சுகாதாரக் கேடால் சீரழிந்து கிடக்கும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம்!
நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட ஆட்சியர்!
சுகாதாரமற்ற நிலையில் சீரழிந்து கிடக்கும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம்!
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் உள்ளது . இதில் திமுக கட்சியை சேர்ந்த 12 வார்டு கவுன்சிலர்களும் அதிமுக ஆதரவு கவுன்சிலர்கள் ஆறு பேர் உள்ளனர்.
இதில் குறிப்பாக பேரூராட்சியில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பேரூராட்சி சார்பாக நடைபெறும் பல்வேறு பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக திமுக கவுன்சிலர்கள் புகார் கொடுத்ததும் அவர்களை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் அழைத்து சமாதானப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. பேரூராட்சி சார்பாக நடத்தப்படும் மக்கள் சபை கூட்டம் தனித்தனியாக நடத்தப்பட்டது என்றம்
அதில் குறிப்பாக மூன்று மற்றும் நான்காவது வார்டுகளில் மட்டும் யாக கிராம சபை கூட்டம் நடத்துவதாக பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்தினர் அதில் கலந்து கொண்ட பொதுமக்கள் சாலை ,குடிநீர் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை தேவையான இவை அனைத்தையும் செய்து தர பேரூராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் நான்காவது வார்டு கவுன்சிலர் மற்றும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் முறையிட்டனர். 4வது வார்டில் உள்ள குறைகளை 30 நாட்களில் நிறைவேற்றுவதாக பேரூராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை 4.வார்டில் உள்ள குறைகளை சரி செய்யவில்லை என்றும் கிராம சபை கூட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
அதுமட்டுமில்லாமல் நான்காவது வார்டு அதிமுக கவுன்சிலர் சோழவந்தான் அதிமுக பேரூர் செயலாளராகவும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பேரூராட்சியில் நடைபெற்ற அரசுப் பணிகளின் ஒப்பந்தத்தை எடுத்து செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியிலும் சோழவந்தான் பேரூராட்சியில் சார்பாக நடைபெறும் சாலை போடுவது கழிவுநீர் கால்வாய் கட்டுவது மழை நீர் வடிகால் கால்வாய் கட்டுவது என எந்த அரசு வேலைகள் இருந்தாலும் ஒப்பந்தம் எடுத்து
அந்த வேலைகளை தரமாக சரியாக செய்யாமல் பேரூராட்சி அதிகாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு ஒப்பந்த வேலைக்கான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதிமுக கட்சிப் பணிகளை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையெல்லாம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேரூராட்சி உதவி இயக்குனர் எஸ் சேதுராமன் ஆகியோருக்கு தெரிவித்தும் பொதுமக்கள் கோரிக்கையின் மீது எந்த விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர். .
குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 4.வது வார்டு ஸ்ரீராம் நகர் மற்றும் பாலமுருகன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுகிகளில் 500.க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.ஸ்ரீராம் நகர் தெருவில் பேரூராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பேவர் சரிவர அமைக்கப்படாததால்
தற்போது பேவர் பிளாக் கற்கள் அனைத்தும் சேதமடைந்து தெருக்களில் அமைந்துள்ள கழிவு நீர் கால்வாயில் பேவர் பிளாக் அனைத்தும் விழுந்துள்ளதால் கழிவுநீர் கால்வாய் முழுவதும் அடைத்துக் கொண்டதால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் பேவர்பிளாக் கற்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கும் இடங்களில் கழிவு நீ தேங்கி இருப்பதால்
அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் இதனால் கொசுக்கள் அதிகமாக இருப்பதாகவும் இதனால் பகுதிகளில் வசிக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை வைரஸ் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் இரு சக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் வாகான ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியில் வந்துள்ளது.மேலும் நான்காவது வார்டில் உள்ள தெருக்களில் உயர் மின் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் கால்நடைக்கு பயன்படுத்தும் ஆடு மாடுகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என அந்த வழியாக செல்லும் பொதுகளுக்கு விபரீதம் ஏதாவது நடந்து விடுமோ என உயிர் பயத்தில் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
இதேபோல் 4 வது வார்டுக்குட்பட்ட பாலமுருகன் நகரில் உள்ள தெருவில் இது வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப் படாமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் போக்கு கடைபிடித்து வருவதால் குடியிருப்பு வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் தெரு ஓரம் மற்றும் பொது இடங்களில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதும் இல்லாமல் சுகாதார சீர்கேடு நிலவி வருகின்றது. கலைஞர் கால்வாய் கட்டித்தர பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் செவி சாய்க்க வில்லை என்றும் இது சம்பந்தமாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை மாவட்ட ஆட்சியரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஸ்ரீராம் நகர் குடியிருப்பு வாசி சேகர் பொதுமக்கள் நலன் கருதி தெரிவித்துள்ளார்.
மேலும் நான்காவது வார்டில் உள்ள தெருக்களில் உயர் மின் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் கால் நடைக்கு பயன்படுத்தும் ஆடு மாடுகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு விபரீதம் ஏதாவது நடந்து விடுமோ என உயிர் பயத்தில் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
இதேபோல் 4 வது வார்டுக்குட்ப் பட்ட பாலமுருகன் நகரில் உள்ள தெருவில் இது வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப் படாமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் போக்கு கடைபிடித்து வருவதால் குடியிருப்பு வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் தெரு ஓரம் மற்றும் பொது இடங்களில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகின்றது. கலைஞர் கால்வாய் கட்டித்தர பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் செவி சாய்க்க வில்லை என்றும் இது சம்பந்தமாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை மாவட்ட ஆட்சியரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஸ்ரீராம் நகர் குடியிருப்பு வாசி சேகர் பொதுமக்கள் நலன் கருதி தெரிவித்துள்ளார். எது எப்படியோ சோழவந்தான் பேரூராட்சி தேர்தல் நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் மூர்த்தி அவர்கள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளை கண்டுபிடிக்க தனியாக கமிட்டி அமைக்கப்படும் என்றும் பேரூராட்சியில் திமுக சார்பில் தலைவர் நியமிக்கப் பட்டவுடன் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியான அனைத்தும் செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேட்டை கண்டுபிடிக்க கமிட்டி ஏன் அமைக்கவில்லை என்ற கேள்வி தற்போது வரை இருந்து வருகிறது . ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற பழமொழி தற்போது சோழவந்தான் பேரூராட்சிக்கு பொருந்தும். பொறுத்திருந்து பார்ப்போம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் என்ன வாக்குறுதி கொடுக்கப் போகிறார்கள் என்பதை!