ஆன்மீகத் தளம்

சுமார் 10 கோடி ரூபாய்க்கு நுங்கம்பாக்கம் கோவில் இடத்தை விற்றவர்கள் மற்றும் கோவில் செயலர் (EO)மீது அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் !??

மோசடி கும்பலிடம் இருந்து மீட்கப்படுமா சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் இடம்!!??

ஒரே இடத்தை இரண்டு நபர்களுக்கு வாடகைக்கு விட்டு நூதன மோசடி!?


நீதி மன்றம் உத்தரவை மீறி அரசு கோவில் நிலத்தை சுமார் 10 கோடி ரூபாய்க்கு விற்ற பரம்பரை அறங்காவலர் மீது இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் !??

குப்பாராவ் என்பவருக்கு 2953 சதுரடி இடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது என தேவஸ்தான வாடகைதாரர் பதிவேட்டில் D.C.B தெரிவிக்கப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு மேலே குறிப்பிட்டுள்ள 2953 சதுர அடி இடத்தில் 1443 சதுரடி இடத்தை அறங்காவலர் மைத்துனர் சொர்ணலிங்கம் ஆக்கிரமித்து இருக்கிறார் என்று தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறை காவல் நிலையம் மூன்று இடங்களிலும் புகார் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த புகார் மீது எந்த வித ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்

இந்து சமய அறநிலைத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு குப்பாராவ் க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

மேற்கொண்ட வழக்கில் தேவஸ்தானம் சொர்ணலிங்கம் என்பவரை 1995 ஆண்டு முதல் வாடகை தாரராக ஏற்றுக் கொண்டதாக தேவஸ்தான பதிவேட்டில் தெரிவித்துள்ளது.

ராதாகிருஷ்ணன் டிரஸ்ட் பங்குதாரர்
N.S. ராஜாபாதர் வள்ளியம்மாள்
சொர்ண லிங்கம்
கல்யாண ராகவன் டிரஸ்ட் பங்குதாரர்

1443 சதுரடி கொண்ட ஒரு இடத்திற்கு (சொர்ணலிங்கம் மற்றும் குப்பாராவ்) இரு வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடப் பட்டதாக சட்டத்துக்குப் புறம்பாக தேவஸ்தனம் தெரிவித்த நிலையில் 2010 ஆம் ஆண்டு சொர்ணலிங்கம் பெயரிலிருந்து வீரகவன் பெயருக்கு பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் போடப்பட்டு நூதன மோசடி செய்து சட்டவிரோதமாக இந்து சமய அறநிலையத்துறையை ஏமாற்றி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி வருகின்றனர் கோவில் இடம் மீட்பு சமூக ஆர்வலர்கள்.

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான கோவில் பரம்பரை அறங்காவலராக1946 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் NS.ராஜாபாதர். 1953 ஆம் ஆண்டு பல்வேறு முறைகேடு செய்ததால் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்பு
மணைவி வள்ளியம்மாள்( 13/12/1960 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்)
பதவியேற்ற நான்கு மாதங்களில் சஸ்பென்ட் செய்யப்பட்டு அதன் பின்பு 19/04/1962 நிரந்தரமாக நீக்கம் செய்யப் பட்டார் என்பதற்கு ஆதாரம் .(W.P.794/1963).

அதன் பின்பு எந்த ஆண்டு எந்த அடிப்படையில் அறங்காவலர் பணி வள்ளியம்மாள் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு அறநிலையத்துறையில் அது சமந்தமாக் எந்த தகவலும் இல்லை!

1969 முதல் 2001 ஆம் ஆண்டு வரை 32 வருடங்கள் பொறுப்பில் இருந்தபோது பல்வேறு முறைகேடுகள் செய்த தன் பெயரில் மறுபடியும் அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.
(வள்ளியம்மாள் அறங்காவலர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஆணை ந .க .எண்13476/1995 . நாள் 31/03/2001. குற்றச்சாட்டு எண் 6. பக்கம் 14/15/16/17 இல் விரிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது.)

மாசிலாமணி மற்றும் சொர்ணலிங்கம் இரண்டு பேரும் பரம்பரை அறங்காவலர் மைத்துனர்கள் .
தேவஸ்தான அலுவலக வாடகைதாரர்கள் ஆக இல்லாத இவர்கள் 2 பேரும் தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு அளித்து பத்திரப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் .

. வள்ளியம்மாள் ராஜாபாதர் அறங்காவலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பொது மைனராக இருந்த கல்யாணராமனின் வயது 18.
1969இல் கல்யாணராமன் மேஜர் ஆகிறார் ஆனால் அவருக்கு எந்தப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.

மத்திய சென்னை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் வள்ளியம்மாள் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் நிலத்தை மோசடி செய்து மாசிலாமணிக்கு பத்திர பதிவு செய்து கொடுக்கிறார்.பதிவு எண்.203/1985
நாள் 09/05/1985.

மாசிலாமணி ஐந்தே மாதத்தில் (18/10/1985 அன்று)மீண்டும் அந்த நிலத்தை வள்ளியம்மாள் மகன் (APVP )பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணனுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கிறார்.பத்திரப் பதிவு எண்504/1985.

சென்னை நுங்கம்பாக்கம் வடக்கு வீதியில் தற்போது உள்ள கதவு எண் பழையது34/1 புதிய எண்22.
ஆனால் பத்திரப்பதிவு செய்தபோது கதவு எண் 16 என்ற இடத்தில் உள்ள 649 சதுரடி கோவில் நிலத்தை முறைகேடாக விற்றுள்ளனர்.
இப்படி முறைகேடாக அகத்தீஸ்வரர் கோவில் நிலத்தை விற்ற மாசிலா மணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்து அறநிலையத்துறை நிர்வாகம் 2017 ஆம் ஆண்டு அவரது மகனுக்கு பரம்பரை அறங்காவலர் பதவி வழங்கியுள்ளது.

வாடகைதாரர் இல்லாத மாசிலாமணியை வாடகைதாரர் என அறநிலையத்துறைக்கு நீதிமன்றத்திற்கும் தவறான தகவல் கொடுத்து நூதன மோசடி செய்துள்ளார்கள்.

இதில் மோசடி செய்து நிலத்தை வாங்கிய ராதாகிருஷ்ணனை பரம்பரை அறங்காவலராக பதவி வழங்கப்படுகிறது.

தற்போது அறங்காவலராக உள்ள ராதாகிருஷ்ணன் சுமார் 10 கோடி மதிப்புள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் நிலத்தை முறைகேடு செய்துள்ளார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

அதேபோல் 15 கிரவுண்ட் வள்ளியம்மாள் ராஜாபாதர் பள்ளி இடம் மீட்கப்பட்டு தற்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் இயங்கினால் அரசுக்கு மாதம் 5 லட்சம் வரை வாடகை மிச்சம்.

25/9 வடக்கு மாடவீதியில் அதன் ஆக்கிரமிப்பில் உள்ள லட்சுமி ஸ்டோர் இருக்கும் 900 சதுர அடி இடத்தை மீட்க வேண்டும்.

ஆணையர் உத்தரவிட்டும் 4 ஆண்டுகளான பெருமாள் கோவில் பட்டாட்சாரி ஆக்கிரமிப்பு செய்துள்ள 6 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இந்த மோசடிக்கு எல்லாம் உறுதுணையாக இருக்கும் கோவில் முன்னாள் செயல் அலுவலர் அருட்செல்வன் தற்பொழுது உள்ள கோயில் செயல் அலுவலர் அண்புக்கரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறங்காவலர் வசிக்கும் ஆயிரத்து 710 சதுர அடி இடத்திற்கு 525 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது.
பொதுமக்களிடம் என்ன வாடகை வசூலிக்க படுகிறதோ அதே வாடகை தான் அறங்காவலர்கள் வசூலிக்கப்பட வேண்டும். ஏனென்றால் பொதுமக்களுக்கும் அரங்காவலருக்கும் ஒரே விதமான வாடகை தான் என்று தகவல் அறியும் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாடவீதியில் கதவு எண் 26 என்ற இடத்தில் 30 ஆண்டுகளாக அறங்காவலர் என் உறவினர் எந்தவித வாடகையும் செலுத்தாமல் ஆக்கிரமித்து இருந்து வருகிறார். (தாய்வீடு உணவகம் பின்புறம்)

எது எப்படியோ தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருவதில் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என்பதுதான் நிதர்சனம்.


நுங்கம்பாக்கம் வடக்கு மாசி வீதி அகஸ்தீஸ்வரர் கோவில் எண் 33 இடத்திற்கு வீரராகவன் இது வரை 7இலட்சம் வாடகை செலுத்தி உள்ளார்.ஆனால் அறங்காவலர் கல்யாணராகவன் குடியிருக்கும் 1752 சதுரடி வீட்டிற்கு 525 ரூபாய் மட்டுமே வாடகை .

பரம்பரை அறங்காவலர் மாசிலாமணி 1443 சதுர இடத்தை விற்று நூதன மோசடி செய்துள்ளார். இது போன்ற பல முறைகேடுகள் நடந்துள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையை ஏமாற்றி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகிறாரா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button