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் வரை கொடுத்துள்ளதாகவும் இதை மறைக்கவே வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தன்னைப் பற்றி இதுபோன்ற அவதூறை தனக்கு தெரிந்த நண்பர்களிடம் சொல்லி முக நூல் களில் போட சொன்னதாகவும் தகவல் வந்துள்ளது. ஆகவே கொள்ளிடம் மேலான உதவி இயக்குனர் சுப்பையன் இன் முறைகேடுகள் மற்றும் ஊழல் பட்டியல் பற்றி முழு விபரம் ரிப்போர்ட்டர் விஷன் இதழில் வெளிவர உள்ளது.
எது எப்படியோ ஒரு அரசு அதிகாரியை அவரது பணியில் குறைகள் மற்றும் லஞ்ச ஊழல் முறைகேடுகள்ஈடு பட்டால் அந்த அதிகாரியை பற்றி முகநூலில் பதிவிடலாம்.ஆனால் இது போன்று அநாகரிகமாக பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்திற்கு முன் தண்டிக்கப் பட வேண்டும் என்பது தான் நிதர்சனம்!