மாவட்டச் செய்திகள்

சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக கனிம வளம் கடத்தல்! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை கனிமவளத் துறை அதிகாரியின் மீது நடவடிக்கை பாயுமா!?

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், தோவாளை வட்டம், தோவாளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்

கடந்த (08. 02. 2023) நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் P. N. ஸ்ரீதர் கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு.

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான மனுக்கள்மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் ஒவ்வொரு மாதமும் கடைகோடி
வருவாய் கிராமங்களில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று வருவதாக தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கூறியது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம்
ஈசாந்திமங்கலம் கிராமத்திற்குட்பட்ட
சர்வே எண் 126/1,


ஆனால் இது எல்லாமே ஒரு கண்துடைப்பு நாடகம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம்
ஈசாந்திமங்கலம் கிராமத்திற்குட்பட்ட சர்வே எண் 126/1,சார் அதுல வந்து சர்வே எண்126/1,
126/2,3,4 அரசு அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக கனிம வளங்களை சுரண்டி கடத்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .
அதுவும் குறிப்பாக சுதந்திர தின விழா தினத்தில் காலையிலிருந்து மண் கடத்தியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கனிம வளம் கடத்தலை தடுக்க வேண்டிய

நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம்


நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க. சேதுராமலிங்கம்,தோவாளை வட்டாட்சியர் . வினைதீர்த்தான் மற்றும் கனிமவளத்துறை உதவி ஆணையர் அதிகாரிகள்வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்
அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தும் மாபியா கும்பலிடம் பல லட்சங்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கடத்தலுக்கு உதவியாக இருந்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.
பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் கனிமவளத்துறை உதவி இயக்குனர் மற்றும் தோவாளை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடமும் வருவாய் ஆய்வாளர் இடமும் புகார் மனு கொடுத்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கிராம நிர்வாக அதிகாரியின் துணையோடு கனிம வளம் கடத்தலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பூதப்பாண்டி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகம் மற்றும் பிரேம் தலைமையில் கனிம வளங்களை கடத்திய வாகனங்களை கைப்பற்றி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை காவல்துறை அதிகாரிகள் முன் நின்று கனிம வளம் கடத்தல் செய்பவர்களை பிடித்து கைது செய்துள்ள சம்பவத்தால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர். எது எப்படியோ தொடர்ந்து அரசு அனுமதியில்லாமல் கனிம வளம் கடத்தல் நடந்து வருவதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டு வரும் நிலையில் கனிமவளத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எத்தனை போக்கை கடைபிடித்து வருவது மிக மோசமான செயலாகும் இதற்கு காரணம் அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கனிம வள கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவது தான் நிதர்சனம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆகவே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கனிமவளம் கடத்தல் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button